7/04/2010

FeTNA: பறையொலியில் அதிர்ந்த அமெரிக்க நகர் வாட்டர்பெரி

மதுரைவீரன் கதை தெருக்கூத்தில் இடம் பெற்ற மதுரைவீரன் (மெரவணை) ஊர்வலத்தின் போது ஒலித்த பறையொலியில் அமெரிக்க நகர் வாட்டர்பெரி அதிர்ந்து குலுங்கியது. கிட்டத்தட்ட 2200-2400 தமிழர்கள் நேரில் வந்து கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி, இந்த விழாவின் மகுடத்தின் மாணிக்கக்கல்.

நலிந்த கலைஞர்களை, கடும் இடையூறுகளுக்கு இடையே அமெரிக்கா வரவழைத்து. அட்டகாசமானதொரு நிகழ்ச்சியை அரங்கேற்றிய பேரவைக்கு தமிழ்ச் சமுதாயம் எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும். நடிகைகளை அழைத்துக் கூத்தடிக்கிறார்கள் எனச் சொன்னவர்களே, தயை கூர்ந்து இத்திருவிழாவில் அவ்விதமாக எதுவும் நடக்கவில்லை என்பதைத் தெரியப்படுத்திக் கொள்வது எம் கடமை.

மிகவும் உணர்ச்சிப் பூர்வமாக, தமிழ்ப் பண்பாட்டினைப் பறைசாற்றும் விதமாகவே இருக்கிறது இது வரையிலும். உலகின் நாலா புறத்தும் இருந்து வந்த பதிவர்கள் மற்றும் இதழியலாளர்களின் கருத்தினைத் தெரிந்து கொள்வதில் நாட்டமுடன் இருக்கிறேன்.

விழாவில், விமர்சிக்கக் கூடியவையும் எம் பார்வையில் உண்டு. இதழியல்ப் பொறுப்பின் அடிப்படையில் அது குறித்தும் விரிவாக விரைவில் எழுதவிருக்கிறேன்.

விரைவில் இன்னிசைக் கச்சேரி..... தொடரவிருக்கிறது.... 5000 பேர் கொள்ளளவு கொண்ட அரங்கத்தில் எத்துனை பகுதிகள் நிரம்பவிருக்கின்றன என்பதைக் காண ஆவலாயிருக்கிறேன்.

விழா அரங்கின் முக்கிய விருந்தினர் பகுதியில் இருந்து உங்கள் பழமைபேசி!!!

5 comments:

ஜோதிஜி said...

மணிவாசகம்

நேரஞ்சல் ஓலி ஓளி பரப்பைவிட உங்கள் அக்கறையான உழைப்பு மற்றும் வேகம் அதிக பரபரப்பாக வேகமாக இருக்கிறது?

எப்படி முடிகிறது?

தமிழ் பையன் said...

பாரதி, 'தேசியகீதங்கள்: தமிழ்நாடு' கவிக்கோவையில் 'தமிழ்த்தாய்' எனும் தலைப்பிட்டு தமிழ்த்தாய் தன்மக்காளிடம் தன்மனச்சுமையை இறக்குவதாய், 'ஆதிசிவன் பெற்றுவிட்டான்' எனத்தொடங்கும் கவியினை இயற்றினன். அக்கவியை சிரத்தையுடன் படித்தவர்கள், பேதை ஒருவன் எமதன்னையை ஒப்பி,

"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

என இயம்புவதை உணர்வர். அதற்கு எம் தமிழன்னை

'...இந்த வசை எனக்கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!'
என செப்புவள்!

ஆயின், 'மெல்லத் தமிழினிச் சாகும்' எனல் பேதைகள் சொல்தாமே தவிர எம்பாரதியின் கருவில்லை எனக்கொளலாம். இருப்பினும், அறிவுஜீவிகள் எனத் தமக்குத்தாமே புகழாரம் சூட்டும் சிலரோ, "அட பாரதி தமிழின் நிலையெண்ணி பயந்துவிட்டன், அதுதாம் இவ்வகை தன்பயத்தை இப்படி கவியினூடு புனைந்தனன்" என்பர்!

(மூலம்: http://www.facebook.com/topic.php?uid=21253514328&topic=10662)

பழமைபேசி said...

விநாடி வினா நிகழ்ச்சியில் பதிவர், அண்ணன் அப்துல்லா அவர்களது அணி வெற்றி பெற்றது. எப்போதும் போல, என்னைச் சார்ந்த அணி தோல்வியில்....

என்ன கொடுமைடா சாமி?!

லெமூரியன்... said...

பார்க்க பார்க்க பரவசமூட்டும் விதம் செய்திருக்கிறீர்கள் ...!
பாராட்டுக்கள் தோழர்...!

அறிவிலி said...

புத்த்கத்துக்கு வாழ்த்துகள்