7/13/2009

Fetna .. தமிழ்த் திருவிழாச் சிதறல்கள் - 3

1950-60களில் இந்தியாவுக்கு இரண்டு மொழியே போதும்ன்னு வெகு பிரமாதமா பிரச்சாரம் நடந்திட்டு இருந்துச்சாம். அப்பத்தான் பேரறிஞர் அண்ணா சட்டசபைத் தேர்தல்ல தோத்துப்போய் நாடாளுமன்றத்துக்கு தேர்வாகிப் போயிருந்தாராம். மாநில மொழிகள் தேவையில்லைன்னு வாதம் வெற்றிய நோக்கிப் போயிட்டு இருந்துச்சாம்.

காரணம் மத்த மாநில உறுப்பினர்கள் அந்த வாதத்தை எதிர்த்து பேச முடியாததுதான். அண்ணா எழுந்து அது எப்படின்னு கேட்டாராம். அதுக்கு வடவர்கள் சொன்னது, அதிக மக்களால தேர்ந்தெடுக்கப்பட்டவர் சட்டசபை உறுப்பினர். அதிக உறுப்பினர்களால தேர்வு செய்யப்படுபவர் முதல்வர்.


அதே போல பெரும்பான்மை மக்களால தேர்வு செய்யப்படுபவர் பாராளுமன்ற உறுப்பினர். அதில் அதிக உறுப்பினர்களால தேர்வு செய்யப்படுபவர் பிரதமர். நாடு தழுவிய அதிக உறுப்பினர்களால தேர்வு செய்யப்படுபவர் குடியரசுத் தலைவர். அதே போல நாடு தழுவிய அளவுல அதிக மக்களால பேசப்படும் மொழி நாட்டின் மொழி. அதுவே எல்லா நிலையிலும் இருக்கணும்ன்னு வாதம்.

மத்த மத்த மாநில உறுப்பினர்கள் செய்வதறியாம முழிச்சிகினு இருந்தாங்களாம். நான் அந்த நாட்டுல படிச்சவன், இங்க இதைச் செஞ்சவன்னு அறிமுகம் செய்யுறவங்க மத்தியில நம்மாள் தன்னை அறிமுகம் செய்துகிட்டாராம், I am the representative of the man in STREETன்னு.

அறிமுகம் செய்துகிட்டுக் கேட்டாராம், நாட்டுல எந்த பறவைங்க அதிக எண்ணிக்கையில இருக்குன்னு. பதில் வந்துச்சாம், காக்கான்னு. இவர் கேட்டாராம், அப்புறம் ஏன் காக்காயை தேசியப் பறவையா வைக்காம மயிலத் தேசியப் பறவையா வெச்சு இருக்கீங்கன்னு. அப்புறம் என்ன, பஞ்சாப்காரன், ஆந்திராக்காரன் அவன் இவன் எல்லாம் புத்துயிர் கிடைச்சு ஆர்ப்பரிச்சு, இந்த ஒத்தையாளோட பேச்சால மசோதா தோத்திடுச்சாம்.

தமிழ்த் திருவிழாவில அண்ணா அவர்களோடப் பணியாற்றிய VIT பல்கலைக் கழக வேந்தர் கோ.விசுவநாதன் அவர்கள் சொன்னதுதாங்க இது. ஆகவே அதிக எண்ணிக்கையால் கவரப்படுவதெல்லாம் சிறப்பல்ல... சிறப்பானதை மட்டுமே அதிக எண்ணிக்கையால் கவர வைக்கப்படும் கடமை நம் அனைவருக்கும் உண்டு!


(விழா பற்றிய மற்ற இடுகைகளுக்கு தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச் சுட்டியைச் சொடுக்கவும்)

16 comments:

Unknown said...

Very nice post. Snapshot of a point in time...a significant one. Felt transported to that point in time.

You have a very nice style of writing. Keep it up.

p.s. How do you write in Tamil font in this site?

அப்பாவி முரு said...

அண்ணே அருமையான வரிகள்,

காக்கா விசயம் ஏற்கனவே கேள்விப்பட்டதுதான். பொருத்தமானதை உதாரணத்திற்கு சொல்லியிருக்கிறீர்கள்!!!

Anonymous said...

//ஆகவே அதிக எண்ணிக்கையால் கவரப்படுவதெல்லாம் சிறப்பல்ல//

பின்னூட்டமெல்லாம் ஒரு பொருட்டல்ல பதிவின் சாரமே சிறப்பு

பழமைபேசி said...

//Harianna said...
Very nice post. Snapshot of a point in time...a significant one. Felt transported to that point in time.

You have a very nice style of writing. Keep it up.

p.s. How do you write in Tamil font in this site?
//

நன்றிங்க ஹரி அண்ணா! www.tamileditor.orgல போயி தட்டச்சிப் பாருங்க... அது வெகு சுலுவா இருக்கும்.

பழமைபேசி said...

//அப்பாவி முரு said//

நன்றிங்க தம்பி!

//சின்ன அம்மிணி said...
//ஆகவே அதிக எண்ணிக்கையால் கவரப்படுவதெல்லாம் சிறப்பல்ல//

பின்னூட்டமெல்லாம் ஒரு பொருட்டல்ல பதிவின் சாரமே சிறப்பு
//

இஃகிஃகி!! ஆமுங்...

Mahesh said...

//சிறப்பானதை மட்டுமே அதிக எண்ணிக்கையால் கவர வைக்கப்படும் கடமை நம் அனைவருக்கும் உண்டு!///

அது.......... !!!!

நிகழ்காலத்தில்... said...

//Harianna said...
Very nice post. Snapshot of a point in time...a significant one. Felt transported to that point in time.

You have a very nice style of writing. Keep it up.

p.s. How do you write in Tamil font in this site?
//

நன்றிங்க ஹரி அண்ணா! www.tamileditor.orgல போயி தட்டச்சிப் பாருங்க... அது வெகு சுலுவா இருக்கும்.//

நான் nhm writer software download
செய்து உபயோகப்படுத்துகிறேன்.
எளிமையாக இருக்கிறது.

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே இன்னும் முழுமையான தகவலைத் தர விரும்புறேன்.

இந்தியை ஆட்சி மொழியாக்கும் மசோதாவின் மேல் வாக்கெடுப்புக்கு முந்திய வாக்குவாதம் நடைபெறுகின்றது. கண்ணியத்திற்குறிய காகிதேமில்லத் அவர்கள் எழுந்து ‘தமிழின் தோற்றம்,வளர்ச்சி, சிறப்புகள் ‘ முதலான அத்தனை பெருமைக்குறிய விஷயத்தையும் விளக்கி மேலும் இத்தனை சிறப்புகள் இந்திய மொழிகளில் வேறு எதற்குமே இல்லை என்பதனை ஆதாரங்களோடு டநாட்டவர் மறுக்க முடியாத அளவிற்கு ஆதாரங்களோடு எடுத்துவைத்து, இப்படிப்பட்ட தமிழ்தான் ”இந்தியாவின் ஆட்சி மொழியாக” இருக்க வேண்டும் என்று ஒரே போடாக போட்டுவிட்டார். என்ன செய்வது என்று புரியாமல் வடநாட்டவர் முழித்த போது அவர்களில் ஒரு உறுப்பினர் “எல்லாம் சரி இஸ்மாயில் பாய்.உங்கள் தாய்மொழிதான் இந்திய துணைக்கண்டத்தில் தோன்றிய முதல் மூத்த மொழி என்பதை ஒத்துக்கொள்கின்றோம். ஆனால் அதிகம் பேர் பேசும் மொழி எது? “ என்ற வாதத்தைக் கிளப்புகின்றார். அதற்கு பதில் சொல்லத் தெரியாது காயிதேமில்லத் நின்ற போது அண்ணா எழுந்து ஐ யாம் ய ரெப்ரசெண்டேடிவ் ஆப் அ மேன் இன் ஸ்டிரீட் எனத் துவங்கி சொன்ன பதில்தான் உங்க இடுகையில் உள்ளது.

அண்ணாவின் அந்த ஒரு நிமிடப் பேச்சிற்குப்பின் அந்த மசோதா ஓட்டெடுப்பில் இருந்து விலக்கப்பட்டது. காகிதேமில்லத் அண்ணாவிடம் உங்களுக்கு முன் நான் பேசிய ஒரு மணி நேரப் பேச்சும் அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்து முழுமை படுத்திய உங்களின் ஒரு நிமிடப் பேச்சும் ஒன்று பெருமையோடு மனம்திறந்து பாராட்டினாராம்.


தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் இன்றுவரை ஒலித்த ஒரே தமிழ் குரல் காயிதேமில்லத்தின் குரல். இந்தியை ஆட்சிமொழியாக்க விடாமல் கடந்த 50 ஆண்டுகளாக அவர்கள் உறக்கத்தைக் கெடுத்துக்கொண்டு இருக்கும் ஒரேகுரல் எம் தலைவன் அண்ணாவின் குரல்.

எம்.எம்.அப்துல்லா said...

ஆமா..எங்க அனுராதாக்கா எல்லாரையும் ஆட வச்சுச்சான்னு கேட்டேன்..இன்னும் பதிலே சொல்லல நீங்க. அடுத்த வருஷம் என்னையக் கூப்பிடுற அளவிற்கு வளர முயற்சிக்கிறேன்.

பழமைபேசி said...

//எம்.எம்.அப்துல்லா said... //

களஞ்சியமே நன்றி, நன்றி, நன்றி!!!


//எம்.எம்.அப்துல்லா said...
ஆமா..எங்க அனுராதாக்கா எல்லாரையும் ஆட வச்சுச்சான்னு கேட்டேன்..இன்னும் பதிலே சொல்லல நீங்க. அடுத்த வருஷம் என்னையக் கூப்பிடுற அளவிற்கு வளர முயற்சிக்கிறேன்.
//

செம ஆட்டம்... இருங்க படங்களோட ஒரு இடுகை இடலாம்ன்னுதான்.... நிச்சயம் நீங்க வரணும்... நாங்க ஆடணும்... இடுகை காத்திருக்கிறது... ஓரிரு நாளில்...

குடந்தை அன்புமணி said...

தங்களின் பதிவும், அப்துல்லா அவர்களின் பின்னூட்டமும் சூப்பரு... நிறைய விசயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.

குடந்தை அன்புமணி said...

//சின்ன அம்மிணி said...
//ஆகவே அதிக எண்ணிக்கையால் கவரப்படுவதெல்லாம் சிறப்பல்ல//

பின்னூட்டமெல்லாம் ஒரு பொருட்டல்ல பதிவின் சாரமே சிறப்பு//

பின்னூட்டமும் சிறப்புதான் என்பதை அப்துல்லா அவர்கள் மெய்பித்துள்ளார்...

சப்ராஸ் அபூ பக்கர் said...

அருமையாக இருந்தது அண்ணா...

தொடருங்கள் உங்கள் பயணத்தை.....

நசரேயன் said...

அண்ணே உங்க தொண்டு வாழ்க

Anonymous said...

//பின்னூட்டமும் சிறப்புதான் என்பதை அப்துல்லா அவர்கள் மெய்பித்துள்ளார்...//

குடந்தை மணியண்ணே, நான் சொன்னது பின்னூட்ட எண்ணிக்கையப்பத்தி :)

ஜோ/Joe said...

அப்துல்லா,
கலக்கிபுட்டீங்க போங்க.