9/12/2009

Cut And Dried!

வணக்கம் மக்களே! வார நாட்கள்ல கொஞ்சம் அப்படி இப்படித்தான்.... இன்னும் ஓரிரு வாரங்களுக்கு கூடுதலா வேலை பார்க்க வேண்டி வரும்போல இருக்கு, அதான் நம்ம கடைய வார இறுதி நாட்கள்லயாவது திறந்த வைக்கலாமுன்னு...இஃகிஃகி!

போட்டி... போட்டி... போட்டி.... இதுதான் இப்ப ஊரோட நிலைமைன்னு மக்கள் சொல்றாங்க... எனக்குத் தெரியாது... கடைசியா நான் ஊருக்கு வந்தது
Dec 2006, அதுவும் ஓரிரு வாரங்கள் மட்டுமே... அதுக்கு முன்னாடி 2003னு நினைக்கிறேன்... சரியா நினைவுல இல்லை. எனவே தாயகத்தைப் பற்றிய என்னோட கருத்துகள் தவறாகக் கூட இருக்கலாம்.

வெற்றிக்கு நூறு வழிகள்.... தொழிலில் வெற்றி பெறுவது எப்படி? வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி? இப்படி நிறைய நூல்களை நீங்க சந்தையில பார்க்கலாம். சாத்தான் ஓதுற வேதம் போல அவங்க அவங்க கருத்துகளை எழுதி இருப்பாங்க... அது மட்டுமல்லாம, பள்ளிக் கல்வியிலும் அதே நிலைதான். நூற்றுக்கு நூறு வாங்குற மாணவன், ந்ல்லவன்ங்ற மனப்பான்மை வேற?

என்னோட அனுபவத்துல முன்வரிசை மாணவனைவிட, கடைசி வரிசை மாணவந்தான் வாழ்க்கையில ஒளிர்ந்துட்டு இருக்காங்க. ரெண்டு வாரங்களுக்கு முன்னாடி இங்க (U.S) வந்துட்டுப் போனானே என்னோட மாமன் மகன்?! எப்பவுமே அவனைக் குறை சொல்லிட்டே இருப்பாங்க வீட்ல... பத்தும் பத்தாத மதிப்பெண் வாங்கித்தான் படிப்பை முடிச்சான்.

ஆனாப் பய, கெட்டிக்காரன்! சூலூர்க் குளத்துல அவனுக்கு நீச்சல் சொல்லிக் கொடுத்த நாள்ல இருந்து, அவனும் நானும் மாமன் மச்சான்ங்றதை விட, நண்பர்களாத்தான் இருக்கோம். அவன் பனிரெண்டாம் வகுப்புல வெறும் 730 மதிப்பெண் வாங்கினான்னு ஊரே கைகொட்டி சிரிச்சுச்சு. நான் மட்டுந்தான் அவனுக்கு ஆதரவா இருந்தேன். இவன் பெரிய ஆளா வருவான்னு வேற பிரகடனம் செய்தேன்.

அவன் செய்யாத வாலுத்தனம், விடலைத்தனம் கெடையாது. இப்ப அவனுக்கு 25 வயசுதான் ஆகுது. போன வாரத்துக்கு முந்தின வாரம் Congnizantங்ற நிறுவனத்தோட பிரதிநிதியா வந்து, பெரிய வியாபாரத்தை வெற்றி கண்டுட்டுப் போயிருக்கான். அவனோட பேச்சுத் திறமை என்ன? சுதாவாரியா (spontaneous decision making) முடிவை எடுக்குற பாங்கு என்ன??

அவன் பல்வழி அழைப்பினூடாப் பேசிட்டு இருக்கும் போது, மெய் மறந்து அவனையே பார்த்துட்டு இருந்தேன். எப்படி அவனுக்கு இந்த தலைமைப் பண்பு வந்துச்சு? வெற்றி, வளர்ச்சி, சுயமுன்னேற்றம்ன்னு அடுத்தவங்க போடுற தூபத்துக்கு அவன் ஆளாகாததே காரணம்?! போதனை இருக்கலாம்; ஆனா வழிகாட்டுதல்ங்ற பேர்ல, ஒருத்தரை அந்த வழிதான்னு ஏன் கண்ணைக் கட்டி வுடுறீங்க?

இப்பவும் சொல்றேன், 25 வயசுல இந்தப் போடு போடுற அவன், ஒரு நாள் பெரிய நிர்வாகியாக ஆவான். எனக்கு நம்பிக்கை இருக்கு! ஏன்னா, அவன் கட் அண்டு ரைட்டாப் பேசுற ஆள் அப்படீன்னு சொல்ல மாட்டேன். ஏன்னா, அதனோட உட்பொருள் வேற ஆச்சே?

ஆமாங்க, அவன் தெளிவான ஆள்! அவனுக்குப் பிடிச்சது எதுன்னு தெரிஞ்சி, வாழ்க்கைய அனுபவிக்கப் பிறந்தவன். தனக்குப் பிடிச்சதை, முறையான வழியில வாழ்க்கையின அம்சமாக்குறதுதான சிறந்த வாழ்க்கைனு சொல்ல முடியும்?!

சரி, அது என்ன அந்த கட் அண்டு ரைட்டு? இஃகிஃகி, அது cut and right அல்லங்க; cut and dried! அதாவது, மருத்துவத்துக்கு தேவையான வேர்கள், காய்களை வெட்டி உலர்த்தி, உடனடி (ready made) நிவாரணமா வெச்சி இருக்குறதைக் குறிக்கும்படியாப் பரங்கியர்கள் பாவிச்சதுதாங்க இந்த cut and dried! Prepared in advance or prepared and final!!

இதே மாதரத் தமிழ்லயும் நம்ம பெரியவங்க ஒரு வழக்குத் தொடரை உருவாக்கி இருக்காங்கல்ல?!
யாரு, நம்ம சாரதா டீச்சர் மகன் இராமுதானே? அவன் நம்ம பய சார்! அவன் வெட்டிட்டு வாடான்னா, கட்டிட்டு வாற பயலாச்சே?! நாஞ்சொன்னாக் கொலை கூடச் செய்வான்!!

ஆமாங்க, போயி வெறகு வெட்டிட்டு வா போன்னு சொல்லும் போது, வெறகை வெட்டுறது மட்டுமில்லாம, அதுகளை வாகாச் சிறுசு சிறுசா வெட்டிச் சுமக்குற கட்டைகளாக் கட்டுற சமயோசிதந்தாங்க அது. அப்படி நம்மபய, அதாங்க மாமம்மகன் சதீசு இருக்கானே, அவன் வெட்டிட்டு வாடான்னா, கட்டிட்டு வாற பய அவன்!20 comments:

பழமைபேசி said...

இல்ல, எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க இப்படி?---------- Forwarded message ----------
From: wanitaefua //joy_wemba@yahoo.com//
Date: Sat, Sep 12, 2009 at 3:28 PM
Subject: Hello

My Dear,

My name is wanita i saw your profile here (info.scrapur.com) today and became intrested in you,i will also like to know you more,and i want you to send a mail to my email address so i can give you my picture for you to know whom l am. i believe we can move from here.I am waiting for your mail to my email address above.miss wanita(Remeber the distance or colour does not matter but love matters alot in life) Please reply me , i will like to be your friend i know you will alos like to become my friend have a nice day and god bless you

vasu balaji said...

:)) இதான் வெட்டிட்டு வான்னா கட்டிகிட்டு வாரதோ?

பெருசு said...

மாமோய் , அக்கா வேற வூட்லே இல்லே
என்ன வெளாட்டு இது.

வனிதைகளிடன் சூதானமா இருக்கவும்.

பெருசு said...

மாமோய் , அக்கா வேற வூட்லே இல்லே
என்ன வெளாட்டு இது.

வனிதைகளிடன் சூதானமா இருக்கவும்.

பெருசு said...

மாமோய் , அக்கா வேற வூட்லே இல்லே
என்ன வெளாட்டு இது.

வனிதைகளிடன் சூதானமா இருக்கவும்.

பழமைபேசி said...

//வானம்பாடிகள் said...
:)) இதான் வெட்டிட்டு வான்னா கட்டிகிட்டு வாரதோ?
//

வாங்க பாலாண்ணே, அதேதானுங்....

// பெருசு said...
மாமோய் , அக்கா வேற வூட்லே இல்லே
என்ன வெளாட்டு இது.

வனிதைகளிடன் சூதானமா இருக்கவும்.
//

ஆமாங்க இராசு...பாத்துதான் இருக்கோணும்.....

வடுவூர் குமார் said...

யாரிடம் என்ன திறமை இருக்கு என்று அவருக்கே தெரியாமல் திடிரென்று வெளிப்படுவதை இயற்கையின் மாயம் என்பதை தவிர வேறென்ன சொல்வது!!
Cut and Dried - இப்போது தான் தெரிந்துகொண்டேன்.

பழமைபேசி said...

//வடுவூர் குமார் said...
யாரிடம் என்ன திறமை இருக்கு என்று அவருக்கே தெரியாமல் திடிரென்று வெளிப்படுவதை இயற்கையின் மாயம் என்பதை தவிர வேறென்ன சொல்வது!!//

வாங்க ஐயா, வணக்கம்! எங்க நீண்ட நாட்களா இந்தப் பக்கம் வரவே இல்லைங்களே?

//Cut and Dried - இப்போது தான் தெரிந்துகொண்டேன்.
//

இஃகி, அதுக்குத்தானுங்களே இடுகை?!

Anonymous said...

பதிவை விட முதல் பின்னூட்டம் சூப்பர் :)

ஈரோடு கதிர் said...

//அவன் பல்வழி அழைப்பினூடாப் பேசிட்டு இருக்கும் போது, மெய் மறந்து அவனையே பார்த்துட்டு இருந்தேன். //

இதுபோல் நானும் சிலரை பார்த்துக்கொண்டே இருக்கிறான்..

(ஆனா... ஒரு பய கூட நம்மள இப்படி பார்க்கமாட்டேங்கிறாங்க...)

தலைமைப் பண்பு என்பது மிகப் பெரிய கலை...

நல்ல இடுகை மாப்பு

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பழமை அண்ணே, நீங்க சொல்றது உண்மை தாங்க. முதல் வரிசை ஆட்கள விட கடைசி வரிசை ஆட்கள் பலர் திறமையா இருக்காங்க. அவங்க வாழ்க்கையக் கத்துக்கறதே இதுக்கு காரணமுங்க.

மூணு வருசமாச்சா ஊருக்குப் போயி? இங்க துபாயிக்குப் பக்கம்ங்கறதால மூணு மாசத்துக்கு ஒரு வாட்டி போயிடறதுங் ஊருக்கு.

அட, சூலூர் குளத்தேரில எங்க அத்த பசங்களோட நீச்சலடிச்ச ஞாவகத்தக் கிளப்பீட்டீங்க :))

குடுகுடுப்பை said...

என்னோட அனுபவத்துல முன்வரிசை மாணவனைவிட, கடைசி வரிசை மாணவந்தான் வாழ்க்கையில ஒளிர்ந்துட்டு இருக்காங்க//

என்னைப்பத்தி எழுதப்போறீங்கண்ணு வாயைப்பொளந்துகிட்டு உட்காந்திருந்தா கவுத்துபுட்டீங்களே சித்தப்பு.

மார்க்கெல்லாம் சும்மா பழமையாரே

குடுகுடுப்பை said...

உங்க மாமன் மகனுக்கு ஸ்பைக்கர் ஜீன்ஸ் கெடச்சுதா?

துபாய் ராஜா said...

//வெட்டிட்டு வாடான்னா, கட்டிட்டு வாற = வெறகு வெட்டிட்டு வா போன்னு சொல்லும் போது, வெறகை வெட்டுறது மட்டுமில்லாம, அதுகளை வாகாச் சிறுசு சிறுசா வெட்டிச் சுமக்குற கட்டைகளாக் கட்டுற சமயோசிதந்தாங்க அது//

//Cut and Dried - மருத்துவத்துக்கு தேவையான வேர்கள், காய்களை வெட்டி உலர்த்தி, உடனடி (ready made) நிவாரணமா வெச்சி இருக்குறதைக் குறிக்கும்படியாப் பரங்கியர்கள் பாவிச்சதுதாங்க இந்த cut and dried! Prepared in advance or prepared and final!!//

தமிழ்,ஆங்கில சொற்களின் விளக்கங்கள் அருமை.

வாழ்த்துக்கள் பழமையாரே...

பழமைபேசி said...

//சின்ன அம்மிணி said...
பதிவை விட முதல் பின்னூட்டம் சூப்பர் :)
//

இஃகிஃகி!

@@கதிர் - ஈரோடு

வாங்க மாப்பு... வாழ்வு நல்லாப் போயிட்டு இருங்குங்களா?

@@ ச.செந்தில்வேலன்

வாங்க தம்பி, கொடுத்து வச்சவங்க நீங்க....

@@குடுகுடுப்பை

வாங்க அண்ணே, அன்பு மகள் ஹரிணிய இந்த சித்தப்பா ரொம்பவும் கேட்டேன்னு சொல்லுங்க....

@@துபாய் ராஜா

நன்றிங்க!

இராகவன் நைஜிரியா said...

ஐயா உங்களுக்கும் இது மாதிரி மெயில் வருதா... ம்.. காலம் கெட்டு கிடக்கு.. உங்களுக்கு செல்லத் தேவையே இல்லை... சூதனமா இருக்கணும் இல்லாட்டி காணம போயிடுவோம் போலிருக்கு..

cut and dried - அற்புதமான விளக்கம்.

தலைமை பண்பு என்பது ரத்தத்தில் ஊற வேண்டும். அது எல்லோருக்கும் வந்துவிடாதுங்க. வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி இருக்க வேண்டும். அப்போது பல விசயங்கள் தானாகவே வந்து விடுங்க.

எம்.எம்.அப்துல்லா said...

//என்னோட அனுபவத்துல முன்வரிசை மாணவனைவிட, கடைசி வரிசை மாணவந்தான் வாழ்க்கையில ஒளிர்ந்துட்டு இருக்காங்க.


//

நான் ஓளிர்கிரேனான்னு தெரியலை.ஆனால் நாம் கடைசி வருசை மாணவன் :)

பழமைபேசி said...

@@இராகவன் நைஜிரியா

நன்றிங்க ஐயா!

@@எம்.எம்.அப்துல்லா

ஆகா அண்ணே, நல்லா இருங்க... நல்ல மனிதர்ன்னு பெயர் எடுத்து மனிதனா இருக்கிற உங்களுக்கு நிரந்தர ஒளிவட்டம் இருக்குன்னு ஊருக்குள்ள பேசிகிடுறாங்க....

Naanjil Peter said...

தம்பி மணி

உங்கள் மாமா பையன் இன்னும் சாதனைகள் பல புரிந்து வளர வாழ்த்துக்கள்.

அன்புடன்
நாஞ்சில் பீற்றர்

பழமைபேசி said...

//naanjil said...
தம்பி மணி

உங்கள் மாமா பையன் இன்னும் சாதனைகள் பல புரிந்து வளர வாழ்த்துக்கள்.

அன்புடன்
நாஞ்சில் பீற்றர்
//

நன்றிங்க அண்ணா!