7/06/2008

கீரைகள்

நம்ம ஊருல எல்லாமே கீரை தானே?! கீரை மசியல், கீரை வடை என்னோட விருப்பம். உங்க முதல் கேள்விக்கு ஓரளவுக்கு ஒரு வரிசை கொண்டு வரலாம். கண்டிப்பா, அது பூர்த்தியான வரிசையா இருக்காது. ஆனா, ரெண்டாவது கேள்வி கேட்டீங்க பாருங்க, அதாவது என்ன பலன்கள்னு. ரொம்ப கஸ்டம். வனத்துல காட்டுல இருக்குற சித்தர்கள், ஆதிவாசிங்களத்தான் கேக்கணும். ஹி! ஹி!! ஆனாலும், கிராமத்துசனங்களுக்கு கொஞ்சமாவது தெரிஞ்சி இருக்கணும். வாய்ப் புண்ணுக்கு நாங்க மணல் தக்காளிக்கீரை சாப்டுவோம். இது மாதிரி ஒவ்வொரு கீரைக்கும் ஒரு பிரத்தியேகமான குணம் இருக்கும். ஹ்ம், நீங்கள்லாம் அத தெரிஞ்சி, குழுமம் கூடும் போது செஞ்சி போட்டா, நாங்க வேண்டாம்னா சொல்லப் போறோம்?!

அகத்திக்கீரை
அறுகீரை
கரிசலாங்கண்ணி
கறிவேப்பிலை
குத்துப்பசலை
குப்பை கீரை
கொடிப்பசலை கீரை
கொத்துமல்லிக்கீரை
சக்ரவர்த்திக்கீரை
சிறு கீரை
சிலோன் கீரை
சுக்காங் கீரை
தண்டுக் கீரை
பண்ணக் கீரை
பருப்புக் கீரை
புதினாக் கீரை
புளிச்ச கீரை
புளியாரை
பொன்னாங்கண்ணி
மணல் தக்காளி
ஆரைக்கீரை
முருங்கைக்கீரை
முளைக்கீரை
முல்லுக்கீரை
வல்லாரை
வெந்தயக்கீரை
வேளைக்கீரை
நச்சுக்கொட்டை கீரை
புண்ணாக்கு கீரை
பாலக்கீரை
கோங்குரா கீரை
தூதுவளை
முடக்கத்தான்
புதினா
முள்ளங்கிக்கீரை
வாழைப்பூ கீரை
சண்டிக் கீரை
.......

புண்ணாக்கு கீரை


No comments: