7/25/2011

இடை வளையாட்டம்

இன்றைய மாலை, ஒரு மகிழ்வான மாலை. காலியர்வில் (Collierville, TN) ஏரியைச் சுற்றி கிட்டத்தட்ட இரண்டு மைல் தூரம் நல்ல ஓட்டம். ஓடி முடிந்ததும் கிடைக்குற சுகமே சுகம்!!

பிறகு வீட்டுக்கு வந்தா, மகளுக்கு ஒரே கொண்டாட்டம். பிடிபடாம இருந்த, இடையைப் பருதியால் சுற்றும் நயம் பிடிபட்டிடுச்சுன்னு அவங்களுக்கு ஒரே மகிழ்ச்சி! மகிழ்ச்சி!! மகிழ்ச்சி!!!இடையில் வளையமிட்டு, இடையில் பரிதியோ என வியக்கும் வண்ணம் இலாவகமாக ஆடும் ஆட்டம், Hula Hoop எனப்படுகிறது. நீங்களும் நயம் பிடிபடப் பயிற்சி செய்ய வேண்டுமா? இதோ, இக்காணொலியைக் காணுங்கள்.


பயிற்சிக்குப் படியாதது பாழ்!!!