9/02/2009

என்ன, எகத்தாளமா?

வணக்கம் மக்கள்சு! இப்பத்தான் Virginia Beach Towne Centreல இருந்து வர்றேன். நல்ல இந்தியச் சாப்பாடு. பம்பலாக் கூட வேலை செய்யுற பசங்களோட போயிட்டு வந்தாச்சு. ஆனாலும் இந்த பசங்களுக்கு என்னா எகத்தாளம்? கொஞ்சம் உள்ள போனதும், என்னா போடு போடுறாங்க??

அவனுகளோட இருந்துட்டு வந்ததுல, நாம ஊர்ல இருக்கும் போது செய்த எகத்தாளமெல்லாம் ஞாவகத்துக்கு வருது. அப்படித்தான் ஒரு நாள், முருகேசு வாத்தியார், முருகேசு வாத்தியார்னு ஒருத்தரு. அவர் சொன்னாரு, தீட்டத் தீட்டத்தான்டா வைரம். நான் உங்களை எல்லாம் கடுமையா வேலை வாங்குறனேன்னு நினைக்கப்படாதுடா அப்படின்னாரு.

சொல்லி முடிச்சதுதான் தாமுசம், பக்கத்துல இருந்த தீனதயாளன் எழுந்து, தீட்டத் தீட்ட வைரம் சரி, அதுக்கு மேலவும் சொல்லுங்க ஐயா அப்படீன்னான். அவ்ருக்கு மூஞ்சியில ஈயாடலை! அதைப் பாத்த, வாகத்தொழுவு மகாலிங்கன், நாஞ் சொல்றன் கேட்டுக்குங்கன்னு சொல்லி எடுத்து உட்டான்,

தீட்ட தீட்ட வைரம்
சுடச் சுடத் தங்கம்
தோண்டத் தோண்ட கெணறு
பாய்ச்சப் பாய்ச்ச தண்ணி
வெட்ட வெட்ட வாய்க்காலு
புடிக்கப் புடிக்கப் பாத்தி
உழ உழ நிலம்
உடைக்க உடைக்கக் கல்லு
தேய்க்கத் தேய்க்க சொம்பு
காய்ச்சக் காய்ச்ச சாராயம்
கட்டக் கட்டக் கள்ளு
கடையக் கடையக் கீரை
கிண்டக் கிண்டக் களி
ஆட்ட ஆட்ட மாவு
அரைக்க அரைக்க மஞ்சள்
வெளுக்க வெளுக்க வெள்ளை
தரத் தரத் தானம்
வாங்க வாங்கக் கடன்
தூங்கத் தூங்க சொகம்!


உங்க வகுப்புன்னாலே எங்களுக்கு நெம்ப சொகம், நாங்க இப்பப் போலாமா சார் அப்படீன்னான். அவருக்கு வந்தது பாருங்க மம்மேனியாக் கோவம்? மூஞ்சிய திருமூத்திமலைக் கொரங்காட்டம் வச்சிட்டு சொன்னாரு,


“எல்லாரும் இப்ப வீட்டுக்குப் போலாம், மகாலிங்கனும் அவனைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்குற பழமைபேசி ரெண்டு பேரையும் தவுத்து; அந்த ரெண்டு கழுதைகளும் பள்ளிக்கூடம் பூட்ற வரைக்கும் முன்னாடித் திண்ணையில மண்டி போட்டு நிக்கட்டும். நான் மைதானத்துலதான் இருப்பேன், நீங்க போயி போடுங்கடா மண்டிய!”

அப்படின்னு சொல்லிட்டு, அவரு போயிட்டாரு. இந்த மடை மகாலிங்கம் என்னையுஞ் சேத்து மண்டி போட வெச்சிட்டான், பாவி!

ஊருக்குள்ள பார்த்து இருப்பீங்க... அப்படியேப் பொத்தாம் பொதுவா எதனா ஒன்னைச் சொல்லி, உருட்டறதையும் மிரட்டுறதையும். அப்படித்தான் ஒரு நாள், வாகத்தொழுவு வேலூர் பள்ளிக் கூடத்துல, ஓவிய வாத்தியார் சஞ்சீவி சார் வந்து, நீட்டி முழக்கிகிட்டு இருந்தாரு.

அப்ப அவர் சொன்னாரு, சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்! நீங்கெல்லாம் நிறைய வீட்ல பயிற்சி செய்யணும்டா, அப்பத்தான் கைகூடி வரும் அப்படின்னாரு.


அல்லைல இருந்த டீக்கடைத் தங்கவேலன் எந்திருச்சி சொன்னான், சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்... அதுக்கு மேல உங்களுக்குத் தெரியாதுன்னும் எங்களுக்குத் தெரியும், மேல சொல்லுறன் கேட்டுகுங்க,

சித்திரமும் கைப்ப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்
நடையும் நடைப்பழக்கம்; நட்பும்
தயையும் கொடையும் பிறவிக்குணம்!


”உங்க பிறவிக் குணத்தை மாத்துறதுக்கு எதுனா முயற்சி செய்தீங்களா சார்?” அப்படீன்னான். அவ்ளோதான், அவர் வரைஞ்சிட்டு இருந்த ஓவிய நோட்டுப் புத்தகத்தை வேகமாத் தங்கானைப் பாத்து வீசவும், குட்டைத் தங்கான் வாகாக் குனியவும், அந்தப் பொறத்துல இருந்த, ஊர் கணக்குபிள்ளை மக மரகதத்தோட கண்ணைப் பதம் பாத்தது அந்த ஓவிய நோட்டு!

வேற என்ன? சஞ்சீவி சார் நெம்ப நாளா, ஊரைச் சுததி வந்தல்ல பள்ளிக் கூடம் வந்து போனாரு?! உடுமலைப் பேட்டையில இருந்து மனுசன், ஒடுங்கி ஒடுங்கி வந்து போனதைப் பாக்க அவ்ளோ பாவமா இருந்துச்சு.

சரி, சரி, வியாக்கியானம்ன்னா எதோ ஒன்னை சொல்லியாகணுமே? அதென்ன எகத்தாளம்? ஒன்னு சொன்னா, மேல சொன்னா மாதிரி, அதாவது தாளத்துக்கு ஒரு எதிர்த்தாளம்... எகத்தாளம்... கூடக்கூட சொல்லுறதைச் சொல்லுறது, இகதாளம்... இகம்ன்னா உள்... உள்த்தாளம்... அதாங்க, ஜால்ரா ஜால்ரா.... இஃகிஃகி!

சரி, சரி, நீங்க எகத்தாளமும் போட வேண்டாம், இகத்தாளமும் போட வேண்டாம்... நல்லதா நாலு பழமை சொல்லிட்டு போங்க, சரியா?!

26 comments:

Anonymous said...

//தூங்கத் தூங்க சொகம்!//

இது நல்லாருக்கு. ஆனா கடன் வாங்காம இருக்க முடியலையே. வீடு கட்டக்கடன் வாங்கித்தான் ஆகணும்.

பூங்குன்றன் said...

தலைவரே,

நேரம் கிடைக்குறப்பெல்லாம் ஒரு இடுகையைப் போட்டு தாக்குறீங்க. போகுற போக்குல நல்ல செய்தியா சொல்லிட்டு போறீங்க.

சொறிய சொறிய சொர்க்கலோகம்
எரிய எரிய எமலோகம் இதுதான் எனக்கு நினைவுக்கு வருது...

பெருசு said...

எழுத எழுத பதிவு
உதைக்க உதைக்க கழுதை
இனிக்க இனிக்கத் தமிழ்
குடுக்க குடுக்க முத்தம்
இடிக்க இடிக்க மாவு

இதுக்கு மேல எழுதுனா பெருசுக்கு எகத்தாளத்தை பாரும்பீங்க.

இஃகி இஃகி

Mahesh said...

pazhagap pazhagap pazhamai
pEsap pEsa ezhil !!

ஆ.ஞானசேகரன் said...

//வாங்க வாங்கக் கடன்
தூங்கத் தூங்க சொகம்!//

ம்ம்ம் எப்படியோ கலக்குறீங்க நண்பா.. பாராட்டுகள்

அப்பாவி முரு said...

நாலுபேத்த மிதிக்க மிதிக்க ரவுடி,
பஞ்சாயத்து பேச பேச பெரியமனுசன்,
ஓட்டு வாங்க, வாங்க எம்,எல்,ஏ.
அதுகளை மேய்க்க மேய்க்க முதல்வர்.

நாங்களும் எழுதுவோமில...

vasu balaji said...

/நீங்க எகத்தாளமும் போட வேண்டாம், இகத்தாளமும் போட வேண்டாம்... நல்லதா நாலு பழமை சொல்லிட்டு போங்க, சரியா?!/

அதெப்புடி. இதுஞ்சொல்ல வேணாம் அதுஞ்சொல்ல வேணாம்னா பழமைய எப்புடி சொல்லுறது? இப்பிடியெல்லா வாத்திய ரவுசுட்ட பாவம் இங்க தமிழ் சொல்லிகுடுக்குறதுல கழிக்கிறதாக்கு:))

mahe said...

very good blog bro

naanjil said...

எளிமையான ஆனால் அருமையான பாடல்கள்.புதுக்கவிதைகளுக்குச் சவால் விடும் பழங்கவிதைகள்.

உங்கள் இணைய எழுத்துப் பணி வளர வாழ்த்துக்கள்.

அன்புடன் நாஞ்சில் பீற்றர்,

எம்.எம்.அப்துல்லா said...

//காய்ச்சக் காய்ச்ச சாராயம்
கட்டக் கட்டக் கள்ளு

//

இந்த மேட்டர் எனக்கு ரொம்ப புடுச்சுருக்கு :)

எம்.எம்.அப்துல்லா said...

அப்பாவி முரு said...
நாலுபேத்த மிதிக்க மிதிக்க ரவுடி,
பஞ்சாயத்து பேச பேச பெரியமனுசன்,
ஓட்டு வாங்க, வாங்க எம்,எல்,ஏ.
அதுகளை மேய்க்க மேய்க்க முதல்வர்.

நாங்களும் எழுதுவோமில...

//

க்கும்

:)))

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

பழமைபேசி said...

@@சின்ன அம்மிணி

அப்ப தூக்கத்தையும் குறச்சித்தான் ஆவணும்! இஃகி!!

@@பூங்குன்றன்

அரிய சொலவடையைத் தெரிவித்து அசத்தி விட்டீர்கள்; நன்றி!!

@@பெருசு

அஃகஃகா, இரசித்தேன்....

// Mahesh said...
pazhagap pazhagap pazhamai
pEsap pEsa ezhil !!
//

ஆகா, அண்ணன் அதே பத்த்துல போட்டுத் தாக்குறாரு பாருங்க....

@@ஆ.ஞானசேகரன்

எல்லாம் உங்க ஆசிர்வாதந்தான்...

@@அப்பாவி முரு

சின்னாளப்பட்டின்னா சும்மாவா?

@@வானம்பாடிகள்

கண்டுபுடிச்சிட்டீங்களே பாலாண்ணே?

//mahe said...
very good blog bro
//

thank you buddy!

@@naanjil

அண்ணா, தங்களுடைய வாழ்த்துகள் எங்களுக்கு உரம்!

@@எம்.எம்.அப்துல்லா

இஃகிஃகி!

குடந்தை அன்புமணி said...

நல்லாருக்குங்க...

நமக்கு சின்னக்கவுண்டரில் கவுண்டமணி சொன்னதுதான் ஞாபகத்துக்கு வந்தது...

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

வழமை (போல)
அருமை (அதுதான்)
பழமை.
கலக்குறீங்க போங்க.

தங்கராசு நாகேந்திரன் said...

எழுத எழுத பழமை
திகட்ட திகட்ட தந்தாலும்
படிக்க படிக்க இனிமை

ஈரோடு கதிர் said...

//வணக்கம் மக்கள்சு!//

இதென்ன புதுசா சு

//என்னையுஞ் சேத்து மண்டி போட வெச்சிட்டான், பாவி!//

மாப்பு.... ஓ அப்பவே கூட்டணி மண்டி தான்

//குட்டைத் தங்கான் வாகாக் குனியவும், அந்தப் பொறத்துல இருந்த, ஊர் கணக்குபிள்ளை மக மரகதத்தோட கண்ணைப் பதம் பாத்தது //

அட அப்புறம் மரகதா கண்ணு என்னாச்சுங்க் மாப்ள

சும்மா போற போகுல இடுகைல பின்றீங்க மாப்பு

நாகராஜன் said...

கலக்கறீங்க பழமை... அடடடா என்னமா சொல்லறீங்க... நிறைய தெரிஞ்சுக்கறோமுங்க உங்களுடைய இடுகைகளிலிருந்து. தொடர்ந்து கலக்குங்க...

செந்திலான் said...

adada........

அது சரி(18185106603874041862) said...

நீட்ட நீட்ட பாட்டிலு
அடிக்க அடிக்க போத‌
நக்க நக்க ஊறுகா
சுட சுட போண்டா
கொத்த கொத்த புரோட்டா
ஊத்த ஊத்த சால்னா
விழ விழ மண்ணு
உடைக்க உடைக்க பல்லு

விக்க விக்க சொம்பு
முட்ட முட்ட கள்ளு
அடிக்க அடிக்க பொண்டாட்டி
உதைக்க உதைக்க புள்ள‌
திட்ட திட்ட அம்மா
சுண்ட சுண்ட கஞ்சி
கசக்க கசக்க கஞ்சா
ஊத ஊத பீடி
வளர வளர‌ தாடி

கிழிக்க கிழிக்க வேட்டி
அவுற‌ அவுற‌ டவுசர்
கலரு கலரா சரக்கு
விக்க விக்க டாஸ்மாக்கு

அது சரி(18185106603874041862) said...

//
மகாலிங்கனும் அவனைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்குற பழமைபேசி ரெண்டு பேரையும் தவுத்து; அந்த ரெண்டு கழுதைகளும் பள்ளிக்கூடம் பூட்ற வரைக்கும் முன்னாடித் திண்ணையில மண்டி போட்டு நிக்கட்டும். நான் மைதானத்துலதான் இருப்பேன், நீங்க போயி போடுங்கடா மண்டிய!
//

வாத்தியாரு வாழ்க... அவரு ஃபோட்டோ எதுனா இருந்தா அனுப்பி வைங்க...எம்புட்டு செலவானாலும் பரவால்ல....காந்திபுரத்துலயும், உக்கடத்துலயும் ஒரு செல வச்சிப்புடலாம்...

:0)))

பழமைபேசி said...

@@குடந்தை அன்புமணி//
@@ஸ்ரீ
@@தங்கராசு நாகேந்திரன்
@@கதிர் - ஈரோடு
@@ராசுக்குட்டி
@@செந்திலான்

நன்றிங்க!


@@அது சரி

ஏன்? ஏன்??

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...

@@அது சரி

ஏன்? ஏன்??
September 3, 2009 6:16 PM
//

அப்பாவி மகாலிங்கனை கெடுத்து குட்டிசுவராக்கிட்டு இது என்ன கேள்வி?? :0))

பழமைபேசி said...

@@அது சரி

ஆகா, அது சரி அண்ணாச்சி வலையிலதான் இருக்கீங்களா?

அவனுக்கென்ன மகராசனா, ஒன்னுக்கு ரெண்டு மருந்துக் கடை வெச்சிட்டு ஓகோன்னு இருக்கான். வெளியூர் வந்து எம்பொழப்புதான் திரிசங்கு நெலமையில ஊசலாடிட்டு இருக்கு.... அவ்வ்வ்வ்.....

தாராபுரத்தான் said...

திருமூா்த்திமைைல தண்ணி நலல எகத்தாளம்!

cheena (சீனா) said...

ஆகா ஆகா - படிக்கப் படிக்கச் சுகம் - பழமைபேசியின் இடுகைகள் -

எனக்குத் தூங்கத் தூங்க சொகந்தேன்

நல்வாழ்த்துகள்