7/26/2008

கவி காளமேகப் புலவரின் பாடல் ஒன்று

"தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி"

என்ற கவி காளமேகப் புலவரின் பாடலைப் பார்த்தால் சற்றுத் திகைக்க வேண்டி வரும். இதோ அதன் பொருள்:

தாதி - தோழியின்(அடிமைப் பெண்ணின்)
தூதோ- மூலமாக அனுப்பும் தூது
தீது - நன்மை பயக்காது!
தத்தை- (நான் வளர்க்கும்) கிளியோ
தூது - தூதுப் பணியில் தூதை
ஓதாது - (திறம்பட) ஓதாது!
தூதி தூது - தோழியின் தூதோ
ஒத்தித்த தூததே - நாளைக் கடத்திக் கொண்டே போகும்.
தாதொத்த - (ஆகவே) பூந்தாதினைப் போன்ற
துத்தி - தேமல்கள்
தத்தாதே- என் மேல் படராது
தேதுதித்த - தெய்வத்தை வழிபட்டுத்
தொத்து - தொடர்தலும்
தீது - தீதாகும்
தித்தித்தது _ தித்திப்பு நல்கும் என் காதலனின் பெயரை
ஓதித் திதி - ஓதிக் கொண்டிருப்பதையே செய்வேனாக!


கவிஞர் கண்ணதாசன் 'வானம்பாடி' திரைப்படத்துல, இதே பாடலை:


நடுவர்- உன்னுடைய கேள்விக்கெல்லாம் அவங்க பதில் சொல்லிட்டாங்க இனிமேல் அவங்க கேள்வி கேக்கலாமில்லே?

ஆண்- கேக்க சொல்லுங்க....

பெண்-
தாதி தூது தீது தத்தும் தத்தை சொல்லாது..
தூதி துது ஒத்தித்தது தூது செல்லாது..
தேது தித்தித் தொத்து தீது தெய்வம் வராது - இங்கு
துத்தி தத்தும் தத்தை வாழ தித்தித்ததோது..


ஆண்- கேள்வியா இது ? என்ன உளர்றாங்க ?

நடுவர்- அவங்க ஒண்ணும் உளறலே.. நீதான் திணர்றே

ஆண்- நான் திணர்றேனாவது..

நடுவர்- பின்ன என்ன? வேணும்னா நீ தோல்விய ஒப்புக்க.. அவங்களே அர்த்தம் சொல்றாங்க

ஆண்- முதல்ல அர்த்தத்தை சொல்ல சொல்லுங்க.. அப்புறம் பேசலாம்

நடுவர்- சரி சொல்லுங்க..

பெண்-
அடிமைத் தூது பயன்படாது கிளிகள் பேசாது
அன்புத் தோழி தூது சென்றால் விரைவில் செல்லாது
தெய்வத்தையே தொழுது நின்றால் பயனிருக்காது - இளம்
தேமல் கொண்ட கன்னி வாழ இனியது கூறு.


17 comments:

TBCD said...

அரிய பாடலை விளக்கத்துடன் தந்தமைக்கு நன்றி..

ers said...

படத்தை பாத்தா இளமையா இருக்கிறீர்கள். ஆனால் இந்த அளவுக்கு பழைய காளமேக புலவர் பாடலை பாடிகிறீர்களே...

rapp said...

இதை வானம்பாடி எனும் படத்தில் வரும் 'ஆண்கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக' என்ற பாடலில் கண்ணதாசன் உபயோகப்படுத்தி இருப்பார்

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

தகர வரிசையில் மட்டும் ஒரு கவிதை. ஆகா...மிக்க நன்றி...

பழமைபேசி said...

//அரிய பாடலை விளக்கத்துடன் தந்தமைக்கு நன்றி...//
யாம் பெற்ற இன்பம் வையகமும் பெறட்டுமே.....

பழமைபேசி said...

//தமிழ்சினிமா said... படத்தை பாத்தா இளமையா இருக்கிறீர்கள். ஆனால் இந்த அளவுக்கு பழைய காளமேக புலவர் பாடலை பாடிகிறீர்களே...?//

இளசுகளும் பழையதை தெரிஞ்சுக்கணும் இல்லீங்களா..... பழைமை பொன்னானது.....

பழமைபேசி said...

//rapp said...
இதை வானம்பாடி எனும் படத்தில் வரும் 'ஆண்கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக' என்ற பாடலில் கண்ணதாசன் உபயோகப்படுத்தி இருப்பார்//

தகவலுக்கு மிக்க நன்றி....

பழமைபேசி said...

//மதுவதனன் மௌ. said...
தகர வரிசையில் மட்டும் ஒரு கவிதை. ஆகா...மிக்க நன்றி...//
இனியும் பல பதியனும்....

சீமாச்சு.. said...

நல்லா இருக்கு பழமைபேசி.. இதெல்லாம் பழமை-ன்னு ஏன் நினைக்கிறீங்க...

தொடர்ந்து எழுதுங்க..

பழமைபேசி said...

//Seemachu said...
நல்லா இருக்கு பழமைபேசி.. இதெல்லாம் பழமை-ன்னு ஏன் நினைக்கிறீங்க...

தொடர்ந்து எழுதுங்க..
//
நன்றீங்க அய்யா.... தெரிஞ்ச தகவல்களை பதிய வைக்கிற ஒரு முயற்சிதானுங்க.....

வெற்றி said...

அருமையான பதிவு.
மிக்க நன்றி.

பழமைபேசி said...

//வெற்றி said...
அருமையான பதிவு.
மிக்க நன்றி.
//
நன்றி நண்பா.... எனது மற்ற பதிவுகளும் பார்ப்பீராக!!

சதங்கா (Sathanga) said...

வலைச்சரத்தில் இருந்து பரிசலாரின் தோணியில் வந்திருக்கிறேன்.

இந்தப் பாடலை ஒரு திரைப்படத்தில், நகைச்சுவை நடிகர் பாஸ்கர் சொல்லுவார். அங்கே தான் கவி காளமேகம் பற்றி தெரிந்தது. பின் 'தனிப் பாடல் திரட்டு' வில் கவியின் ஏகப்பட்ட பாடல்கள் படித்து அதிசயமோ அதிசயம்.

அருமையான விளக்கத்திற்கும் வாழ்த்துக்கள்.

பழமைபேசி said...

//சதங்கா (Sathanga) said...

அருமையான விளக்கத்திற்கும் வாழ்த்துக்கள்.
//

வாங்க! நன்றி!!

Unknown said...

Tamil my life

தேவதையின் எட்வின் said...

அருமை....

புது கவிதைகளை மட்டுமே இதுவரை நான் எழுதியுள்ளேன்
கவிதைகள் இப்படியும் எழுதலாமா
இப்படியும் பொருள் அமையுமா
ஆச்சர்யம்....கவியே

arunsaravanan said...

இந்த த வரிசை பாடல் தெனாலி ராமன் படத்தில் சிவாஜிகணேசன் பாடி இருப்பார். அந்த பாடலை தேடும்போது உங்க ப்ளாகை படிக்க நேர்ந்தது. அருமை நண்பா