7/15/2009

அண்ணன் அப்துல்லாவுக்கு சூடான மடல்!

அண்ணே,

வணக்கம்! என்ன? எங்க அக்கா, எங்க அக்கான்னு நெம்பத்தான் பாசத்தைப் பொழியுறீங்க? வாங்கடீ வாங்க, நீங்களே வந்து மாட்டிகிட்டீங்க இப்ப! உங்க அக்காவுக்கு தமிழே வராதா? என்னவோ எங்களுக்கு எல்லாம் பேசத்தெரியாத மாதிரி வார்த்தைக்கு வார்த்தை நுனி நாக்குல பேசித்தள்ளுறாங்க? நல்லாவே இல்லை!

//எம்.எம்.அப்துல்லா said...
ஆமா..எங்க அனுராதாக்கா எல்லாரையும் ஆட வச்சுச்சுன்னு கேட்டேன்..இன்னும் பதிலே சொல்லல நீங்க.
//


சரி, யாரோ ஒருத்தர் தமிழ்ல பேசலாமேன்னு குரல் குடுத்துட்டாரு. அதுக்கு ஏன் கோபம் வருது? வந்தாலும் பரவாயில்லை, எதிர்மறையா எங்ககிட்ட கேள்வி கேக்குறாங்க??


சென்னையில யாருமே தமிழ்ப் பாட்டுக்காரங்களுக்கு வாய்ப்பு தர்றதில்லையாம்... புலவருங்க யாரும் ஒன்னுமே சொல்லுறதில்லையாம்.... நீங்க தமிழ்ல பேசிப் பாடினா, அவங்க ஏன் வெளியூரு ஆட்களைக் கூட்டியாந்து பாட வைக்கணும்? சரி, அது ஊர்ப் பிரச்சினை... அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும்?

அமெரிக்காவுலயே பிறந்து வளர்ந்த ஆந்திரக் குழந்தை அழகா வந்து தமிழ்ல பேசிப் பாடுச்சே? அமெரிக்காவுலயே இருக்குற, நிகழ்ச்சியை வழங்கின தெலுங்கு இசை இயக்குனர் கான்சாசு இராசா தமிழ்ல உச்சரிப்புப் பிழை இல்லாமப் பேசி பாடினாரே? அவங்களும் பார்த்துகிட்டுதான இருந்தாங்க?? தமிழை ஒழிக்கிறவங்க வெளியூர் ஆட்கள் கிடையாது அண்ணே, நம்ம கூட இருக்குறவங்கதான். எருமைக்குப் புல் புடுங்கலாம்! பெருமைக்குப் புல புடுங்கலாமாண்ணே?

G.U.போப், கால்டுவெல், வீரமாமுனிவர், பெர்சிவல், எல்லிஸ், தாவூத் அலி, ரேனியஜ், கிராப், ஆர்டன் இந்த மாதிரி ஆட்கள் அந்த காலத்துல தமிழைக் காப்பாற்றினாங்க. அதுபோல அமெரிக்காவுலயும், ஐரோப்பாவுலயும் இருக்குற புலம் பெயர்ந்த மக்கள்தான் எதிர்வரும் காலத்துலயும் தமிழைக் காப்பாத்துவாங்க போலத் தெரியுது....

மத்தபடி நல்லாவே பாடினாங்க, மக்களும் ஆடினாங்க. நிச்சயம் உங்களை நாங்க எப்பவும் வரவேற்போம்... தங்கமனசுக்காரரை வரவேற்கறதைத் தவிர வேற எங்களுக்கு என்ன வேலை??சரி, சரி, அந்தச் சிறுமி எப்படி பாடுறாங்கன்னு சித்த பாத்துட்டு போங்க....

(விழா பற்றிய மற்ற இடுகைகளுக்கு தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச் சுட்டியைச் சொடுக்கவும்)//Pazamai pesi the latest blog is bit misleading to what Anuradha sriram was really trying to say;


Since we have a legacy of our top stars such as people such as TMS, SPB, Jesudoss, Janaki susheela.. are from non tamil origins, anuradhas attack is really and only on the singers who mess up the tamil words and language while singing which I term it as "kadithu kodharal" . I am a fan of udit narayan he has lots of great hits and some tamil hits as well, but can never approve his bad tamil pronounications and it hurts to hear his tamil numbers.


Please get this clarification right in your blog that the attack is not on non-tamilians but on people who can not pronounce tamil properly yet patronized by our leading music directors such as ARR and Harris jeyaraj//

//fetna2009 said...
Yenga,

The young girl and Raja have Telugu as their languages but have roots in TamilNadu. Let us not overstate the facts!!!!!
//

38 comments:

priyamudanprabu said...

///
தமிழை ஒழிக்கிறவங்க வெளியூர் ஆட்கள் கிடையாது அண்ணே, நம்ம கூட இருக்குறவங்கதான்!
///

ஆமங்க

Mahesh said...

நல்லா சொன்னீங்க போங்க !!

நிகழ்காலத்தில்... said...

\\தமிழை ஒழிக்கிறவங்க வெளியூர் ஆட்கள் கிடையாது அண்ணே, நம்ம கூட இருக்குறவங்கதான்.\\

மிகச் சரியான வார்த்தைகள்..

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே எங்க அனுராதாக்கா நான் அறிந்தவரை அனைவரிடமும் தமிழில்தான் பேசுவார்கள். அன்றைக்கு அக்காவுக்கு கிரகம் சரியில்லை போலிருக்கு. நேரில் பார்க்கும் போது உங்கள் வருத்தத்தை அவரிடம் சொல்லி விடுகின்றேன்.

தமிழ் திரை இசை உலகில் தமிழை மிகவும் அற்புதமாய் உச்சரிக்கும் சுசீலாம்மா,ஜானகியம்மா, எஸ்.பி.பி. சார், மனோண்ணன் போன்றோர் ஆந்திராவில் பிறந்து வளர்ந்த தெலுங்கர்கள். எஸ்.வி.ரங்காராவ்,கண்ணாம்பாள்,
சாவித்திரி என பல தெலுங்கர்கள் தமிழை தமிழர்களைவிட அற்புதமாகப் பேசி அசத்தியவர்கள்.


//நீங்க தமிழ்ல பேசிப் பாடினா, அவங்க ஏன் வெளியூரு ஆட்களைக் கூட்டியாந்து பாட வைக்கணும்? //


இல்லண்ணே.உங்களின் இந்தக் கருத்தை நான் ஒத்துக்கொள்ள முடியாது. திரு.ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் துவங்கி வைத்த இந்த வரலாற்றுப் பிழை இன்றுவரை ஒரு ஃபேஷனாக இசை அமைப்பாளர்களாலும், இயக்குனர்களாலும் நினைக்கப்படுகின்றது.அதனால்தான் வடநாட்டுப்பாடகரை வருந்தி அழைத்து வாய்ப்பு தருகின்றனர்.

ஒரு நடந்த விஷயம் சொல்றேன்.நான் பாடிய பாடலைக் கேட்ட ஒரு நண்பன் “உங்க தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்றாக இருக்கின்றது” என்றார். நான் திரும்பக் கேட்டேன் “ஏங்க!நான் என்ன சுக்வீந்தர் சிங்கா? பஞ்சாப்லேந்தா வந்து பாடுறேன்? இது என் தாய்மொழிங்க”. பழமை அண்ணே அப்பிடி இருக்கு இன்னைக்கு நாட்டு நெலம :))

சீமாச்சு.. said...

//அண்ணன் அப்துல்லாவுக்கு சூடான மடல்!
//

ரொம்ப சூடா... இருக்கு.. என் மானிட்டர்லேருந்து புகையெல்லாம் வருது !!

Anonymous said...

உச்சரிப்பு சரியில்லாட்டி ரிஜக்ட் பண்ணணும். இதுல இசையமைப்பாளர்கள் மேலயும் தப்பிருக்கு.

எம்.எம்.அப்துல்லா said...

இடுகையை மட்டும் படித்துவிட்டு முதல் பின்னூட்டம் போட்டேன். காணொளியை இப்பத்தான் கண்டேன். அற்புதமாகப் பாடுகின்றாள் அந்தச் சிறுமி. ஆனால் அருமையான தமிழ் உச்சரிப்போடு பாடுவதால் அந்தச் சிறுமிக்கு தமிழ் திரைஇசை உலகில் வாய்ப்புக் கிடைப்பது மிகவும் கடினம்.
:)

எம்.எம்.அப்துல்லா said...

உச்சரிப்பு சரியில்லாட்டி ரிஜக்ட் பண்ணணும். இதுல இசையமைப்பாளர்கள் மேலயும் தப்பிருக்கு.

//

எங்களுக்கு கன்னாபின்னான்னு ஆதரவு தரும் சின்னஅம்மிணி அக்காவுக்கு நாங்களும் கன்னாபின்னான்னு நன்றி சொல்லிக்கிறோம்.

இப்படிக்கு,

தமிழில் மட்டுமே பாடத் தெரிந்த அப்பாவி பாடகர்கள் சங்கம்.

இராகவன் நைஜிரியா said...

இஃகி... இஃகி

Unknown said...

குட்டி புள்ள அருமையா பாடுதுங்க்நோவ்.....!!அடடா ....... ஒரு மணி நேரம் ஆனங்க்காட்டி சூடு ஆரிப்போச்சே....!!

இராகவன் நைஜிரியா said...

வேற வழியில்லாம சிரிச்சுட்டேங்க...

தராசு said...

அப்துல்லா அண்ணே,

என்ன நடக்குது இங்கே?????

எம்.எம்.அப்துல்லா said...

//அப்துல்லா அண்ணே,

என்ன நடக்குது இங்கே?????

//

ஒன்னுமில்லண்ணே...டோண்ட் ஓர்ர்ரி.

எங்க அனுராதாக்கா வட அமெரிக்க தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் ஆண்டுவிழாவுல கலந்துக்கு அங்க போய்ருக்காங்க. அங்க ரசிகர்கள்கிட்ட ஆங்கிலத்துல பேச ஆரமிச்சுருக்காங்க. அப்ப நம்ப பழமை அண்ணே ஏம்மா தாயி! நம்ப ரெண்டு பேரும் தமிழங்கதானே?? ஏன் தமிழ்ல பேசக்கூடாதுன்னு நியாயமா ஒரு கேள்வியக்கேட்டு இருக்காரு.அந்தக்காவும் ஆமா,நீங்க சொல்றதுதான் சரின்னு உண்மைய ஒத்துக்காம எங்கிட்ட கேக்குறியே பழமை..இதே மாதிரி சென்னை போய் அங்க இருக்குற இசை அமைப்பாளர்கள்கிட்ட தமிழ்காரவுங்களுக்கு அதிகமா வாய்ப்பு குடுங்கன்னு கேளுங்கன்னு பட்டுனு கோவப்பட்டு சொல்லிருச்சு. அததான் இங்க பேசிக்கிட்டு இருக்கோம்.

ீந்த இடுகையோட தலைப்பை நடப்பு டிரண்டுக்கு ஏத்தபடி வச்சுருக்காரு பழமை அண்ணே. மத்தபடி இது நீங்க நினைக்கிற மாதிரி இரத்தபூமி இல்லை :)

குடந்தை அன்புமணி said...

நல்ல புள்ளைக எல்லாம் வெளிநாட்டிற்கு போயிட்டா அப்புறம் என்னா பண்றதுங்கோ... இஃகி... இஃகி...

ஈரோடு கதிர் said...

//தமிழை ஒழிக்கிறவங்க வெளியூர் ஆட்கள் கிடையாது அண்ணே, நம்ம கூட இருக்குறவங்கதான். எருமைக்குப் புல் புடுங்கலாம்! பெருமைக்குப் புல புடுங்கலாமாண்ணே?//

செவுட்ல அறஞ்ச மாதர இருக்கு

மணிகண்டன் said...

அனுராதா ரமணன் பாட்டு பாடுவாங்களா ?

பழமைபேசி said...

சங்கு சுட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!

இதான் நினைவுக்கு வந்தது. சுட்டப்பட்டவனாக இருந்தாலும், அட்க்கமா அறிவார்த்தமா மறுமொழி கொடுக்குறீங்க பாருங்க.... அந்தப் பின்னணியில, ஒரு நல்ல மனிதர்ங்ற முறையில விழாவுக்கு உங்களை இப்பவே அழைக்குறேன் அண்ணே! பாட்டென்ன பாட்டு?!

//இல்லண்ணே.உங்களின் இந்தக் கருத்தை நான் ஒத்துக்கொள்ள முடியாது. //

நானும் அதேதான் சொல்றேன்... உங்ககூட இருக்குற மக்கள் பிழையான பாடலைக் கேட்டு அதுகளுக்கு மீண்டும் மீண்டும் வரவேற்பு கொடுக்குறதுதான் பிரச்சினையே! இஃகிஃகி!!

அப்படியே உங்க அனுராதா ஸ்ரீராம் அவர்களையும் கேட்டதா சொல்லிடுங்க!

பழமைபேசி said...

மக்களே வேலைக்கு நேரமாச்சு.... வேலையிடத்துல வலைக்குத் தடை! ஆகவே சாயுங்காலம் வந்து எசப்பாட்டு பாடுறேன் சரியா? வரட்டுமா??

Unknown said...

We can also similar questions about many of the Tamil Pulavars, Tamil Lovers and leaders [All Men] who were wearing pants, shirts and coats instead of Veshti and Sattai. Women at least maintained their tradition by wearing sarees. Why can’t these men wear a Tamilian Dress? Are they ashamed to wear one? Why almost everyone we met were shaking hands instead with others of saying Vannkkam with folded hands?

Why was Mr. Vairamuthu wearing a Pyjama and Kurta instead of a Veshti and Sattai?

I did not see Anuradha Sriram speaking in “Nuni Nakku Tamil”. No one cared if she mixed a little bit of English in her Tamil except the one who shouted from the audience and got a fitting reply and I did not see any anger there.

Unknown said...

//..எருமைக்குப் புல் புடுங்கலாம்! பெருமைக்குப் புல புடுங்கலாமாண்ணே?..//

புடுங்கக்கூடதுங்..

மத்த படிக்கு புள்ள நல்லாத்தான் பாடுதுங்க..

Anonymous said...

Yenga,

The young girl and Raja have Telugu as their languages but have roots in TamilNadu. Let us not overstate the facts!!!!!

பழமைபேசி said...

@@பிரியமுடன் பிரபு
@@நிகழ்காலத்தில்
@@Seemachu
@@சின்ன அம்மிணி
@@இராகவன் நைஜிரியா
@@தராசு
@@குடந்தை அன்புமணி
@@லவ்டேல் மேடி
@@கதிர்
@@Tamil
@@மணிகண்டன்
@@பட்டிக்காட்டான
@@fetna2009


எல்லோருக்கும் நன்றி, நண்பர்கள் அபய் உள்ளிடோர், அவங்க தமிழரல்லாதோருக்கு எதிராக எந்த கருத்தும் சொல்லைலை, தவறான உச்சரிப்போட பாடுறவங்களை மட்டுமே சாடினாங்கன்னு சொல்லி இருக்காங்க...

அப்படியே இருந்தாலும் ஆங்கிலத்துலயே தொடர்ந்து பேசினதுனாலத்தான் அன்பரொருவர் தமிழ்ல்ல பேசச் சொல்லிக் கேட்டாரு... அதுக்கு மதிப்பளிக்காம திசை திருப்பி உச்சரிப்பு தவறுற வட நாட்டு பாடகர்களை நினைவுபடுத்தி திசை திருப்ப வேண்டிய அவசியம் இல்லைங்களே?!

பழமைபேசி said...

//fetna2009 said...
Yenga,

The young girl and Raja have Telugu as their languages but have roots in TamilNadu. Let us not overstate the facts!!!!!
//

boss,

let it be the fact...; some one requested her to speak in tamil or not? that is the point here....

Unknown said...

From Raja Govindarajan

I am a Telugu and speak Telugu at home. I was born and raised in Kolkata before moving to the U.S. However, I studied thamizh at school and have a very good working knowledge in thamizh. I don't take any extra pride in my tamil knowledge - any one who has spent the time studying the language is expected to have my level of proficiency, some more some less. My proficiency in multiple languages enables me to talk/sing/comminicate/socialize with a wide diaspora. It also carries with it a disadvantage especially because many of the people I come across have to peg me as a Telugu/thamizhan/Bengali/etc. etc. before they can include me as "one of them". As far as I am concerned, it is their problem and I am just who I am. Enough about me.

Regarding the entire discussion about Anuradha's response to the "thamizh la pEsunga" I offer my 2 cents. I am not going to even try to convince about what is right and what is wrong. Just my opinion, that's all.

1. Established rule of stage performance - you never ever let a heckler in a show take control. It doesn't matter if he/she is right. And this person was a heckler. If he was that much irked by her English usage, he could have approached through the organizers backstage and communicated his thoughts.
2. Anuradha was communicating in pretty good thamizh intermingled with English as one does when one is conversing as opposed to giving a speech. Her main role was to "sing" thamizh songs.

3. Anuradha's response to this particular "thamizh la pEsunga" has been misquoted. Her immediate response was "naanum thamizhachchi thaan. kandippaa thamizh la pEsarEn. aanaa English la pEsina udanE thamizh la patru illainnu mudivukku varak koodaadhu. We should not have these pretences". (I may have got the words/phrases juxtaposed but this was the gist of what she said).
4. The reference to non-tamil singers was made at a different time and was definitely not associated with the "thamizhla pEsunga" call. All of us have her own opinion about the murder of thamizh in TFM and she is entitled to hers. And I believe that her pain is slightly stronger than any of ours :-) :-)
5. From my interaction with her after the concert, none of this even exists in her memory i.e. it's no big deal. She has moved on from this and some of us (like Junior Vikatan) sre still clinging to it.

Sorry for not writing this in thamizh. I use anjal and it has its own "posting in thamizh" problems. Google's trasnliterator
does kuLarubadi in na vs. Na and la vs. La and (my little learning) gets me bothered.

பழமைபேசி said...

//Raja said...
From Raja Govindarajan
//

wow.... what a nice feed back! Thank you so much sir...

பழமைபேசி said...

பழமைபேசி said...
//he could have approached through the organizers backstage and communicated his thoughts.//

Sir, I would accept everything except the above said comment... If we really want not to allow heckler to take a control, we should ignore such heckler... atleast just get away with it.... I don't think that happened there.... the response came right after such comment....

And this post is not to critisize any one…. Rather to let the readers know what happened….

பழமைபேசி said...

//Tamil said...

I did not see Anuradha Sriram speaking in “Nuni Nakku Tamil”.//

I meant English buddy!

// No one cared if she mixed a little bit of English in her Tamil //

let's not pretend.... she never spoke in Tamil at all till the audience shouted...

நண்பரே,

நான் எனது விருப்பு வெறுப்புகளைக் கலந்து எழுதுபவன் அல்ல... உண்மையிலேயே அவர்கள் தமிழில் பேசவே இல்லை... மேலும் ஆங்கிலத்தின் தாக்கம் வெகு அதிகமாக இருந்தது....

மேலும் அந்த ஒரு குரலுக்குப் பின்னர், அவர்கள் பிற மொழிப் பாடகர்களின் உச்சரிப்பு பற்றி பேசியது ஒரு திசை திருப்பும் செயலாகவே பிரதிபலித்தது... அவர்கள் அப்படி நினைத்துப் பேசாமல் இருந்திருந்தாலும் கூட....

அதேபாணியில்தான் உங்கள் பின்னூட்டமும் இருக்கிறது....

manjoorraja said...

அனுராதா ஸ்ரீராம் அருமாயான பாடகிமட்டுமல்லாது நிகழ்ச்சியை எப்படி விறுவிறுப்பாக கொண்டுசெல்லவேண்டும் என்பதையும் தெரிந்தவர். அவரது ஆதங்கத்தை அவர் சொல்லியிருக்கிறார். ஆனாலும் ஆங்கிலத்தில் பேசியது தவறு என்பதில் சந்தேகம் இல்லை. அது அவர் மட்டுமல்ல பலரும் செய்யக்கூடியதே.

சிறுமி பாடிய இரு பாடல்களும் அருமை.

தெலுங்கு பேசுபவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது ஏனெனில் அவர்கள் பல தலைமுறைகளாக தமிழ் நாட்டிலேயே இருப்பவர்கள் தமிழ்தான் அவர்களுடைய மொழி என்றே கூறலாம். அப்படி நிறைய பேர் இருக்கின்றனர்.

எம்.எம்.அப்துல்லா said...

//தெலுங்கு பேசுபவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது ஏனெனில் அவர்கள் பல தலைமுறைகளாக தமிழ் நாட்டிலேயே இருப்பவர்கள் தமிழ்தான் அவர்களுடைய மொழி என்றே கூறலாம். அப்படி நிறைய பேர் இருக்கின்றனர்.

//

ஆமாம் மஞ்சூர் அண்ணே,

அவர்கள் இல்லத் திருமணம் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு தமிழில்தானே பத்திரிக்கை அடிக்கின்றனர். அவர்களின் இன்றைய தலைமுறை கிட்டத்தட்ட தெலுங்கை மறந்தேவிட்டனர்.

பழமைபேசி said...

//மஞ்சூர் ராசா said... //

ஆகா, வணக்கம் ஐயா! நல்லா இருக்கீங்களா? கன நாளாயிட்டுது என்ன? மகிழ்ச்சி, மகிழ்ச்சி!!

பழமைபேசி said...

//எம்.எம்.அப்துல்லா said...
ஆமாம் மஞ்சூர் அண்ணே,
//

அண்ணே, இன்னும் திண்ணையில என்ன நடக்குதுன்னு கெவனிச்சிட்டுத்தான் இருக்கீயளா? இஃகிஃகி!

அவங்களையும் ஒரு கும்பல் அவர்கள் தமிழர் அல்லர்ன்னு கூக்குரல் இட்டுட்டுதான அண்ணே இருக்காங்க... கூக்குரல் இடுறவங்க சொல்றது,

டுமாரோ ஈவினிங் ஆபீசு எண்ட்ரன்சுல மீட் பண்லாம், ஓகேயா?

மதிபாலா said...

ம்ம்....நடத்துங்க...நடத்துங்க..

பழமைபேசி said...

//மதிபாலா said...
ம்ம்....நடத்துங்க...நடத்துங்க..
//

வாங்க தம்பீ, சொல்ல வந்ததை தயக்கமில்லாமச் சொல்லிட்டுப் போங்க....

manjoorraja said...

//டுமாரோ ஈவினிங் ஆபீசு எண்ட்ரன்சுல மீட் பண்லாம், ஓகேயா? //

தெரிஞ்ச விசயம் தானே பழமை. அதை மாத்த முடியுமா என்ன? இதில் வேறு பலர் தமிழ் சங்கங்களில் முக்கிய பதவிகளிலும் இருப்பாக.

Unknown said...

//let's not pretend.... she never spoke in Tamil at all till the audience shouted...//

She did speak in Tamil even before that. The heckler shouted because of mixing English with Tamil. "She never spoke at all" is a over statement.

Please see the video/dvd and decide for yourself. why blame Anuradha when all most all the guys are dressed/behaved like a westerner?

பழமைபேசி said...

//Tamil said... //

நான் நிறையப் பேருங்ககிட்ட கேட்டு உறுதிப்படுத்தியாச்சுங்க... கிடைச்ச உடனே காணொளியும் போட முயற்சிக்கிறேன்... சமீபத்திய இடுகையும் பாருங்க...

Unknown said...

adhu sarithaan ayya. namma munaivar muthvel chelliahvae kottum soottum karuppu kannaadiyum anindhu dhool kalappikittu irundaarae. yaen vettiyum chattaiyum aniyalae.

vittu tallittu pongaiyaa. andha amma nalla paadinaanga. adhai anubavichu sandhoshapadunga.

பழமைபேசி said...

//Tamil said... //

// thamizh said... //

நீங்களும் அவங்களும் ஒரே ஆள்தானா? வேற வேறயா?? அவ்வ்வ்...

அல்லாருமே வேட்டி சட்டையிலயே குறியாயிருக்கீங்க?

எனக்கு இப்ப புரிஞ்சு போச்சுங்கோய்... விழாவுக்கு வந்த இராமராஜ் வேட்டிகள் அதிபர் நாகராசு அண்ணன் வேட்டி துண்டு குடுக்காம, கவுண்ட இரா...அட ச்சீ.., கம்ப இராமாயணத் தகடு மட்டும் குடுத்துட்டுப் போயிட்டாருங்றதுதான உங்க பிரச்சினை?!