7/02/2009

வீதம்பட்டி வேலூர்ச் சந்தை கதை கேளு!

தெக்க செமதாங்கியில இருந்து வடக்க ஜக்கார்பாளையம் போற இட்டேரி வரைக்கும் ரெண்டு மைல் தூரம், மேக்க வீதம்பட்டி இட்டேரில இருந்து கெழக்க புதூர் போற இட்டேரி வரைக்கும்னு நொம்பப் பெரிய ஊர் வேலூர்.

மேக்கயே கொஞ்சம் தெக்க சாஞ்சாப்புல போனா வீதம்பட்டி, கொஞ்சம் வடக்க சாஞ்சாப்புல போனா ஜக்கார் பாளையம். கெழக்க சலவநாய்க்கன்பட்டிப் புதூர், கெழக்கயே கொஞ்சம் பக்கவாட்டுல போனா வாகத்தொழுவு, சங்கமநாய்க்கன் பாளையம், அரசூர்னு பல ஊருகளுக்கு நடுவுல சிறப்பா இருக்குற ஊருதான் வேலூர்.

அந்த வழியா செஞ்சேரி மலைக்குப் போன வேலவன், இந்த ஊர் இருக்குற இடத்துல தன்னோட வாகனமான மயிலை விட்டு இறங்கி தன்னோட வேலையும் நட்டு வச்சுட்டு, சுத்து பத்து கிராமத்தைச் சேந்தவிகளுக்கு அருள் பாவிச்சதாகவும், அதனாலதான் இந்த ஊருக்கு வேலூர்னு பேர் வந்ததாகவும் ஒரு ஐதீகம்.

ஊருக்குள்ள ஏராளமான அரசமரம், வேப்பமரம், புளியமரம், புங்கமரம், ஆலமரம், ஆவரம்பூனு, ஒரே பசுமையாவும் பொலிவாவும் களைகட்டி இருக்கும் இந்த ஊர். தலைவாசல்ல இருக்குறது பெரிய விநாயகர் கோயில். முன்னாடி பெரிய மைதானம். மைதானத்துல அரசமரம் வேப்பமரம் ஒண்ணா வளர்ந்து இருக்குற ரெண்டு மேடைக. ஊர்சனங்க எல்லாம் ஒண்ணு விநாயகங் கோயில் திண்ணைல, இல்லாட்டி இந்த மேடைலதான் இருப்பாங்க. எப்பவும் நிழலும் காத்துமா குளுமையா இருக்கும் அந்தக் கோயிலடி.

கோயிலுக்கு வலதுபொறம் சந்தைப்பேட்டை. சுத்துபத்து கெராமங்களுக்கும் வாராவாரம் திங்கக்கெழமை, இங்கதான் சந்தை. கோயிலுக்கு இடது பொறம், திண்ணைப் பள்ளிக்கூடமா இருந்து வளந்து இருக்குற பள்ளிக்கூடம். அந்தக் காலத்துல எல்லாம் பட்டம் படிச்சவங்களைப் பாக்கவே முடியாதாம். ஆனா, இந்த பள்ளிக்கூடத்துல படிச்சவங்க அப்பவே பட்டம் வாங்கி இருந்தாங்களாம். அதுல தாமோதரசாமி அய்யாவும் ஒருத்தர். "பாம்பைக் கண்டா படையும் நடுங்கும்!". ஆனா, அந்தப் பாம்புகூட தாமோதரசாமி அய்யாவைக் கண்டா வணக்கம் போடுமாம். அந்த அளவுக்கு அவர் பண்பானவர். நொம்ப நல்லவர். அப்பேர்ப்பட்ட நல்லவரை பெத்த ஊர்தான் வேலூர்.

இப்படிப்பட்ட ஊர்ல சரவணசாமி அய்யான்னு ஒருத்தர். அவரும் நொம்ப நல்லவர், நெறஞ்ச மனசுக்கு சொந்தக்காரர். தோட்டத்துல குடியிருந்துட்டு வெவசாயம் பாக்குறவர். திங்கக்கெழமை ஊருக்குள்ள வந்து தானிய யாவாரம் பண்ணுற அந்தியூர் அய்யாகிட்ட, தான்வித்த இராகி பத்து மூட்டைக்கு உண்டான தொகை ஆயிரத்து முந்நூறு ரூவாவை வாங்கிட்டு சந்தைக்குப் போறார்.

சரவணன் அய்யாவுக்கு இயற்கையிலியே குருவிங்க, கிளி, மயிலு இப்படி பறவைகன்னா உசுரு. அன்னைக்குப் பாருங்க, அந்த சந்தைக்கு முன்னாடி இருக்குற "அரசமர வேப்பமர" மேடைல ஒருத்தன் குருவி வித்துகிட்டு இருந்தான். சந்தைக்கு வரப்போக இருந்த சனங்களும் கூடி நின்னு வேடிக்கை. குருவிக்காரன் ரூவா அம்பதுன்னு ஏலத்தை ஆரம்பிச்சான். சரவணன் அய்யாவுக்குத்தான் பறவைகன்னா உசுரு ஆச்சே.

"இந்தக் குருவி சாதாரணக் குருவி இல்லீங்கோ, பேசும், பாடும், அம்பது ரூவா, அம்பது ரூவா!"

கூட்டத்துல இருந்த இனியொருத்தர், "அறுவது ரூவா!"

சரவணன் அய்யா, "நூறு ரூவா!"

கூட்டத்துல இருந்த வேறொருத்தர், "நூத்தி அம்பது!"

இப்படியே ஏலம் விறு விறுப்பாப் போச்சு. சந்தைக்கு வந்த சனமெல்லாம் கூடி நின்னு வேடிக்கை பாக்குது. சந்தைல பொரி காத்துல பறக்குது. கொய்யாப் பழத்தை, காக்காய்ங்க கொத்தித் திங்குது. ஆனா, வித்து யாவாரம் பண்ண வந்தவிங்க கடைய விட்டுப்போட்டு, இங்க வேடிக்கை பாத்துட்டு இருக்காங்க. அந்த அளவுக்கு ஒரே விறுவிறுப்பான ஏலம். ஏலத்தொகை எண்ணூறு ரூவா ஆனவுடனே ஏலம் கேக்குறவங்க எண்ணிக்கை கொறஞ்சு போச்சு. ரெண்டே பேருதான் இப்ப. அதுல நம்ப சரவணன் அய்யாவும் ஒருத்தர்.

சரவணன் அய்யா, "யார்றா அது, ஏட்டிக்குப் போட்டியா? இந்தா நான் சொல்லுறேன், எண்னூத்தி அம்பது ரூவா!"

ரெண்டொரு நிமுசங் கழிச்சு, "தொளாயிரம் ரூவா!"

சரவணன் அய்யா, "யாருகிட்ட? இந்தா தொள்ளாயிரத்து ஒண்ணு!"

மறு பக்கத்துல, "தொள்ளாயிரத்து அம்பது!"

கோவத்துல சரவணன் அய்யா கூட்டத்தைப் பாத்து, "டேய், நீ யார்றா? வேணாம்! இந்தா சொல்லுறேன் ஆயிரம் ரூவா!"

குருவி விக்க வந்தவன், "சரிங்க அய்யா, கோவப்படாதீங்க... இனி இதுக்கு மேல யாரு எவ்வளவு குடுத்தாலும் குருவி உங்களுக்குத்தான், நீங்க சொன்ன அதே ஆயிரம் ரூவாய்க்கு!"

அய்யாவுக்கு நொம்ப சந்தோசம். இராகி வித்த காசுல ஆயிரத்த எடுத்து குடுத்துப் போட்டு, குருவிய வாங்கும் போது, "என்னடா, குருவி கொழு கொழுன்னு நல்லாத்தான் இருக்கு, பேசுமல்லோ?"

குருவி வித்தவன் துண்ட எடுத்து இடுப்புல கட்டிக்கிட்டு பணிவா பவ்யமா, "அய்யா, என்ன இப்படிக் கேட்டுப் போட்டீங்க? இந்நேரம், உங்ககூட ஏட்டிக்குப் போட்டியா ஏலம் கூவுனதே குருவிதானுங்..."

41 comments:

வேளராசி said...

இயல்பான நகைச்சுவை.இப்படி ஊர்களை மையப்படுத்தி க.சீ.சிவக்குமார் ( மூலனூர்,தாராபுரம்)எழுதுவார்.அதுபோலவே நன்றாக உள்ளது.

பழமைபேசி said...

//வேளராசி said...
இயல்பான நகைச்சுவை.இப்படி ஊர்களை மையப்படுத்தி க.சீ.சிவக்குமார் ( மூலனூர்,தாராபுரம்)எழுதுவார்.அதுபோலவே நன்றாக உள்ளது.
//வாங்க! நொம்ப நல்லா இருக்குதுங்ளா? நன்றிங்க!!

Kasi Arumugam said...

எதுக்காலிருந்து பேசறமாதரயே எளுதுறீங்க. பாடு பழமைய்க் கேட்டா நல்லாத்தா இருக்குதுங்க.

பழமைபேசி said...

//Kasi Arumugam - காசி said...
எதுக்காலிருந்து பேசறமாதரயே எளுதுறீங்க. பாடு பழமைய்க் கேட்டா நல்லாத்தா இருக்குதுங்க.
//

வாங்ண்ணா! வாங்...... .

அண்ணா, என்னுதா இருந்தாலும், நம்மூரு இல்லீங்ளா? தாய் புள்ளையா இருந்த ஊருங்கோ..... நொம்ப நன்றிங்ண்ணா!!

Mahesh said...

இதப் படிக்கும்போது எனக்கு மேலாண்மை.பொன்னுச்சாமி கதைக ஞாபகம் வந்துச்சு. பேச்சு வழக்கு உங்களுக்கு நல்லா கைகூடி வருது.

பழமைபேசி said...

//
Mahesh said...
இதப் படிக்கும்போது எனக்கு மேலாண்மை.பொன்னுச்சாமி கதைக ஞாபகம் வந்துச்சு. பேச்சு வழக்கு உங்களுக்கு நல்லா கைகூடி வருது.

//
வாங்க மகேசு! எல்லாம் நம்ம ஊர் மகிமை தான்.... கூட மாடா நீங்க எல்லாம் இருக்குறீங்க..... அதான்!

Anonymous said...

Romba nalla irunthathu..
ellarum comedynu solluraanga
but enakku tragedy poola irukku
paavam saravanan aiya :(

- Raji

யூர்கன் க்ருகியர் said...

சிரிப்பு கதை!

பழமைபேசி said...

//Romba nalla irunthathu..
ellarum comedynu solluraanga
but enakku tragedy poola irukku
paavam saravanan aiya :(

- Raji
//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! ஆசுவாசப்படுத்திக்குங்க...கதைதானே!....

பழமைபேசி said...

//
ஜுர்கேன் க்ருகேர் said...
சிரிப்பு கதை!
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜுர்கேன் க்ருகேர்!

பழமைபேசி said...

//emsridar commented on your story 'வீதம்பட்டி வேலூர்ச் சந்தை கதை கேளு!' 'நன்றி '
//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி emsridar!

Karthikeyan G said...

:)) ரொம்ப நல்லா இருக்கு.

ஈரோடு கதிர் said...

பழமை... உங்கள் எழுத்து நடையும், அதில் குடியிருக்கும் வேகமும்....

ரசித்தேன்....ரசித்தேன்....ரசித்தேன்....ரசித்தேன்....ரசித்தேன்....ரசித்தேன்....ரசித்தேன்....ரசித்தேன்....ரசித்தேன்....ரசித்தேன்....ரசித்தேன்....ரசித்தேன்....ரசித்தேன்....ரசித்தேன்....ரசித்தேன்....ரசித்தேன்....ரசித்தேன்....ரசித்தேன்.... ரசித்துக் கொண்டேயிருக்கிறேன்..



//இந்நேரம், உங்ககூட ஏட்டிக்குப் போட்டியா ஏலம் கூவுனதே குருவிதானுங்..." //

கிளைமேக்ஸ்.... சூப்பர்

தீப்பெட்டி said...

:-))

நாகா said...

இது 4ம் நெம்பர்ல பெதப்பம்பட்டி வழியா போற V.வேலூரு தானுங்கோ?

பழமைபேசி said...

//நாகா said...
இது 4ம் நெம்பர்ல பெதப்பம்பட்டி வழியா போற V.வேலூரு தானுங்கோ?
//

ஆமாங்கோ... நீங் நம்மூர்க்காரவிக போல இருக்குதூ....

நாகா said...

நம்முளுக்கு உடம்பேட்டக்கி தெக்கால திருமூத்திசாமி மல போற வளீல எலயமுத்தூர் பிரிவுங்கோ..

பழமைபேசி said...

அப்படிப்போடுங்க.... நம்ம பசங்க எல்லாம் அங்கதான இருக்காங்க... பாபு, பிரகாசு, பாலான் எல்லாரும்.... எங்க சின்னம்மாவிங்க தோட்டம் அங்க் இருக்குது.... பள்ளபாளையம் பிரிவுல... எலைய முத்தூர் பிரிவுல நரிக்கல்பட்டி சின்னம்மாவிங்க தோட்டமிருக்குது... போடிபட்டில நெறைய கூட்டாளிக....இஃகிஃகி!

நானு ஒன்னாம் போற அந்தியூரு... தளி-கோமங்கலம் வண்டி....

ஈரோடு கதிர் said...

மாப்பு... நான் கரட்டுமடம் காந்தி கலா நிலையம் ஸ்கூல்...

நாகா said...

மணீண்ணா, உங்கள நானு நெம்ப நாளாவே படிச்சுட்டு இருக்கறேன், நம்மொ தமிளு கொஞ்சூண்டு தடுமாறுங்கறதுனால, இப்பத்தானுங்க எளுதவே ஆரம்பிச்சுருக்கறங். இன்னக்கி உங்க வேலூரு சந்தயப் பாத்ததும் அது அடங்காம வெளிய வந்துருச்சுங்க.. பெறகால சும்மா இருக்கையில நம்ம வூட்டுக்கும் வந்து பளமையாடிட்டுப் போங்க..

நாகா said...

உங்களோட மின்னஞ்சல் அனுப்புங்க.. என்னோடது ktnagu@gmail.com

நாகா said...

கதிரண்ணா நம்முளுக்கு உடன்பேட்ட கெவுருமெண்டைஸ்கூலு.. நம்ம அண்ணம்புள்ள இப்பொ உங்க பள்ளிக்கூடத்துலதாம்படிக்குது :)

நாகா said...

அப்பறொம் நம்ம மடத்துக்கொளத்துல இருந்து ஒருத்தரு senthilinpakkangal.blogspot.com இங்க வ்ந்து நம்முளுக்கு தமிழ் சொல்லித்தர்ராரு.. எங்க போனாலும் நம்மூர்காரவிங்களப் பாத்தா எனக்கு அம்புட்டு சந்தோசம். இன்னக்கி உங்க வூட்டுல பளமயாடினதுல இன்னியிம் பயங்கர சந்தோசம்.. :)

பழமைபேசி said...

//கதிர் said...
மாப்பு... நான் கரட்டுமடம் காந்தி கலா நிலையம் ஸ்கூல்...
//

ஆமாங்க, சுகந்தி கொட்டாய்ல திருட்டு ஆட்டு முழியோட ஒருத்தரைக் கண்ட ஞாவகம் வருது...இஃகிஃகி!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அண்ணாச்சி, நாகா சொன்ன மடத்துக்குளத்துப் பய நான் தான்..

ஜோரா நம்மூரப் பத்தி எழுதியிருக்கீங்க..

சந்தை பேரம் அட்டகாசம்..

vasu balaji said...

நல்ல கதையா இருக்கே! பாரதியார் காக்கை குருவி எங்க சாதின்னு பாடினது இதானா? மனுசன் காக்கா புடிக்கிறான், குருவி மனுசன மாதிரி ஏமாத்துது?

செந்திலான் said...

வணக்கம். எனது அறைத் தோழர்(room mate) ஊர் அது தானுங்க .அவர் நீங்க இப்படி எழுதிருக்கரத ஆச்சரியமா கேட்டார்.இப்போ சந்தையே இல்லேன்னு ரொம்ப வருத்தமாக சொன்னாருங்க அப்படீங்களா ?

பழமைபேசி said...

அப்படீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்.....
யாருங்க அவரு? என்னைத் தெரியுமான்னு கேளுங்க.... மணிவாசகம், மணிவாத்தியார் மாணவன். ஸ்ரீராம், பரமசிவன், கணேசன், சோடாக்கடை சுப்பு, ரொட்டிக்கடை சுப்பு எல்லாம் என் நண்பர்கள்...

Unknown said...

எனுங்னா நம்மூர்க்கு பக்கத்துல ஒரு வேலுரூ இருக்குதுங்களா..?

priyamudanprabu said...

///
மேக்கயே கொஞ்சம் தெக்க சாஞ்சாப்புல போனா வீதம்பட்டி, கொஞ்சம் வடக்க சாஞ்சாப்புல போனா ஜக்கார் பாளையம். கெழக்க சலவநாய்க்கன்பட்டிப் புதூர், கெழக்கயே கொஞ்சம் பக்கவாட்டுல போனா வாகத்தொழுவு, சங்கமநாய்க்கன் பாளையம், அரசூர்னு பல ஊருகளுக்கு நடுவுல சிறப்பா இருக்குற ஊருதான் வேலூர்.
///

அண்ணே இந்த ஊரெல்லாம் எந்த நாட்டுல இருக்கு
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

priyamudanprabu said...

அந்த வழியா செஞ்சேரி மலைக்குப் போன வேலவன், இந்த ஊர் இருக்குற இடத்துல தன்னோட வாகனமான மயிலை விட்டு இறங்கி தன்னோட வேலையும் நட்டு வச்சுட்டு, சுத்து பத்து கிராமத்தைச் சேந்தவிகளுக்கு அருள் பாவிச்சதாகவும், அதனாலதான் இந்த ஊருக்கு வேலூர்னு பேர் வந்ததாகவும் ஒரு ஐதீகம்.

/////
அண்ணே
எங்க ஊர் (பொத்தனூர்-நாமக்கல் மாவட்டம்)பக்கத்துல வேலுர் ஒன்று இருக்கு(பரமத்தி வேலூர்னு சொல்லுவாய்க) தெரியுமா?

priyamudanprabu said...

////
குருவி வித்தவன் துண்ட எடுத்து இடுப்புல கட்டிக்கிட்டு பணிவா பவ்யமா, "அய்யா, என்ன இப்படிக் கேட்டுப் போட்டீங்க? இந்நேரம், உங்ககூட ஏட்டிக்குப் போட்டியா ஏலம் கூவுனதே குருவிதானுங்..."
///

அட ?????????

Anonymous said...

//உங்ககூட ஏட்டிக்குப் போட்டியா ஏலம் கூவுனதே குருவிதானுங்..." //

கடைசீல ஒரு திருப்பம் வைச்சுப்போட்டீங்க பாருங்க, நெம்ப நல்லா இருந்துச்சுங்க.

பழமைபேசி said...

@@கதிர்
@@Karthikeyan G
@@தீப்பெட்டி
@@ ச.செந்தில்வேலன்

நன்றி மக்களே!

@@செந்தில்

அவர் யார்னு சித்த சொல்லுங்க!

//பாலா... said...
நல்ல கதையா இருக்கே! பாரதியார் காக்கை குருவி எங்க சாதின்னு பாடினது இதானா? மனுசன் காக்கா புடிக்கிறான், குருவி மனுசன மாதிரி ஏமாத்துது?
//

பாலாண்ணே, வணக்கம்! நல்ல சுகம்தானே?

@@பிரியமுடன் பிரபு

வாங்க பிரபு, தெரியும்....

@@சின்ன அம்மிணி

நம்மூர் அம்மணி, நன்றிங்க!

//பட்டிக்காட்டான்.. said...
எனுங்னா நம்மூர்க்கு பக்கத்துல ஒரு வேலுரூ இருக்குதுங்களா..?
//

ஆமுங்...

செந்திலான் said...

அண்ணே அவரோட சொந்த ஊர் தான் அது ஆன அவர் பொறந்தது வளந்தது எல்லாம் கோயமுத்துருங்க.
அவரோட அப்பா அம்மா இப்ப அங்க தான் இருக்காங்களாம் அவங்க அப்பா பேரு சுப்பிரமணியன்
என்கூட ஸ்கூல் ல படிச்சவங்க பிரபு (சும்மா நெடு நெடுன்னு இருப்பாரு),ரவிச்சந்திரன்,சந்தீப் அப்படின்னு மூணு பெற எனக்கு தெரியும் உங்களுக்கு தெரியுதா ?

பழமைபேசி said...

//செந்தில் said...
அண்ணே அவரோட சொந்த ஊர் தான் அது ஆன அவர் பொறந்தது வளந்தது எல்லாம் கோயமுத்துருங்க.
அவரோட அப்பா அம்மா இப்ப அங்க தான் இருக்காங்களாம் அவங்க அப்பா பேரு சுப்பிரமணியன்
என்கூட ஸ்கூல் ல படிச்சவங்க பிரபு (சும்மா நெடு நெடுன்னு இருப்பாரு),ரவிச்சந்திரன்,சந்தீப் அப்படின்னு மூணு பெற எனக்கு தெரியும் உங்களுக்கு தெரியுதா ?
//

அடச்சே... யாருங்க அது? அவங்க வீடு எங்கன்னு கேளுங்க? எங்க வீடு ரொட்டிக்கடை கிருஷ்ணன்(சுப்பு) அய்யாவிங்க வீட்டுக்குப் பக்கம்... இப்ப அங்க ஒரு மளிகைக் கடை இருக்கு....

கணக்குப் பிள்ளை மகன் இரவி தெரியுமான்னு கேளுங்க அவருக்கு?? அவனும் நானும் ஒரு வகுப்பு...

rathinamurthy said...

anna,
vanakkam nga..namma oor palladam pakkam elavanthi nga..namma oor tamizla netla padikka romba santhosama irunthathu nga..

rathina

பழமைபேசி said...

//rathinamurthy said...
anna,
vanakkam nga..namma oor palladam pakkam elavanthi nga..namma oor tamizla netla padikka romba santhosama irunthathu nga..

rathina
//

இலவந்திங்களா, நான் கேத்தனூர், புள்ளியப்பம்பாளையம் எல்லாம் அடிக்கொருக்கா வாறதுதானுங்...

செந்திலான் said...

//இலவந்திங்களா, நான் கேத்தனூர், புள்ளியப்பம்பாளையம் எல்லாம் அடிக்கொருக்கா வாறதுதானுங்... //

அப்படியே இன்னும்ம் கொஞ்ச கெழக்கால வந்தீங்கனா நம்மூர் புத்தரச்சல் நா

rathinamurthy said...

//இலவந்திங்களா, நான் கேத்தனூர், புள்ளியப்பம்பாளையம் எல்லாம் அடிக்கொருக்கா வாறதுதானுங்...

ஓஹோ ..அப்டிங்களா !! ரொம்ப சந்தோசம் :)

rathinamurthy said...

Senthi Said
//அப்படியே இன்னும்ம் கொஞ்ச கெழக்கால வந்தீங்கனா நம்மூர் புத்தரச்சல் நா

புத்தரச்சல் தெரியாமைங்களா !! ஈஸ்வரன் கோவில்க்கு அடிக்கடி வருவம்ங்க !