7/03/2009

அமெரிக்காவில் கோலாகலம் ஆரம்பம்!

குறித்த நேரத்தில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் நிகழ்வுகள் துவங்கி, தலைவர் உரையாற்ற, நடிகை ஜெயஸ்ரீ அவர்கள் முன்னுரைக்க, தமிழ் நாட்டியம் தொடர்ந்து வருகிறது..... விழாக்கோலம் மனதைத் தொடும் வகையில் இருக்கிறது..... நன்றி Fetna!

சிலை போல் நாட்டியத் தாரகைகள் நின்ற காட்சி மெய் சிலிர்க்க வைத்தது!

அரங்கம் நிறைந்து காணப்படுகிறது.... முன்பதிவு செய்து இன்னும் அரங்குக்குள் வராதவர்கள் விரைவில் வருவது உசிதம்!!

3 comments:

நா. கணேசன் said...

மணி,

சிலம்பொலி ஐயாவைப் பார்த்தால் நான் மிக விசாரித்ததாய்ச் சொல்லவும்.

சிலம்பொலி, தமிழருவி, அண்ணாதுரை, ... பேச்சுகளை எம்பி3 வடிவில் பின்னர் வலையேற்ற வேண்டுகிறேன்.

சங்கரபாண்டி, கவிஅரசன், பொற்செழியன், சௌந்தர், .....
எல்லா நண்பர்களையும் பார்க்கவும்.

நா. கணேசன்

பழமைபேசி said...

நன்றிங்க அண்ணா... நான் இங்கே விழா அரங்கத்தில் இருக்கிறேன்... ஓரிருவரை ஏற்கனவே சந்தித்து வாழ்த்துப் பெற்றேன்...உங்களையும் நினைவு கூர்ந்தேன்!

ஊர்சுற்றி said...

ஆன்லைனில் பதிவிட்டுக்கொண்டிருக்கிறீர்களா...?!!!!

விழா மாபெரும் வெற்றிபெற வாழ்த்துக்கள். :)