7/23/2009

தமிழை ஒழிக்கிறானா பழமைபேசி?!

அன்பர்களே கீழ்க்கண்ட சொற்களைக் கண்டு எழுதுகிறேன்:

"ஓ அப்படீங்களா? சரி அப்ப, அடுத்த புத்தகத்தையும் இப்பவே அனுப்பி விடுங்க... எதுக்கு கடைசி நேரத்துல அவசர அவசரமா? என்ன நாஞ்சொல்றது?!"

இது தொடர்பாக ஏற்கனவே சொல்லியுள்ளதை மீண்டும் சொல்கிறேன். இதைப் போல் தமிழ்மொழியை ஒழிக்கும் வழி வேறில்லை. வேடிக்கைக்காகவும் இப்படி எழுத உள்ளம் துணிவது மிக வருத்தமானது. முன்பெல்லாம் இப்படி யாரும் எழுதமாட்டார்கள். மேடையில் பேசக்கூட மாட்டார்கள். நானும் நினைத்ததும் இல்லை. இப்பொழுதுதான் இது பெருகிவருகிறது.

இந்த நுணுக்கமான உணர்வுகள் எல்லாம் போனதால்தான் ஈழப் போராட்டத்திற்கு வேண்டிய நுணுக்கமான உணர்வுகளும் காணாமற் போயினவோ?

உணர்வினால் இயற்கையாகத்தோன்றாவிடில் அறிவியல் முறையில் அறிய மேலே இணைத்துள்ள கட்டுரையை வாசிக்கவும். இந்த மாதிரிச் சிதைந்த மொழியில் எழுதாமல் இருந்தாலே பெரிய சேவை. அது கடமை. யாரும் எந்த இலக்கியமும் கற்கவேண்டாம்.

"இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்."

------------------------------------------------------


மடலாடலில் நான் குறிப்பிட்ட வாசகங்களுக்கு மறுமொழியாகக் கிடைக்கப் பெற்ற, எனது கெழுதகை நண்பரொருவரின் அறிவுறுத்தலைத்தான் மேலே காண்கிறீர்கள்.

முதலில் அவருக்கு மனமார்ந்த நன்றியைச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். அவர் அளித்திருந்த கட்டுரையானது வெகு ஆழமான கட்டுரை, பல நூல்களை மேற்கோள் காண்பித்து பல அரிய தகவல்களுடன் தனது வாதத்தை முன் வைத்திருக்கிறார். அனைவரும் படித்தறிய வேண்டிய படைப்பு அது! மொழி சிதைவதில் யாருக்கும் உடன்பாடு இருக்காது, இருக்கவும் கூடாது என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

ஆனால் அவரது கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் சில கருத்துகள், ஏற்றுக் கொள்ள முடியாது. தமிங்கிலத்திலே பேசுவதை, எழுதுவதைக் காட்டிலும், நூல் மற்றும் உரை தவிர்த்த மற்ற நான்கு இலக்கியங்களிலும் வரும் தமிழானது தீங்கானது என்கிறார்.

பேச்சு வழக்கில் பாவிக்கும் சொற்கள் கொண்டு எழுதுவதை வருந்தக் கூடியது என்கிறார். அதுவும் இப்பழக்கமானது இப்போதுதான் பெருகி வருகிறது என்றும் கூறுகிறார்.

அப்படியானால் நாடோடி இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், நாட்டுப்புறப் பாடல்கள் எல்லாம் பல்கலைக் கழங்களிலே இடம் பெற்றது எப்படி? மேலை நாடுகளிலும் Folklore என்ற பாமரர் இலக்கியம் தோன்றி இருக்காதே?!

பேசுவதை எழுதாதே! எழுதுவதைப் பேசு!! என்று கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் கூறியதை மேற்கோள் காண்பிக்கிறார். ஏற்றுக் கொள்கிறேன். அதே வேளையில், கி.மு 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்று சொல்லப்படுகிற தொல்காப்பியர் உரைத்ததை நான் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

”எழு நிலத்து எழுந்த செய்யுள் தெரியின
அடிவரை இல்லன ஆறென மொழிப;
அவைதாம் நூலிலான, உரையிலான
நொடியொடு புணர்ந்த பிசியினான
ஏது நுதலிய முதுமொழியான
மறைமொழி கிளந்த மந்திரத் தான
கூற்றிடை வைத்த குறிப்பினான”

இந்தச் சூத்திரத்தில் அவர் கூறுவதென்ன? புலவர்களால் எழுதப்படுகிற நூல் மற்றும் உரை தவிர்த்து, பொதுமக்களால் லெளகீகத்தில் இடம் பெறும் பிசி எனப்படுகிற விடுகதை/புதிர், மந்திரம், முதுமொழி என்கிற பழமொழி மற்றும் குறிப்பு மொழி (body language) என்பன மற்ற இலக்கியங்கள். மொழிப என்று குறிப்பிட்டு இருப்பதின் மூலம் பண்டைய காலத்திலே கூட இவ்வகையான வழக்கு மொழிகள் இருந்தது நிரூபணம் ஆகிறது.

தத்தக்கா புத்தக்கா
தவலைச் சோறு
நெற்றிமா நெருங்கமா
பச்சை மரத்திலே பதவலை கட்டப்
பன்றி வந்து சீராடப்
பண்ணாடை வந்து நெல்லுக் குத்தக்
குண்டுமணி சோறாக்கக்
குருவி வந்து கூப்பிடுது!

இப்பாடல் இடம் பெற்றது மலையருவி எனும் நூலில். இதை, தமிழை ஒழிக்க வந்த பாடல் என்பது சரியா?

தமிழார்வலர்களே, தமிழின் மீதான உங்கள் ஆர்வம் மற்றும் அதீத பற்றினை மதிக்கிறோம், வணங்குகிறோம்! ஆர்வலர் என்பதும், வெறியார்வலர் என்பதும் நூலிழைதான் இடைப்பட்டு நிற்கிறது. ஆர்வலராகவே தொடருங்கள், அதில் வெறியைக் கூட்டுவது நலம் பயக்காது. இதை நான், மேற்கூறிய பதிலுரை அளித்த கெழுதகை நண்பருக்காகச் சொல்வதல்ல!

தமிழ்நாட்டிலும் சரி, புலம் பெயர்ந்த மண்ணிலும் சரி, நிறைய ஆர்வலர்களின் அதிகப் படியான ஆர்வத்தால் தமிழன்னையின் மக்களே ஒதுங்குவதைக் கண்டிருக்கிறேன் நான்!

உணர்ச்சிக் கொந்தளிப்பில் தமிழ், தமிழன் என்று உரக்கப் பேசுவதால் ஆவதென்ன கண்டோம்? இன்றைய சூழலில் வழக்கு மொழியையும், எளிமையையும் போற்றுவதால் மட்டுமே ஓங்கி வரும் தமிங்கிலத்தை ஓரளவாவது கட்டுப் படுத்த முடியும். ஒருவனை தமிழின்பால் ஈர்த்துவிடும் பட்சத்தில், செந்தமிழ் என்பது அவனையறியாமலே அவனுள் புகும் என்பது சொல்லித் தெரிவதுண்டோ?

உரக்கப் பேசி, அறச் சீற்றம் எனும் பெயரில் தனிமனிதன் ஓங்குவதைத் தவிர்த்தல் நலம் பெயர்க்கும். வட அமெரிக்காவிலே, கற்றுத் தேர்ந்த முனைவர்கள், ஆன்றோர் சான்றோர் பலர் தமிழின்பால் பற்றுக் கொண்டு ஆக்கப்பூர்வமான வழிகளிலே முன்னெடுத்துச் செல்கிறார்கள். அவர்கள் வழியில், மற்றவர்களும் சென்று மொழியைக் காத்திடுவோமாக!

கருப்பட்டி வட்டே
கிட்டவந்து ஒட்டேய்!

23 comments:

ஆ.ஞானசேகரன் said...

அப்ப எழுதலாமா? வேண்டாமா?....

பழமைபேசி said...

//ஆ.ஞானசேகரன் said...
அப்ப எழுதலாமா? வேண்டாமா?....
//

தமிழ்ல பேசவே தயங்குற இந்தக் காலத்துல இந்த கெடுபிடி எல்லாம் வேலைக்காகுமா நண்பா?

பழமைபேசி said...

மக்களே, சுவையான காணொளி (30 மணித்துளிகள்) தரவேற்றம் ஆகிக் கொண்டு இருக்கு... சிறிது நேரத்தில் அது காணக் கிடைக்கும்.....

Mahesh said...

//கருப்பட்டி வட்டே
கிட்டவந்து ஒட்டேய்! //

ரிப்பீட்ட்டேய்ய்ய்ய்...

Anonymous said...

//தமிழ்நாட்டிலும் சரி, புலம் பெயர்ந்த மண்ணிலும் சரி, நிறைய ஆர்வலர்களின் அதிகப் படியான ஆர்வத்தால் தமிழன்னையின் மக்களே ஒதுங்குவதைக் கண்டிருக்கிறேன் நான்!//

அது என்னமோ சரிதான்

vasu balaji said...

நாம உங்க பக்கம்.

SPIDEY said...

கெழுதகை appadina enna sir?

ஈரோடு கதிர் said...

//உணர்ச்சிக் கொந்தளிப்பில் தமிழ், தமிழன் என்று உரக்கப் பேசுவதால் ஆவதென்ன கண்டோம்? இன்றைய சூழலில் வழக்கு மொழியையும், எளிமையையும் போற்றுவதால் மட்டுமே ஓங்கி வரும் தமிங்கிலத்தை ஓரளவாவது கட்டுப் படுத்த முடியும். //

மிகச்சரி

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//ஆர்வலராகவே தொடருங்கள், அதில் வெறியைக் கூட்டுவது நலம் பயக்காது. //
சரியாச் சொன்னீங்க பழமை.பேச்சு வழக்கில் ஒரு விஷயத்தை எழுதினால் நிறையப் பேரை சென்றடையும்.அதற்காகப் பிழையாக(இலக்கணப் பிழை,எழுத்துப் பிழை) எழுதுவதையும் ஒப்புக் கொள்ள முடியாது.நான் நினைப்பது முடிந்தவரை தமிழை சரியாக எழுதுவோம் என்பதுதான்.

பழமைபேசி said...

@@ஆ.ஞானசேகரன்
இஃக்ஃஇகி!

@@Mahesh

ஆமாங்கண்ணே...

@@சின்ன அம்மிணி

வாங்க...

@@பாலா...

நன்றிங்க பாலாண்ணே!

@@SPIDEY

கெழுமை என்றால் செறிந்த... கெழுதகை நண்பர் = நட்புச் செறிந்த

@@கதிர்

வாங்க மாப்பு...

@@ஸ்ரீதர்

ஆமாம் நண்பா...

Unknown said...

நண்டக்க புள்ள பெத்து எனக்கு தே பொல்லப்பாச்சுங்குற கதையால்ல இருக்கு..

Unknown said...

நமது தமிழறிஞர் மா.நன்னன் அவர்கள் கூட தமிழை வளர்க்க நினைப்பவர்கள் பேச்சு வழக்கில் எழுதாதீர்கள் என்றே சொல்கிறார். என்றாலும் சிந்தித்ததில் நீங்கள் சொல்வது போல்தான் நானும் முடிவெடுத்துள்ளேன். அதாவது நான் சொல்ல நினைப்பதை அல்லது விரும்புவதை இயன்ற வரையில் நல்ல தமிழில் சொல்வது. வேறு யாரும் சொன்னதை எழுதும்போது, அல்லது நடந்த ஏதாவது ஒன்றைச் சொல்லும் போது, (சிலநேரம் கிண்டலுக்காக) அதை நடந்தவாறே பேச்சு வழக்கில் எழுதுவது.

பழமைபேசி said...

//பட்டிக்காட்டான்.. said...
நண்டக்க புள்ள பெத்து எனக்கு தே பொல்லப்பாச்சுங்குற கதையால்ல இருக்கு..
//

ஆகா... இது நல்லா இருக்கு!

பழமைபேசி said...

//சுல்தான் said...
வேறு யாரும் சொன்னதை எழுதும்போது, அல்லது நடந்த ஏதாவது ஒன்றைச் சொல்லும் போது, (சிலநேரம் கிண்டலுக்காக) அதை நடந்தவாறே பேச்சு வழக்கில் எழுதுவது.
//


ஆமாம் ஐயா... இதுதான் நன்றாகத் தெரிகிறது!

தாராபுரத்தான் said...

100/100 sari

பழமைபேசி said...

//அப்பன் said...
100/100 sari
//

நன்றிங்க ஐயா!

குறும்பன் said...

கி.ராஜநாராயணன் பெரிய எழுத்தாளர் இல்லையா?

உங்க கெழுதகை நண்பர் சிறந்த தமிழ் பற்றாளர்\அறிஞர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

"கருப்பட்டி வட்டேகிட்டவந்து ஒட்டேய்!" எனக்கு பிடித்த ஒன்று.

பழமைபேசி said...

//குறும்பன் said...
கி.ராஜநாராயணன் பெரிய எழுத்தாளர் இல்லையா?
//

அய்ய...பக்கத்துலதான இருக்கீங்க... கேட்டு சொல்லுங்க சித்த! இஃகி!!

நா. கணேசன் said...

converted into cheermai form using:
http://tamilcc.org/thoorihai/thoorihai.php
select tamil-2 > cheermai option
to convert a regular Tamil text
into Cheerai style. Note that
the circle/rectangle/U shape
of kuRil ukara glyph has to
be increased in height to make it
elegant looking.

On Jul 28, 6:11 am, Tirumurti Vasudevan agnih...@gmail.com wrote:

*சீன மொழியிலே classical modern *ன்னு ரெண்டு இருக்கோ?
*பேசாம அப்படி போயிடலாம்.

*திவா

நீண்ட வரலாற‌‌ு‌டைய மொழிகள் யாவில‌‌ு‌ம் இந்த
இர‌‌ு‌தன்மை இர‌‌ு‌க்கிறத‌‌ு‌. Diglossia exists in ancient Chinese,
Arabic, Greek,
Tamil. In an extreme sense, Latin - Italian, Sanskrit - Hindi.

செம்மொழி - வட்டாரமொழி, செய்ய‌‌ு‌ள் - வழக்க‌‌ு‌,
மார்க்கம் - தேசி, கர்நாடக - சினிமா சங்கீதம்,
பரதநாட்டியம் - க‌‌ு‌த்தாட்டம், தோசையில் சாதா,
சிறப்ப‌‌ு‌ (ஸ்பெஷல்), இலக்கியம் - பத்திரிகைத் தமிழ்,
.... இரண்டின் தன்மைகள், நோக்கர், ரசிகர் வெவ்வேற‌‌ு‌.

அதே போல், தமிழ் எழ‌‌ு‌த்தில் உ/ஊ உடைத்த‌‌ு‌ எழ‌‌ு‌த‌‌ு‌ம்
ம‌‌ு‌றை பரவலாகண‌‌ு‌ம். எளிமையாவதால் அத‌‌ு‌
க‌‌ு‌ழந்தைகள‌‌ு‌க்க‌‌ு‌ ம‌‌ு‌தலில் சொல்லித் தரப்பட்டால்
நன்மை விளைய‌‌ு‌ம். ஒர‌‌ு‌ம‌‌ு‌றையில் இர‌‌ு‌ந்த‌‌ு‌
இன்னொன்ற‌‌ு‌க்க‌‌ு‌ செல்ல த‌ூ‌ரிகை இர‌‌ு‌க்கிறத‌‌ு‌.
http://tamilcc.org/thoorihai/thoorihai.php

சாதாரண தமிழையோ, வேற‌‌ு‌ இந்திய பன‌‌ு‌வல்களையோ
இட்ட‌‌ு‌, “சீர்மை” பொத்தானைச் சொட‌‌ு‌க்கி மாற்றினால் போத‌‌ு‌ம்!

நா. கணேசன்

நா. கணேசன் said...

On Jul 28, 5:53 am, "karthige...॰gmail.com"
wrote:

* வரையறைகளைத் தளர்த்த வேண்டியதன் அவசியத்தை எப்போத‌‌ு‌ சொல்ல வந்தால‌‌ு‌ம்,
* "வரையறைகள் வேண்டாம் என்ற‌‌ு‌ சொல்கிறார்கள்" என்ற‌‌ு‌ தாங்களாக அதனை விரிவ‌‌ு‌
* பட‌‌ு‌த்தி "இதனால் மொழி அழிந்த‌‌ு‌ போக‌‌ு‌ம்" என்ற அவல எல்லைக்க‌‌ு‌ அந்த விவாதத்தை
* இழ‌‌ு‌த்த‌‌ு‌ விட‌‌ு‌வத‌‌ு‌ வழக்கமாகிப் போய்விட்டத‌‌ு‌.

* வரையறைகள் (இலக்கணம்) மாறிய‌‌ு‌ம் தளர்ந்த‌‌ு‌மே வந்திர‌‌ு‌க்கின்றன.அவை கல் மேல்
* எழ‌‌ு‌த்த‌‌ு‌க்கள் அல்ல. மணலில் வரைந்த விதிகளே. காலப்போக்கில், காற்ற‌‌ு‌ப்
* போக்கில் மாறக் க‌ூ‌டியனவே.

* அவை மாறக் க‌ூ‌டாத‌‌ு‌ என்ற‌‌ு‌ கட‌‌ு‌மையாகவ‌‌ு‌ம் உரத்த‌‌ு‌ம் சொல்பவர்களின் கண்
* ம‌‌ு‌ன்னாலேயே அவை அந்தந்த காலத்தின் தேவைக்கேற்ப மாறிக் கொண்ட‌‌ு‌தான்
* வர‌‌ு‌கின்றன. நாளிதழ்களில் இன்ற‌‌ு‌ காணப்பட‌‌ு‌ம் (ஒற்றைப் பற்றி அதிகம்
* அலட்டிக் கொள்ளாத) தமிழ் அப்படித்தான் உர‌‌ு‌வாகி உற‌‌ு‌தியாக உட்கார்ந்த‌‌ு‌
* விட்டத‌‌ு‌. இத‌‌ு‌ தமிழின் பிழையான வடிவமல்ல. தளர்ச்சியான வடிவம்தான். ஆனால்
* நாம் ஏற்க‌‌ு‌ம் நிர்ப்பந்தத்திற்க‌‌ு‌ ஆளாகிய‌‌ு‌ள்ளோம்.

* நாளிதழ்களில் இனி திர‌‌ு‌த்தமான செந்தமிழ் என்ற‌‌ு‌ம் இடம் பெறப் போவதில்லை.
* அலட்டிக்கொண்ட‌‌ு‌ என்ன செய்வத‌‌ு‌?
* இயல்பான பரிணாமம்தான்.

இதே கர‌‌ு‌த்த‌‌ு‌ வலைய‌‌ு‌லகில‌‌ு‌ம் அலசப்பட‌‌ு‌கிறத‌‌ு‌. உதாரணமாக,
http://maniyinpakkam.blogspot.com/2009/07/blog-post23.html

இலக்கியம் - பேச்ச‌‌ு‌ இன்ற‌‌ு‌ இர‌‌ு‌நடைகள் தமிழில் தவிர்க்கம‌‌ு‌டியாத‌‌ு‌.

சங்க இலக்கிய நடையிலா இன்றைய வட்டார வழக்க‌‌ு‌களை எழ‌‌ு‌த ம‌‌ு‌டிய‌‌ு‌ம்? தலித் இலக்கியம்? சம்ஸ்கிர‌‌ு‌தம் கலந்த ஸ், ஷ் ஒலியன்கள் மிக‌‌ு‌ந்த அக்ரகார வழக்கம், ... அவற்றை எப்படி எழ‌‌ு‌த‌‌ு‌வதாம்?

கி. ராஜநாராயணன் கதைகள், ஜெயகாந்தன் க‌ூ‌ட இதனைப் பாவித்திர‌‌ு‌க்கலாம்,

ஈழத்த‌‌ு‌ ம‌‌ு‌ற்றம் என்ற பதிவில் ஈழத்தின் வட்டார வழக்க‌‌ு‌கள் பலவற்றை எழ‌‌ு‌தி வர‌‌ு‌கிறார்கள். விகடன் பிரச‌‌ு‌ரம், காமெடியன் வடிவேல‌‌ு‌ திர‌‌ு‌ட்ட‌‌ு‌ லாரி ஏறி சென்னைப் பட்டினம் வந்த‌‌ு‌ பெரிய நடிகர் ஆன கதையைப் ப‌‌ு‌ஸ்தகமாய்ப் போட்டிர‌‌ு‌க்கிறார்கள், மத‌‌ு‌ரை பாஷை அப்படியே இர‌‌ு‌க்கிறத‌‌ு‌. சொக்கவைக்க‌‌ு‌ம் நடை!

ஆனந்தவிகடனின் பிராமணர் பேச்ச‌‌ு‌மொழி மாறி திர‌‌ு‌. வி. க., கல்கி, ... போன்றோர் நிலைக்க‌‌ு‌ பத்திரிகைத் தமிழ் செழ‌‌ு‌மையாகிவிட்டத‌‌ு‌. வலைப் பதிவ‌‌ு‌லகில் பார‌‌ு‌ங்கள். சிலர் பேச்ச‌‌ு‌வழக்கில் என்ன அர‌‌ு‌மையாய் எழ‌‌ு‌த‌‌ு‌கின்றனர். விர‌‌ு‌ம்ப‌‌ு‌வோர் தம் வட்டார, க‌‌ு‌ல பேச்ச‌‌ு‌ வழக்கை எழ‌‌ு‌த்தில் பதிந்தால் தடையா போடம‌‌ு‌டிய‌‌ு‌ம்? தமிழ் வளம் தானே அதனால் க‌ூ‌ட‌‌ு‌கிறத‌‌ு‌.

பெரி. சந்திரா போன்றோர் சொல்வத‌‌ு‌ ஒர‌‌ு‌வகையில் சிறப்ப‌‌ு‌ என்றால‌‌ு‌ம், அவர் 5-6 வர‌‌ு‌டத்திற்க‌‌ு‌ ஒர‌‌ு‌ம‌‌ு‌றை எழ‌‌ு‌த‌‌ு‌கிறார் தானே. பத்திரிகை உலகின் காலக் கெட‌‌ு‌பிடிகள், அவசரகதி எல்லாம் வேற‌‌ு‌. ம‌‌ு‌தலில் தமிழில் எழ‌‌ு‌தட்ட‌‌ு‌ம். செந்தமிழ் அதிலிர‌‌ு‌ந்த‌‌ு‌ தானாய் இலக்கியம் எழ‌‌ு‌தப் பிறந்த‌‌ு‌விட‌‌ு‌ம்.

என் 2 நயாபைசா :)

நா. கணேசன்

* ரெ.கா.

* On Jul 28, 11:56 am, "Maravanpulavu K. Sachithananthan"

wrote:
** வணக்கம்.
** திர‌‌ு‌. கார்த்திகேச‌‌ு‌ அவர்கள் வரையறை பற்றிய க‌‌ு‌றிப்பைத் தந்தபொழ‌‌ு‌த‌‌ு‌, வரையறையில்
** தமிழர‌‌ு‌க்க‌‌ு‌, சிறப்பாகத் தமிழகப் ப‌‌ு‌த‌‌ு‌வைத் தமிழர‌‌ு‌க்க‌‌ு‌ எவ்வித அக்றைய‌‌ு‌ம் இல்லை
** என்பதை அவர் உளத்திர‌‌ு‌த்தவில்லைப்போல‌‌ு‌ம்!

ராஜ நடராஜன் said...

காபியல்ல குளம்பின்னு கூட ஒரு காலத்துல தமிழ் வளர்க்க முயற்சி செய்தார்கள்.ஆனால் சில வார்த்தைகளுக்கு உயிர் ஊட்ட முடியவில்லை.

ஐ.நா வில் தமிழ் இனி மெல்ல சாகும் என்று புள்ளி விபரம் தந்தார்கள் முன்பு.வலைத்தளம் அதனைப் பொய்ப்பிக்கும் சாத்தியம் தெரிகிறது.
(எனவே எப்படியாவது அடிச்சு ஆடுனாலும் சரி என்னைய மாதிரி தூங்கிகிட்டே ஆடினாலும் சரி!தமிழ் மாடினா சரிங்கண்ணா)

பழமைபேசி said...

//நா. கணேசன் said... //

செறிவான தகவல்களுக்கு மிக்க நன்றி அண்ணா!

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...

(எனவே எப்படியாவது அடிச்சு ஆடுனாலும் சரி என்னைய மாதிரி தூங்கிகிட்டே ஆடினாலும் சரி!தமிழ் மாடினா சரிங்கண்ணா)
//

அண்ணா வாங்க, எங்க ஆளையே காணோம்?!