9/19/2009

இன்னும் மொளச்சி மூனு எலை விடலை?!

மக்களே, ஒரு வாரமாச்சு பாருங்க... அலைபேசி, மின்னஞ்சல்...இலத்வி(Latvia)யால இருந்து ஒரு தமிழன்பரின் தொலைபேசி... ஆகா, நமக்கும் நாலு பேர் இருக்காங்கங்றது தெரிஞ்சது போங்க... நன்றி மக்களே! ..க்கும்! வேறென்ன சொல்ல முடியும்?

எல்லாம் ஒரு காரியமாத்தான் இந்த இடுகை! ஆமாங்க, அடுத்த வாரம் Washington D.C வரச் சொல்லி அழைப்பு விடுத்திருக்காங்க! ஆமா இவரு பெரிய்ய இவரு, இவருக்கு ஒபாமாகிட்ட இருந்து அழைப்பு வருதாக்கும்னு நீங்க நினைக்கலாங் கண்ணுகளா!

உலகத்துக்கு ஒரு தலைவர் ஒபாமாவா இருக்கலாம்; ஆனா இந்தத் தமிழனுக்கு ஒரு அன்பு ஆசான், அந்த Washington D.C’ல இருக்காரே? அவர் இந்த எளியவனையும் மதிச்சு, அங்க நடக்க இருக்கிற ஒரு விழாவுக்கு வரச் சொல்லி இருக்காரல்ல?! அதுக்கு நாமளும் போகப் போறம்ல?!


அதான் இடுகையில சொல்லி வெச்சா, நம்ம வாசிங்டன் அன்பர்களையும் அப்படியே ஒரு எட்டு சந்திச்சிட்டு வரலாமுன்னு?! இஃகிஃகி!! ஆம் நண்பர்களே, வருகிற செப் 26, 27ல Washington D.C வரப் போறேன், அப்ப முடிஞ்சா சந்திப்போம்!

இன்னும் மொளச்சி மூனு எலை விடலை, இவனுக்கு இருக்குற லொள்லைப் பாரு! இப்படியும் நாலு பேர் நாலு விதமாப் பேசலாமா இருக்கும். ஆனா, அதென்ன அந்த மொளச்சி மூனு எலை விடுறது? நாங்க திருப்பிக் கேப்பமில்ல?

பொதுவா நம்ம மண்ணுல விழுற வித்தானது, இடப்பக்கமும் வலப்பக்கமும் ஒரு சிறு இலையத் துளிர்த்திட்டு முளைக்கும். அது முளைப்புக்கான அறிகுறி! அதுவே, மூன்றாவதா ஒரு இலையத் துளிர்க்கும் போது அந்த வித்தானது, வளரத் துவங்கி விட்டது அப்படிங்றதுக்கான ஒரு அறிகுறி.

ஆக அதை ஒப்புமைப்படுத்தி, இன்னும் இவன் வளரவே ஆரம்பிக்கலை; அதுக்குள்ள இவனுக்கு இவ்வளவு அலம்பலான்னு கேட்கிற மரபுத் தொடர்ந்தாங்க இது! அதை விட்டுப்பிட்டு, அதென்ன அந்த மூனு இலைகன்னு மொடக்கடி பேசப்படாது.

அது சரி, அப்ப அந்த நாலு பேர் நாலு விதமாப் பேசுறதுங்றது? மனிதனின் இயல்பை வெச்சி நாலு விதமாப் பிரிச்சாங்க பெரியவங்க. அறிவார்ந்த உழைப்பாளி, அறிவு குறைந்த உழைப்பாளி, அறிவார்ந்த சோம்பேறி, அறிவு குறைந்த சோம்பேறின்னு நாலு வகை. ஆக இந்த நாலு பேர் பேசுறதும் நினைப்பதும் அவங்களைப் போலவே மாறித்தான் இருக்கும். அதாங்க, நாலு பேர் நாலு விதமாப் பேசுறது!

சரி அப்ப, நீங்களும் அந்த நாலுல எதோ ஒரு விதமாப் பேசிட்டுப் போங்க சித்த! அஞ்சாவதா, பேசாமத்தான் போவேன்னு பிடிவாதமா நீங்க இருந்தா, அதுக்கு நான் என்னத்தைச் செய்துட முடியும்? அப்படியெல்லாம் சொல்லிட மாட்டேங் கண்ணுகளா! நீங்க எதைச் செய்தாலும் சம்மதமே, நன்றி!

22 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பழமையண்ணே, படங்காட்டீட்டீங்க :) மூனு இலை, நாலு விதமாக்கு அர்த்தம் அருமை.

ஆமா நீங்க ஓபாமாவ சந்திக்கப்போறீங்க தானே? ஆமாம்னு சொல்லுங்க நம்ம உடுமலை, பொள்ளாச்சி வட்டாரம்பூர சேதியச் சொல்லீருவோம் :)

ஈரோடு கதிர் said...

//இன்னும் மொளச்சி மூனு எலை விடலை?! //

தலைப்ப பார்த்தவுடனே பயபுள்ள நம்மளத்தான் திட்டுதோன்னு பயந்தே போயிட்டேன்.

மாப்பு நீங்கதான் ஆறு அடிக்கு வளந்திட்டீங்களே!
இனிமே ஒரு பய மூனு எலை, நாலு வார்த்தையினு பேசிட முடியுமா

ஒபாமா சந்திச்சி கலக்கிட்டு வாங்க மாப்பு

வாழ்த்துகள் மாப்பு

ப்ரியமுடன் வசந்த் said...

சரியான விளக்கம் சார்

அப்படியே ஒபாமாவ விசாரிச்சதா சொல்லிப்போடுங்...

வடுவூர் குமார் said...

மொளச்சி மூனு இலை - இதெல்லாம் வீட்டை சுற்றி மண் இருக்கிறவர்களுக்காவது ஓரளவு தெரிய வாய்ப்பு இருக்கு,இப்பதான் வீட்டை சுற்றி கான்கிரீட் போட்டு மூடிவிடுகிறோமே அப்புறம் எங்க விதையை போடுவது முளைப்பதை பார்ப்பது?
பயணம் நலமாக அமையட்டும்.

தீப்பெட்டி said...

நல்ல விளக்கம் பாஸ்..

வாஷிங்டன் போய் விழாவை சிறப்பித்து வாருங்கள்..

vasu balaji said...

நல்ல விளக்கம். வெற்றிகரமா போயிட்டு வாங்க. அன்பு ஆசான் யாருன்னு சொல்லவே இல்லையே.

நிகழ்காலத்தில்... said...

கதிர் - ஈரோடு

\\மாப்பு நீங்கதான் ஆறு அடிக்கு வளந்திட்டீங்களே!
இனிமே ஒரு பய மூனு எலை, நாலு வார்த்தையினு பேசிட முடியுமா\\

:))))

இராகவன் நைஜிரியா said...

ஒன்னுமில்லாத நானெல்லாம் படம் காண்பிக்கும் போது, நீங்க காண்பிப்பதில் தப்பே இல்லை.

வாஷிங்டன் பயணம் சுகமாக அமைய வாழ்த்துகள்.

பழமைபேசி said...

//ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
பழமையண்ணே, படங்காட்டீட்டீங்க :)
//

ச்சுப்... அதெல்லாம் கண்டுக்கப்படாது பாருங்க...

நன்றிங்க தம்பி!

பழமைபேசி said...

//கதிர் - ஈரோடு said...
//இன்னும் மொளச்சி மூனு எலை விடலை?! //

மாப்பு நீங்கதான் ஆறு அடிக்கு வளந்திட்டீங்களே!
இனிமே ஒரு பய மூனு எலை, நாலு வார்த்தையினு பேசிட முடியுமா
//

‘பனை மரமாட்டம் நெடு நெடுனு ஆறடி ஆள் மட்டும் வளந்தாப் போதுமா? போடுற சோத்துல அறிவும் வளரணும்.... எனையத்த குடியானவனைப் பாரு, காலையில எந்திரிச்சதும் பால் கறக்கப் போறானுவ... ஒன்னை மாதிரியா, பொச்சுக்கு வெயில் வாற வரைக்கும் தூங்கீட்டு” இப்படியெல்லாம் உங்க அத்தை வெய்யுறதை... அதாங்க எங்கம்மா வெய்யுறதை எல்லாம் கிளறி வுடுறீங்களே மாப்பு? அது சரி, ஒரு ஊட்டு ஆளுகளுக்கு ஒரே வாடிக்கைதான இருக்கும்?!

பழமைபேசி said...

//பிரியமுடன்...வசந்த் said...
சரியான விளக்கம் சார்
//


நன்றிங்க தலை!

பழமைபேசி said...

//வடுவூர் குமார் said...//

நன்றிங்க, நீங்க சொல்றதுஞ் சரிதான்!

பழமைபேசி said...

//தீப்பெட்டி said...
நல்ல விளக்கம் பாஸ்..

வாஷிங்டன் போய் விழாவை சிறப்பித்து வாருங்கள்..
//

தீப்பெட்டியார் வாங்க, கண்டு கண நாளாயிட்டது...

பழமைபேசி said...

//வானம்பாடிகள் said...
நல்ல விளக்கம். வெற்றிகரமா போயிட்டு வாங்க. அன்பு ஆசான் யாருன்னு சொல்லவே இல்லையே.
//

அவ்வ்வ்வ்வ்.... பாலாண்ணே, உயர்திரு. குழந்தைவேல் இராமசாமி அவர்கள்தானுங்க... உங்களுக்கு விசியம் தெரிஞ்ச அல்ல இருக்கணும்?! நான் மொதல்லயே இடுகையில சொல்லி வெச்சனே?! இஃகிஃகி!

பழமைபேசி said...

@@நிகழ்காலத்தில்...

திருப்பூர்காரருக்கு ஒரே சிரிப்பு....

பழமைபேசி said...

//இராகவன் நைஜிரியா said...

வாஷிங்டன் பயணம் சுகமாக அமைய வாழ்த்துகள்.
//

வணக்கம், நன்றிங்க ஐயா!

ஆரூரன் விசுவநாதன் said...

ஆஹா......வந்துட்டருய்யா...
..வந்துட்டாரு


வாங்க சாமி.....வாங்க.....

ஆடுன காலும், பாடுன வாயும் சும்மாருக்காதுடான்னு அப்புச்சி சொல்லுவாரு.... சரிதான் போல....எப்பொழுதும் போல் அருமை.

தொடருங்கள்

வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்

பழமைபேசி said...

@@ஆரூரன் விசுவநாதன்

இஃகிஃகி!

புலவன் புலிகேசி said...

நல்ல அருமையான விளக்கம். நன்றி.........

பழமைபேசி said...

//புலவன் புலிகேசி said...
நல்ல அருமையான விளக்கம். நன்றி.........
//

முதல் வணக்கம்!

சுப.நற்குணன்,மலேசியா. said...

இன்னும் மொளச்சி மூனு எலை விடலை..

சுவைமிகு இடுகை..!

நாலு பேரு நாலு விதமா பேசறது..

சுருக்கமான தொடுகை..!

பழமைபேசி said...

// சுப.நற்குணன் said...
இன்னும் மொளச்சி மூனு எலை விடலை..

சுவைமிகு இடுகை..!
//

நன்றிங்க!