9/08/2009

09/09/09

09/09/09

அறம் அறம் என்று வாயால் பேசலாம்; கையால் எழுதலாம். பேச்சும் எழுத்தும் அறமாகப் பரிணமித்தல் அரிது. அறம் என்பது ஒவ்வோர் ஆடவர், மகளிர் உள்ளத்திற் படிந்து, குருதியிற் றோய்ந்து, வாழ்வில் மலர்தல் வேண்டும்.

மக்கள் வாழ்வு, அறத்தை அடிப்படையாகக் கொண்டெழுந்து நிலவுமேல், உலகிடை அறக்கடவுளுக்கும் இடனுண்டாகும். அவ்வறமில்லா வாழ்வில் அமைதியாதல் அன்பாதல் இன்பமாதல் எங்கனம் செழிக்கும்?

பத்திரிகைகளால் உலகம் அரிக்கப்பட்டு வருவதைப் பற்றியும் பிற கொடுமைகளைப் பற்றியும் இன்று இவண் விரிக்கிற் பெருகும். இதுபோழ்து பொதுவாழ்வில் தலைப்படுவோர் உள்ளும், பொறாமை அவா முதலியன எழுந்து ஆடல் புரிகின்றன.

இவ்வேளையில் இலைமறை காயென ஆண்டாண்டுள்ள அறவோர் அறநிலை ஓம்ப முற்படல் வேண்டும். அற நிலைக்கு மாறுபட்டோர் சுமத்தும் பழிகளுக்கு அஞ்சாது கடனாற்றும் மன உறுதி அன்னார்க்கிருத்தல் வேண்டும். ஒரு சிறு அறக் கூட்டத்தார், பிறர் புகழ் இகழ் ஒன்றையுங் கருதாது அறத்தொண்டாற்ற எழுவாராக! அன்னார் முயற்சிக்கு ஆண்டவன் துணை செய்வானாக!!

திரு. வி. கலியாணசுந்தரன்
02-02-22.

16 comments:

அப்பாவி முரு said...

22-இல் வாழ்ந்த மக்கள்,

சாப்பிட்ட உணவு முறையில் நான் இப்போது சாப்பிடுவதில்லை.,

அணிந்த உடை அமைப்பு படி நான் இப்போது அணிவதில்லை.,

ஊருக்குள் வாழந்த படி நான் இப்போது வாழவில்லை...
என இத்துனை வேற்றுமை வந்தபின்னரும், என்னை மட்டும் ஏன் அன்று 2/2/22-இல் சொன்ன படி வாழ கேட்க்கிறீர்?

vasu balaji said...
This comment has been removed by the author.
ஈரோடு கதிர் said...

//அற நிலைக்கு மாறுபட்டோர் சுமத்தும் பழிகளுக்கு அஞ்சாது கடனாற்றும் மன உறுதி அன்னார்க்கிருத்தல் வேண்டும்//

மாப்பு...

03-03-33 லும் இதையேதான் எதிர்பார்க்க வேண்டுமா?

vasu balaji said...

/பத்திரிகைகளால் உலகம் அரிக்கப்பட்டு வருவதைப் பற்றியும் பிற கொடுமைகளைப் பற்றியும் இன்று இவண் விரிக்கிற் பெருகும். இதுபோழ்து பொதுவாழ்வில் தலைப்படுவோர் உள்ளும், பொறாமை அவா முதலியன எழுந்து ஆடல் புரிகின்றன./

ஆக 87 வருடம் 7 மாதம் 6 நாளாகியும் ஒருத்தரும் திருந்தின பாடா காணோம். இத்தன வருசத்தில என்னல்லாமோ மாறியும் இது மட்டும் மாறாம இருக்கு. அப்படியானால் திரு.விக கூறியது போல் அறத்தொண்டு நன்றாகவே நடந்திருக்கணும். இல்லைன்னா சிக்கி சின்னாபின்னமாகியிருக்கும். (ஏனுங். என்னமோ புரிஞ்சா மாதிரி சொல்லிட்டேன். வேற ஏதும் சொல்லி இருக்கிங்களா. விளக்கிடுங்க)

ஆரூரன் விசுவநாதன் said...

படிக்கத்துவங்கிய போது ஆச்சரியம், படிக்க படிக்க ஆர்வர், படித்து முடித்தபின் ஆத்திரம்.....

இருக்காதா பின்னே....


"அற நிலைக்கு மாறுபட்டோர் சுமத்தும் பழிகளுக்கு அஞ்சாது கடனாற்றும் மன உறுதி அன்னார்க்கிருத்தல் வேண்டும்"


திரு.வி.க பழமைக்குன்னே எழுதன மாதர இருக்குது......

எங்களையும் சேர்த்துக்குனுமில்ல....

வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்.

க.பாலாசி said...

அரிய தகவல் அறியப்படுத்தியமைக்கு நன்றி...

கவலைப்படாதிங்க தலைவா 10.10.10. இல் எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்.

ப்ரியமுடன் வசந்த் said...

இப்போ அவர் இருந்திருந்தால்


Mr.V.K.சுந்தரம்ன்னு தான் பேர் போட்டுஇருப்பார் சரியா சார்?

எம்.எம்.அப்துல்லா said...

//என இத்துனை வேற்றுமை வந்தபின்னரும், என்னை மட்டும் ஏன் அன்று 2/2/22-இல் சொன்ன படி வாழ கேட்க்கிறீர்?

//

கரெக்ட் முரு அண்ணே. 22 ல் வாழ்ந்த மக்கள் மூக்கால் சுவாதித்து வாயால் சாப்பிட்டார்கள். இனிமே நீங்க ஒரு சேஞ்சுக்கு மூக்கால சாப்பிட்டு வாயால சுவாசிங்க :)

(ச்சும்மா லூலூலாய்க்கு...dont be serious)

தீப்பெட்டி said...

//பத்திரிகைகளால் உலகம் அரிக்கப்பட்டு வருவதைப் பற்றியும் பிற கொடுமைகளைப் பற்றியும் இன்று இவண் விரிக்கிற் பெருகும்//


//அற நிலைக்கு மாறுபட்டோர் சுமத்தும் பழிகளுக்கு அஞ்சாது கடனாற்றும் மன உறுதி அன்னார்க்கிருத்தல் வேண்டும்.//

எத்தனையோ மாறுதல்கள்..
ஆனாலும்
எதுவுமே மாறவில்லை..

அப்பாவி முரு said...

//எம்.எம்.அப்துல்லா said...
//என இத்துனை வேற்றுமை வந்தபின்னரும், என்னை மட்டும் ஏன் அன்று 2/2/22-இல் சொன்ன படி வாழ கேட்க்கிறீர்?

//

கரெக்ட் முரு அண்ணே. 22 ல் வாழ்ந்த மக்கள் மூக்கால் சுவாதித்து வாயால் சாப்பிட்டார்கள். இனிமே நீங்க ஒரு சேஞ்சுக்கு மூக்கால சாப்பிட்டு வாயால சுவாசிங்க :)

(ச்சும்மா லூலூலாய்க்கு...dont be serious)//

அப்துல்லா அண்ணே, என்ன ஒரண்டையா? (அதே லூலூலாய்க்குத் தான்)

Mahesh said...

நல்ல பதிவு.... அப்பிடியே பத்திரமா வைங்க... இன்னும் 10/10/10, 11/11/11, 12/12/12 ன்னு மீள்பதிவுகளாப் போடலாம். காலத்துல உறைங்சு போனதுகள்ல இதுவும் ஒண்ணு.

பழமைபேசி said...

@@அப்பாவி முரு
@@எம்.எம்.அப்துல்லா

நடத்துங்க மக்களே! நல்லா இருக்கு!!

@@கதிர் - ஈரோடு

மாப்பு, புதுசு புதுசாப் படம் போடுறீங்கப்பா!

@@வானம்பாடிகள்

அண்ணே, அதுல பல அர்த்தங்கள் இருக்கு... அதுல நீங்க சொன்னதுவும் ஒன்னு... இந்தியா இன்னும் இயங்குறதுக்கு முக்கிய காரணம்... ஏதோ ஒரு மூலையில ந்ல்லது செய்யுற நாலு பேர் பேசாமக் கொள்ளாமச் செய்துட்டே இருக்காங்க...

//ஆரூரன் விசுவநாதன் said...
படிக்கத்துவங்கிய போது ஆச்சரியம், படிக்க படிக்க ஆர்வர், படித்து முடித்தபின் ஆத்திரம்.....

இருக்காதா பின்னே....
//

அதான்! இஃகிஃகி!!

@@க.பாலாஜி

சரிங்க நண்பா... நன்றி! இஃகி!!

//பிரியமுடன்...வசந்த் said...
இப்போ அவர் இருந்திருந்தால்


Mr.V.K.சுந்தரம்ன்னு தான் பேர் போட்டுஇருப்பார் சரியா சார்?
//

போட வச்சிருப்பாங்க... நன்றிங்க!

@@தீப்பெட்டி

ஆமாங்க தீப்பெட்டியார்!

//Mahesh said...
நல்ல பதிவு.... அப்பிடியே பத்திரமா வைங்க... இன்னும் 10/10/10, 11/11/11, 12/12/12 ன்னு மீள்பதிவுகளாப் போடலாம். காலத்துல உறைங்சு போனதுகள்ல இதுவும் ஒண்ணு.
//

வாங்க மகேசு அண்ணே! அப்படியே செய்திடலாம்!!

ஈரோடு கதிர் said...

//ஏதோ ஒரு மூலையில ந்ல்லது செய்யுற நாலு பேர் பேசாமக் கொள்ளாமச் செய்துட்டே இருக்காங்க...//

மாப்பு....என்னை ரொம்ப புகழாதீங்க

பழமைபேசி said...

//கதிர் - ஈரோடு said...
//ஏதோ ஒரு மூலையில ந்ல்லது செய்யுற நாலு பேர் பேசாமக் கொள்ளாமச் செய்துட்டே இருக்காங்க...//

மாப்பு....என்னை ரொம்ப புகழாதீங்க
//

இகழ் புகழ் இரண்டையும் கருத வேண்டாம்ன்னு அல்ல திரு.வி.க சொல்லுறாரு.... இஃகிஃகி!

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

Admin said...

நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றிகள்