7/03/2009

வட அமெரிக்க தமிழ்விழாத் தகவல்கள்!

குறித்த நேரத்தில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் நிகழ்வுகள் துவங்கி, தலைவர் உரையாற்ற, நடிகை ஜெயஸ்ரீ அவர்கள் முன்னுரைக்க, தமிழ் நாட்டியம் தொடர்ந்து வருகிறது..... விழாக்கோலம் மனதைத் தொடும் வகையில் இருக்கிறது..... நன்றி Fetna!

சிலை போல் நாட்டியத் தாரகைகள் நின்ற காட்சி மெய் சிலிர்க்க வைத்தது! தமிழிசைக்கேற்ற நாட்டியம் தொடர்கிறது... நாஞ்சில் பீட்டர் ஐயா அவர்கள் நடத்திய தமிழ்ப் பல்லூடக நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேறியது. நல்லதொரு வரவேற்பு! சேரன் செங்குட்டுவன் அணி வெற்றி பெற்றது.

அதற்கு முன்னர் நடந்த ஈழம் பற்றிய ஓரங்க நாடகம் வெகு நேர்த்தியாகவும், உணர்வுப் பூர்வமாகவும் இருந்தது. தற்போது நாடக நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அரங்கம் நிறைந்து காணப்படுகிறது.... முன்பதிவு செய்து இன்னும் அரங்குக்குள் வராதவர்கள் விரைவில் வருவது உசிதம்!!

6 comments:

ஆ.ஞானசேகரன் said...

nice and thanks

நசரேயன் said...

அண்ணே நேரடி அறிக்கை நல்லா இருக்கு

குடுகுடுப்பை said...

அண்ணே கலக்குங்க, இப்ப ஒரே குஷிதானே..

அப்பாவி முரு said...

//நடிகை ஜெயஸ்ரீ //

பழைய விசு படத்தில் நடிப்பாங்களே அந்த ஜெயஸ்ரீயா?

Thekkikattan|தெகா said...
This comment has been removed by the author.
Thekkikattan|தெகா said...

பழமைபேசி,

எனக்கு இந்த முகவரியில் மின்னஞ்சல் செய்யுங்களேன். நன்றி.

karthikprab@gmail.com