7/24/2010

தாய் மண்ணே வணக்கம்

என்ன செய்ய? புரண்டு புரண்டு படுத்துத்தான் பார்க்குறேன். நித்திரை ஒன்னும் வந்த பாட்டக் காணமுங்களே?? ஆமாங்க இராசா... ஆமாங்க... நாம நம்ம ஊருக்கல்ல வந்து இருக்குறோம்? வந்ட்டுப் போய் என்னமோ ஒரு ஆறு மாசந்தான் கண்ணூ ஆவுது....

ஆனா... ங்கொய்யால, ஊரே தலைகீழா அல்ல மாறிக் கிடக்கு? அதான், தூக்கமும் வர்லயா? இங்க இருக்குற‌ பாடு பழமையப் பேசலாமுன்னு வெடியக் காத்தால நாலு மணிக்கு பொட்டியத் தட்டீட்டு இருக்குறங் கண்ணூ...இஃகிஃகி!!

சென்னையில வந்து எறங்குனுதீமு ஒன்னுந் தெரீல... வெளிநாட்டு விமான நிலையத்துல இருந்து, உள்ளூர் விமான நிலையத்துக்கு வந்தா இருக்குது வேடிக்கை.... ஆமாங்க... எடத்துல இருக்குறத வலத்துலயும், வலத்துல இருக்குறத இடத்துலயும் வெச்சி, ஒரே கொழப்ரேசனு வந்துருச்சுங்... புடிமானம் புடி படுறதுக்கு சித்த நேரம் புடிச்சதுங்க....

நாலு மணிகெல்லாம், வெளியூரு போற சனங்க வர ஆரமிச்சிட்டாங்க... என்னா கூட்டம்?? சாரை சாரையாய், சாரை சாரையாய் சனங்க... அடேய், விமானங்களுக்கே இப்படின்னா, தொடர்வண்டிகளுக்கும், பேருந்துகளுக்குமு? நெனச்சே பாக்க முடீல போங்க...

நாம ஊருக்கு வாறப்பவெல்லாம், உள்ளூர் விமான நிலையத்துல இருக்குற காப்பி கடையிலதான் உக்காந்து இருப்பமுங்க... இந்த வாட்டி, அந்தக் கடையில இருக்குற அம்மணி சிரிச்சிட்டே வந்து பழமையக் குடுக்குதுங்கோ... நானுமு செரீன்ட்டு ஒன்னு ரெண்டு பழமைக்கு எசைஞ்சி பேசுனேன்... திடு திப்புனு உங்களுக்கு கல்யாணம் இன்னும் ஆகுலீங்களான்னு கேட்டுச்சு பாருங்க... தூக்கி வாரிப் போட்டுச்சி.... துண்டைக் காணம், அட ச்சீ... நம்ம துவால் துணியக் காணோம், பொட்டிகளைக் காணோம்னு அடிச்சிப் புடிச்சி, வேற எடத்துக்க்கு ஓடியாந்து வந்து ஒக்காந்துட்டேன்.

வெளீல‌, தொலைபேசுற கடை தெறந்த மாதர இருந்திச்சின்னு போனேன்... அங்க பாத்தா, ஒரு பொன்னானுமு ஒரு அம்மணியுமு... அதைப் பார்த்து, அவன் நம்முளைக் குத்தம் செஞ்சவம் மாதர பாக்குறானுங்க... ஈஈ...னு இளிச்சிட்டே நிக்க, அவரு, you waanna make any call அப்படின்னு நல்ல தமிழ்ல கேக்கவும், நாம ஆமான்னு தலையாட்டினோம்... சரி, பேசிட்டுக் காசை வெச்சிட்டுப் போங்கன்னு சொல்லிட்டு, அவ்ரு அவரு பாட்டைப் பாக்க ஆரம்பிச்சிட்டாரு.... நாம, நம்ம பாலாண்ணனை, அதாங்க வானம்பாடிகள் அண்ணனை அழைச்சோம்... மறுக்காவும், அண்ணன் தூக்கத்துல இருப்பாருன்னு வெச்சிட்டு வந்துட்டேன்... ஆனா, அண்ணன் திலும்பவும் அந்த எண்ணுக்கு அழைக்கவும், அவன் வெறுத்துப் போயி, யோவ் நீ காசே தர வேணாம்... போனை மட்டும் வெளில வெச்சிருன்ட்டு, கதவைச் சாத்திகிட்டான்...

அப்புறம், நாம அண்ணங்கிட்ட, நல்லபடியா வந்து சேந்துட்டம்னு சொல்லிச் சொல்லீட்டு இருக்கக்குள்ள, இன்னொருத்தன் வந்தான்.... அந்தப் பொண்ணைக் கொண்டாந்து வுட்டவன் போலிருக்கு... போன் இங்கிருக்கு, பொண்ணை என்ன பண்ணினீங்கன்னு என்னைச் சாய்ப்பலா பாக்குறான்... யோய், அவங்க உள்ள இருக்காங்கன்னு சொல்லிப் போட்டு, பொட்டிகளைத் தள்ளீட்டு நேரா நானு கிங்பிசர் அம்மணிகிட்ட வந்தன்... ஏன் சார் மெரண்டு போய் இருக்கீங்கனு அது கேக்க? என்னடா, இது எழவாப் போச்சுன்னு, நானு ஆங்கிலந் தெரியாத மாதரயே நடிச்சிக் கிடிச்சு, பரிசோதனை எல்லாம் முடிச்சுட்டு உள்ள வந்து உக்காந்துட்டேன்...

சரியா, அஞ்சே முக்கால் மணின்னா, அஞ்சே முக்கால் மணி.... கோயமுத்தூர் வண்டி புறப்பட்டுதுங்க... ஆறே முக்காலுக்கு அந்த நீலகிரி மலையப் பார்த்துட்டே வந்து எறங்குனேன்.... ஆகா.... ஆகா.... சிலுசிலுன்னு அந்தக் காத்து இருக்கே காத்து... கோயமுத்தூர் கோயமுத்தூர்தானுங்... பையத் தூக்கிட்டு நடக்க ஆரம்பிச்சேன்... நெம்ப வருசங்களா வந்து போற எடமாச்சே?? தூக்கத்துல வுட்டாக்கூட சரியா, வெளில வந்துருவேன்... ஆனாப் பாருங்க, 'கரேபுரே'ன்ட்டு ஒருத்தன் வந்து, ஒழுங்கு மரியாதையா இந்த வண்டியில ஏறிப் போங்றான்....

என்னங்கடா இது, நாலு எட்டு நடக்கறதுக்கு ஒரு வண்டியான்னு நெனச்சி ஏறி உக்காந்தா, அது எங்கயோ ஒரு மலை ஒசர கொட்டாய்க்குப் போகுதூ....ஒ, ஓ... அந்தமான் நிகோபாருக்கீன வந்துட்டமான்னு நெனச்சி நிமுந்து பார்த்தா, எழில் கோவை உங்களை வரவேற்குதுன்னு ஒரு பதாகை! டேய்... டேய்... ஆறு மாசத்துல எப்ப்ட்றா உங்களால இதெல்லாம்?? இதே மாதர, இந்த அறுவத்தி மூனு வருசமும் வேலை பார்த்து இருந்தா நம்ம நாடு எப்புடி அல்லாம் இருந்துருக்கும்?? அப்படி ஒரு வேலைப்பாடோட ஒரு புதுக் கொட்டாய்ங்க... அருமையோ அருமை... இன்னும் செம்மொழி மாநாட்டு வேலைப்பாடுகெல்லாம் அதுல இருக்குது...

நாமதான் பொட்டிகளைத் தூக்கிட்டு வந்த மொத ஆளு.... வெளிநாட்டுக்குள்ள காலடி எடுத்து வெச்சா மாதரயே ஒரு இது.... சுத்தவத்தமோ சுத்தவத்தம்.... மச்சாங்காரன் தயாரா வண்டியோட நின்னுட்டு இருந்தான்... வண்டீல ஏறி, வெளீல வாறேன்.... மேன்ஃகாட்டன் நகரத்துக்குள்ள வாற மாதரயே இருக்குங்கோ.... ஆனா, மரங்களைத்தான் மொட்டை போட்டு வுட்டுட்டாய்ங்க.... அவ்வ்வ்....

அவனாசி சாலைச் சந்திக்கு வந்தா, ஒன்னுமே புலப்படலைங்கோ... அந்த சந்தி, எதோ சிகாகோ விமான நிலையம் மாதர இருக்குது.... பளிச்சுன்னு... சுத்த வத்தமோ சுத்த வத்தம்.... டேய்... டேய்.... இதெல்லாம் நெம்ப அதிகம்.... இப்படி ஒரே அடியாவா திருந்துறது??

போனவாட்டி வந்தப்ப, பூசாகோ கலை அறிவியல் கல்லூரி வாயிலை நெனைச்சிக் குறபட்டுகிட்டேன்.... இந்த வாட்டி, அலேக்கா ஒரே தூக்கா தூக்கிட்டாய்ங்க.... அரண்மனை வாசல்மாதர ஆக்கி, மரங்கெல்லாம் போட்டு.... காறித் துப்புற மாதர , குப்பை மேடா இருந்த அரசு பல்நிலை தொழிற்கல்வி நிலையத்துக்கு வந்தது பாருங்க‌ வாழ்வு?? எப்புடி ஆயிப் போச்சு... எதுவும் நிரந்தரம் இல்லையாம்... சொல்லாமச் சொல்றாய்ங்க நம்பாளுங்க...

செரிந்ட்டு, எங்க கல்லூரியப் பார்த்தேன்... அதாங்க, கோவை தொழில்நுட்பக் கல்லூரி... ங்கொய்யால, இன்னும் பலமடங்கு அதிகமா மிடுக்கு கூடி நிக்கிதே?? எதுத்தாப்ல எல்லாம் சுத்தம் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க... ஆனாலும் மாநாடு நடந்த சாயல் இன்னும் தெரீது....

அதிசயம்.... அதிசயம்... கோவையில் அதிசயம்.... எந்தவிதமான பாலத்து மேலயும் ஏறாம, தொடர்வண்டி பாதையையும் ஏறிக் கடக்காம, நான் ஏறுன வண்டி, ஏறி எட்டாவது மணித் துளியில கணபதி வந்துடிச்சி... அது எப்படி? அது எப்படி?? மருத்துவக் கல்லூரிக்குப் பக்கத்துலதாங்க அந்த அதிசயம், நிர்மாண‌ம் ஆகி இருக்கு... வாற ஒன்னாந் தேதி, துணை முதல்வர் மறுபடியும் அங்க எதோ திறப்பு விழாவுக்கு வாறாராமுங்க... என்னை, மெரட்டி, சிறப்பு உள்நிழைவுச் சீட்டுக் குடுத்து, விழாவுக்கு வரச் சொல்லி இருக்காங்க.... இஃகிஃகி... பாத்துட்டு வந்து, வெவரமா எழுதுறேன்....

26 comments:

ஜோதிஜி said...

வருக வணக்கம்.

கயல் said...

வாங்க வாங்க! பயணமெல்லாம் அமோகமா இருந்துச்சா?
ம்ம் உங்க நடையில இப்படி ஒரு இடுகை! அருமை! வந்தது வந்தீக உங்க காளமேக தாத்தாவுக்கு வகையா ஒரு படையல போட்டுடுங்க ஆசானே!

நசரேயன் said...

அண்ணே பத்திரமா போய் சேர்ந்தீங்களா?

நசரேயன் said...

அண்ணே நம்ம ஊரு நேரத்துக்கு முழிச்சிடீங்க போல இருக்கு

ப.கந்தசாமி said...

ஆஜர்

ப.கந்தசாமி said...

பாக்கமுடியுமுங்களா?

வல்லிசிம்ஹன் said...

நீங்க சொல்கிறதைப் பார்த்தால் எனக்கே கோவை வர ஆசையாக இருக்கு.
பழமைபேசியின் மொழிநடை பார்த்து ரொம்ப நாளாச்சு:)
நல்வரவுமா. நல்ல மாற்றங்கள் நிலைக்கட்டும்.

Unknown said...

ஊருக்குப் போனதும் ஊர் பாசை வந்துருச்சிப் போல?

ஆமா அந்த டீக்கடைப் பொம்பளப் புள்ள் - நானும் பலதடவை அந்தப் பக்கம் வந்திருக்கேன். ரெண்டு ஆம்பளப் பசங்கதான் அங்கிட்டு நிப்பாய்ங்க. ஒரு பொம்பளப்புள்ளையைக் கூட பாத்ததில்ல.

இதுல அவுக இவரப் பாத்து கல்யாணம் இன்னும் ஆகலைன்னு கேட்டாகளாம்? நெனப்பப் பாரு. வூட்டம்மணிக்கிட்ட போட்டுக் குடுக்கணும் அப்புறந்தெரியும்

பழமைபேசி said...

//ஆமா அந்த டீக்கடைப் பொம்பளப் புள்ள் - நானும் பலதடவை அந்தப் பக்கம் வந்திருக்கேன். ரெண்டு ஆம்பளப் பசங்கதான் அங்கிட்டு நிப்பாய்ங்க. ஒரு பொம்பளப்புள்ளையைக் கூட பாத்ததில்ல//

அவ்வ்வ்... என்னோட நம்பகத்தன்மையே பாதிக்கப்படுது... யாராவது வந்து சொல்லுங்க சித்த...

Mahi_Granny said...

பழமைத் தம்பி ஊரு பக்கம் வந்ததும் பழமைப் பேச்சு இன்னும் ரொம்பவே அழகாய் வருது. ஊரு கூட புதுசா மாறியிருக்கிறது உங்களுக்காய்

vasu balaji said...

//வெளீல‌, தொலைபேசுற கடை தெறந்த மாதர இருந்திச்சின்னு போனேன்... அங்க பாத்தா, ஒரு பொன்னானுமு ஒரு அம்மணியுமு... அதைப் பார்த்து, அவன் நம்முளைக் குத்தம் செஞ்சவம் மாதர பாக்குறானுங்க...//

அந்த நேரத்துல கெவருமெண்டு ஆசுபத்திரின்னாலும் சரி, 24 மணி நேர ஆசுபத்திரின்னாலும் சரி போனமுன்னா அப்புடித்தான் பார்ப்பாங்க:)

/பொட்டிகளைத் தள்ளீட்டு நேரா நானு கிங்பிசர் அம்மணிகிட்ட வந்தன்... ஏன் சார் மெரண்டு போய் இருக்கீங்கனு அது கேக்க? என்னடா, இது எழவாப் போச்சுன்னு, நானு ஆங்கிலந் தெரியாத மாதரயே நடிச்சிக் கிடிச்சு, பரிசோதனை எல்லாம் முடிச்சுட்டு உள்ள வந்து உக்காந்துட்டேன்... //

பொட்டிகளைத் தள்ளிகிட்டுதானே:))

vasu balaji said...

/ நசரேயன் said...

அண்ணே பத்திரமா போய் சேர்ந்தீங்களா?/

இது வரைக்கும் எத்தனை முறை இங்க வந்திருக்காரு. இப்புடியெல்லாம் கண்ணுல பட்டிச்சா. உங்கள பார்த்த 3 நாளுல என்னல்லாம் ட்ரெயினிங் கொடுத்தீரு:))

பத்மா said...

welcome

பிரபாகர் said...

வாங்கண்ணே! வணக்கம்...

உங்களின் ஓய்வு நேரம் அறிந்து அழைக்கிறேன், பேசுவோம்.

பிரபாகர்...

அபி அப்பா said...

பழமைபேசி அய்யா! உங்க கோவை செம்மொழிமாநாட்டு பதிவிலே கோவை காவல்துறைக்கு பாராட்டு தெரிவிச்சு போட்ட பதிவுக்கு என்னோட பெரிய பின்னூட்டத்தை பாருங்க. இன்னும் ஒரு தடவை படிங்க. அதிலே ஒரு வரி இருக்கும் அதை திரும்ப படிங்க!

ஒரு காசு said...

இப்போவெல்லாம் நீங்க ரொம்ப உணர்ச்சிவசப்படுறீங்க.

Aranga said...

கோவையும் , மக்களும் அன்புடன் வரவேற்க்கிறோம் அண்ணா,

எப்போ எங்கே ?

Thekkikattan|தெகா said...

பழம, கோவையிலயா இப்போ சொல்லவே இல்லை - அனுபவிங்க ராசா.

இந்த நடை படிக்க செமையா இருக்கு. நன்றி!

Unknown said...

கோவையைப் பத்தி கலவரமாகப் படித்துப் படித்து, இப்பத்தான் நாலு நல்ல வார்த்தையை அதுவும் கோவை மொழி நடையிலேயே கேட்டபோது மிக நன்றாக இருக்கிறது.

a said...

அண்ணே : ஊருல நல்ல சந்தோசமா சுத்திட்டு வாங்க..............

Karthick Chidambaram said...

//என்னை, மெரட்டி, சிறப்பு உள்நிழைவுச் சீட்டுக் குடுத்து, விழாவுக்கு வரச் சொல்லி இருக்காங்க.... இஃகிஃகி... பாத்துட்டு வந்து, வெவரமா எழுதுறேன்....//
காத்திருக்கிறோம்

தாராபுரத்தான் said...

வாங்க தம்பீ..வாங்க..வாங்க.

சரண் said...

பாதுகாப்பா ஊருக்குப் போய் சேந்துட்டீங்க.. ரொம்ப மகிழ்ச்சி.. போன உடனே பதிவுகளாப் போட்டுத் தாக்கறீங்க.. ஆச்சரியமா இருக்குங்க..
ஊட்டுல எல்லா நலமாயிருக்காங்களா?
எல்லோரையும் கேட்டதாச் சொல்லுங்க..

நீங்க சொன்ன மாதிரி.. நம்மூர் நெறயா மாறிப்போச்சுங்க.. எழுதுங்க படிக்க ஆர்வமாயிருக்கொம்..

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே ஒரு தொலைபேசியைப் போடுங்க நமக்கு.

ஈரோடு கதிர் said...

||திடு திப்புனு உங்களுக்கு கல்யாணம் இன்னும் ஆகுலீங்களான்னு கேட்டுச்சு பாருங்க..||

அது செரி..

ஏனுங் அந்த அம்மினிக்கு கண்ணுகின்னு தெரியலையாக்கும்

ஈரோடு கதிர் said...

||திடு திப்புனு உங்களுக்கு கல்யாணம் இன்னும் ஆகுலீங்களான்னு கேட்டுச்சு பாருங்க..||

அது செரி..

ஏனுங் அந்த அம்மினிக்கு கண்ணுகின்னு தெரியலையாக்கும்