7/28/2010

யாரந்த, நான் ஊறிய நலஞ்சூடி??

அவதானித்து வந்தாய்
நாளும் நறுக்கென நாலு
நயமாய் நையக் கேட்டாய்
பேதமிலா வாசிப்பாளனுமானாய்
எழுதுவோர் ஊக்கனுமானாய்
ஆழ்ந்து படித்து பண்பனுமானாய்
மெல்ல முகம் காட்டினாய்
வியந்தது அவனிமிகு பதிவர்கூட்டம்
நாளொரு முகம் காட்டினாய்
நாடுவோர் கூட்டம் மிகுந்தவனானாய்
மகுடங்கள் பல சூடினாய்
வெல்லாமகனையும் வென்றாய்

நானூறு...
நான் நானாக நல்லதனமாக ஊறுகிறவனுமானாய்
நற்றமிழ், நல்லூழ், நல்லுயிர்
நலஞ்சூடி நாளும் நாளும் படைத்திடுவாய்!!
வாழ்க, வளர்க, வணங்குகிறோம்!!

10 comments:

ஈரோடு கதிர் said...

வாழ்க வானம்பாடி

a said...

யார சொல்லுறீங்க????

Mahi_Granny said...

வாழ்க வளர்க வாழ்த்துகிறேன்

ஜோதிஜி said...

யார சொல்லுறீங்க????

நறுக்குன்னு நாலு வார்த்தையில சொல்லச் சொல்லட்டுமா?

வாழ்க, வளர்க, வணங்குகிறோம்!

பிரபாகர் said...

ஆசான் வாழ்க! அவரின் சீரிய பணிகள் தொடர்க!

பிரபாகர்...

Jerry Eshananda said...

வாழிய புலவரே,...வாழி...வாலி...வாளி.......

ஆரூரன் விசுவநாதன் said...

வெற்றிகரமாக தன்னுடைய 400ஆவது பதிவை வலையேற்றியிருக்கும் யூத் ஐகான்....வானம்பாடிக்கு வாழ்த்துக்கள்

Unknown said...

வானம்பாடிகள் பாலா சாருக்கு வாழ்த்துகள்

சத்ரியன் said...

பாலா அண்ணாவிற்கு வாழ்த்துகள்

vasu balaji said...

அன்புள்ளங்களுக்கு நன்றி.