7/04/2010

FeTNA: அட்டகாசமான இரண்டாம் நாள்


என்னே ஒரு கூட்டம்? என்னே ஒரு எழுச்சி?? காலை எட்டு மணிக்கெல்லாம் நிகழ்ச்சி குறித்த நேரத்துக்குத் துவங்கியது. அதன் பின்னர், ஏராளமான நிகழ்ச்சிகள் இடம் பெற்றது. அதையெல்லாம் அவதானிக்கக் கூடிய வாய்ப்பு எமக்குக் கிட்டாமற் போனதில் சிறிது ஏமாற்றமே. நான் பல் வேறு பணிகளில் மூழ்கி இருந்தமையே அதற்குக் காரணம்.

நான் கண்டு களித்த தமிழ்த் தேனீ நிகழ்ச்சி... பிரமாதம் பிரமாதம்... சின்னஞ் சிறு குழந்தைகள் என்னமாய்த் தெளிதமிழை நுகர்ந்து இன்புறுகிறார்கள்? நிகழ்ச்சிக்கு பொறுப்பாளரான பொற்செழியனுக்கு வாழ்த்துகள்!!

அடுத்த வந்த இலக்கிய விநாடி வினா, பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள், குழந்தைகளின் நடன நாட்டியம், தவப்பயிற்சி முதலான நிகழ்ச்சிகள் அபாரமாக இருந்தது. தற்போது அரங்கம் நிறைந்த நிகழ்ச்சியாக, தெருக்கூத்து இடம் பெற்று வருகிறது.

6 comments:

Anonymous said...

//தமிழ் இனிச் சாகும் என்றான் பாரதி. பாவம் அவன்!! அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை தமிழர் தரணியெல்லாம் சென்றிடுவார்.... தமிழ் எட்டுத் திக்கும் பரவி விரவும் என்று!!//

பாரதி சொன்னது என்ன? கொஞ்சம் புரிந்து உரைத்தால் நலம். முழுப்பாடலும் இங்கே.

‘புத்தம் புதிய கலைகள் – பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே – அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவும் கூடுவதில்லை – அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்’

என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ!
இந்தவசையெனக் கெய்திட லாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
— மகாகவி.பாரதி

பழமைபேசி said...

அன்பு அனானி,

மிக்க நன்றி.... தவ்றான தகவலைத் திருத்தியமைக்கு நன்றியோ நன்றி!!

Mahesh said...

மணியண்ணே.. .ஆனைக்கும் அடி சறுக்கிடுச்சே :(

நானே இந்த பிழையை பல இடங்கள்ல பலருக்குச் சொல்லி... பாரதியை இம்புட்டு சாதாரணமா சொல்லிப்போட்டீங்களே !!

மத்தபடி போன வருசம் மாதிரி இந்த வருசமும் அப்பப்ப அரங்கத்துல இருந்தே செய்தி அனுப்பறதை படிச்சு பூரிச்சு உக்காந்துருக்கேன் !!

பத்மா said...

நேற்று தமிழ் தேனீ live telecast பார்த்தேன்
ரசித்தேன்
மிகவும் சந்தோஷமாக இருந்தது..
பின் இலக்கிய விநாடி வினாவில் உங்கள் பங்கையும் கண்டு மகிழ்ந்தேன் ..
பழமைபேசி என்று ஊரெங்கும் அறியப்படுகிற மணிவாசகம் என்று உங்கள் பெயர்சொன்னதும் எழுந்த கரகோஷம் உங்கள் வெற்றிக்கு சான்று..
அந்த தாவணி போட்ட மாதவி கலக்கிவிட்டாள்
அவளுக்கு என் special வாழ்த்துக்களை கண்டால் கூறவும்.
வாழ்த்துக்கள்

தேவன் மாயம் said...

அற்புதமாக உள்ளது நண்பரே!!! வாழ்த்துக்கள்!

அபி அப்பா said...

அட! பாரதியின் அந்த வரிகளுக்கு அடுத்த வரி இப்படியா இருக்கின்றது. அது தெரியாம இருந்திருக்கேனே! சபாஷ் அனானி, பழமைபேசி அய்யா இதை வைத்து "தமிழ் இனியும் வாழும்"ன்னு சூப்பர் பதிவு போடுக்க. அனானி அய்யா தங்கள் பெயரை கீழே போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.