7/04/2009

Fetna Live.... தமிழ் விழாத் தகவல்கள்...காலை 11.30 மணி

கொங்குமாமணி சிலம்பொலி அவர்கள் ஒலிக்கக் கேட்டோம். என்ன ஒரு செறிவான உரை? விபர்ங்களைப் பின்னர் இடுகிறேன். தமிழகமே, பெரியவர்களுக்கு மரியாதை அளித்து அவர்கள் இருக்கும் போதே கற்றுக் கொள். இல்லாவிடில், புராதனம் தெரியாத அனாதை ஆகிவிடுவோம், ஆகிக்கொண்டு இருக்கிறோம். விழித்துக் கொள்வோமாகட்டும்!

ஐரோப்பியன் இனம் கண்டு பாடம் கற்றுக் கொண்டு இருக்கும் குரு ஜோதி கண்ணன் அவர்களின் சிலம்பாட்டம் நடைபெற்று வருகிறது. காணும் காட்சிகளை என்னால் நம்ப இயலவில்லை. இது சாத்தியம்தானா? சிலம்பைக் கையாளுவதில் என்ன ஒரு நேர்த்தி. மயிர்க்கூச்செரியும் காட்சிகள். மக்களே, காணொளிகள் பின்னாளில் விற்கக் கிடைக்கும் என என்ணுகிறேன். தவறாமல் வாங்கிப் பாருங்கள். அருமை, அருமை!!

கள்ளக் குறவஞ்சி அடிப்படையிலான சிலம்பொலியைப் பார்த்த அரங்கம் நெக்குருகிக் கூச்சல் இட்டு ஆர்ப்பரித்தது. கரவொலி அடங்க மறுத்தது. அவர் இங்கு வந்த இந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே பயிற்சி எடுத்துக் கொண்ட அட்லாண்டா மாணவர்கள் ராஜ செல்வகுமார், கெளதமன் ஆகியோர் குருவுக்கே சவால் விட்டார்கள். மக்களே இது மிகைப்படுத்து எழுதுவது அல்ல! அல்ல!!

அங்கதம் வரிசையில் நாகபதினாறு, நாகபாசம் என்ற கூறுகளை குரு ஜோதிக் கண்ணன் படைத்துக் காண்பித்தார். சிலம்பம் என்பது 6000 வருடப் பழமை வாய்ந்த ஒன்றாம். ஆங்கிலேயன் எழுதிய வரளாற்று நூலுக்கு எழுதிக் கொடுத்தவர்தான் இந்த குரு ஜோதிக் கண்ணன் அவர்கள். பாண்டிச்சேரியை பூர்வமாகக் கொண்ட ஜோதிக் கண்ணன் அவர்கள் குரு அல்ல, மகான்!!

மற்றொரு மாணவர் ஆதிமுத்து அவர்கள் சிலம்படியை அரங்கற்றி முடிக்கிறார். குருவே, அர்ப்பணிப்பே, உமக்கு தமிழ் நல்லுலகம் கடமைப்பட்டு இருக்கிறது. அடுத்து, வீரபாண்டியன், ஊமைத்துரை போன்றோர் வரிசையில், இதோ ஜோதிக் கண்ணன் அவர்கள் சுருள் மர்றும் வாள் வீச வருகிறார் ஜோதிக்கண்ணன்....

2 comments:

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பகிர்வு நன்றி

முனைவர் மு.இளங்கோவன் said...

பாரடாட்டுகள்
நிகழ்ச்சியை நேரில் கண்ட நிறைவு.
வாழ்த்துகள்
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா