9/14/2009

மீண்டு(ம்) வருவேன்!

அன்பான வாசகர்களுக்கும், சக பதிவர்களுக்கும், நண்பர்களுக்கும் வணக்கமும் நன்றியும்! ஒன்னரை ஆண்டுகட்கும் மேலாக, கிட்டத்தட்ட 450+ இடுகைகள் இட்டுவிட்டேன். இனியும் இடுவதற்கு ஆவலும், உட்பொருளும் இருக்கிறதுதான். ஆனால் செய்கிற வேலையின் தன்மையானது மாறி பொறுப்பும் கூடி விட்டது. மேலும் ஓரிரு மாதங்களில் இந்தியப் பயணமும் மேற்கொள்ள இருக்கிறேன்.

மேற்கூறிய அனைத்தையும் கருத்தில் கொண்டு, தற்காலிகமாகக் கடையை மூடிவிடுவது எனும் நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறேன். வழமையாக நமது கடைக்கு வந்து செல்லும் வாசகர்கள் கணிசமாக இருக்கிறார்கள் என்பதை யாமறிவோம். அவர்களுக்கு எமது மனப்பூர்வமான நன்றிகள்!

இரமலான், தீபாவளி மற்றும் நத்தார் தினவிழா நல்வாழ்த்துகள்! பொலிவுடன் கூடிய ப்ழமைபேசி, மீண்டு(ம்) வருவான், வருவான், வருவான்!!!

17 comments:

எம்.எம்.அப்துல்லா said...

take care anna, come back as you wish :)

ஆரூரன் விசுவநாதன் said...

விடியல் விரைவாய் வரும் என்று நம்புகிறேன்.
ஆவலுடன்....

அன்புடன்
ஆரூரன்

ஈரோடு கதிர் said...

இந்தியா வர்றீங்களா மாப்பு!!!

வாங்க வாங்க

Mahesh said...

அன்பு மணியாரே.... பணிகளை செவ்வனே முடிச்சுட்டு, பயணங்களையும் சிறப்பா முடிச்சுட்டு நல்ல படியா திரும்ப வாங்க.... வலை எங்கியும் போயிடாது... நாங்களும் எங்கியும் போயிட மாட்டோம்...

வாழ்த்துகள் !!

க.பாலாசி said...

மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்....இந்திய வருகையையும்தான்....

தங்களின் பணிகளை செவ்வனே செய்துமுடித்து விரைவில் பதிவுலகம் திரும்ப வாழ்த்துக்கள் அன்பரே....

vasu balaji said...

சாதனையாளனாய் மீண்டும் வருக. வாழ்த்துகள்.

Unknown said...

//மேற்கூறிய அனைத்தையும் கருத்தில் கொண்டு, தற்காலிகமாகக் கடையை மூடிவிடுவது எனும் நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறேன்.//

இந்தியா போயி என்ஜாய் பண்ணுங்க சார்!
இப்படி நீங்க கடைய மூட கூடாது ..அப்ப அப்ப கொஞ்சம் எழுதுங்க ;-)

-வெங்கி

இராகவன் நைஜிரியா said...

உங்கள் வரவை ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டு இருப்பேன்..

அது சரி(18185106603874041862) said...

//
மேற்கூறிய அனைத்தையும் கருத்தில் கொண்டு, தற்காலிகமாகக் கடையை மூடிவிடுவது எனும் நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறேன்.
//

என்ன இது...அநியாயமா இருக்கு....ஆணி அதிகமாச்சின்னு வீக் என்ட்ல தூங்கறது, குடிக்கறதை குறைச்சிக்கிட்டு எழுதலாம்ல???

மாசக் கணக்கெல்லாம் வேண்டாம்...வாரம் ஒண்ணு எழுதுங்க...

அப்பாவி முரு said...

அண்ணே கவனமாக வேலைகள் செய்து வாழ்வில் மேலும் முன்னேற வாழ்த்துகள்.

(ஆகா, அருமையான சந்தர்ப்பம். இந்த இடைவெளியை பயன்படுத்தி நாம வலையுலகத்துல வளர்ந்திடனும். டேய் அப்பாவி, கேப்ப புள் பண்ணு)

உடம்ப பாத்துகங்கண்ணே...

பழமைபேசி said...

நன்றி மக்களே!

//மாசக் கணக்கெல்லாம் வேண்டாம்...வாரம் ஒண்ணு எழுதுங்க...//


கடுமையான வேலைங்க அண்ணாச்சி!

நாலு பேர் நாலு விதமாப் பேசுவாங்க!

முளைச்சு மூணு இலை விடலை!!

அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை!!!

இதுகளுக்கு யார் சரியாna விளக்கம் கொடுத்தாலும் அவங்களுக்கு பரிசு காத்து இருக்கு!

தொடருங்கள்.......

குடுகுடுப்பை said...

அண்ணே இந்தியா போகும்போது நம்ம தமிழ்க்கடவுள் முருகனுக்கு ஒரு மொட்டைய போட்டுட்டு வாங்க

சுந்தர் said...

விரைவில் வருக ! தமிழமுதம் தருக !!

தீப்பெட்டி said...

சீக்கிரம் வாங்க..

காத்திருக்கிறோம்..

வாழ்த்துகள்..

Sabarinathan Arthanari said...

பணி சிறக்க வாழ்த்துக்கள்

திரும்ப வரும்போதும் ஆதரவு பலமாக தான் இருக்க போகிறது.

Unknown said...

Your write and maintain an "AGMARK" blog. It is always a very interesting read. We will wait for you until you take care of your commitments and travel.

Best wishes,

நாகராஜன் said...

சீக்கிரம் திரும்பி வாங்க பழமை/மணி... இல்லாட்டி எங்களுக்கு எல்லாம் ரொம்ப சிரமம்...