7/12/2008

பிறழ்ந்த பழமொழிகள்-2

பூராடத்தாள் கழுத்துல நூல் ஆடாது!

எந்த சோதிடத்துலயும், பெரும்பாலான சனங்க நினைக்கிற மாதிரி, 'பூராட நட்சத்திர பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நெலைக்காது'னு சொல்லலையாம். மாறா, நேர் எதிரா சொல்லி இருக்காங்களாம். ஆமாங்க, பூராட நட்சத்திர பொம்பளைக கழுத்துல இருக்குற தாலி ஆட்டம் காணாதுங்றதுதான் 'இந்த பூராடத்தாள் கழுத்துல நூல் ஆடாது'ன்னு சொல்லுறது.

அடி ஒதவுற மாதிரி, அண்ணன் தம்பி ஒதவ மாட்டாங்க!

அடின்னா கை காலால எத்துறது இல்லைங்க. அவங்க போற அடிய( வழியை)தொடர்ந்து போய் வாழ்க்கைல முன்னேறுறதக் காட்டிலும் அண்ணன் தம்பி ஒதவி செய்யுறதுல சிறப்பு, பலன் குறைவு தான். அதுதான், 'அடி ஒதவுற மாதிரி அண்ணன் தம்பி ஒதவ மாட்டாங்க'.

களவும் கற்று, மற!

ஏங்க, 'கடினப்பட்டு வித்தையக் கத்து, அப்புறம் மறந்துரு'ன்னு யாராவது சொல்லுவாங்களா? அது அப்படி இல்லீங்க. களவும் கத்தும் அற! களவாடுறதும் கத்துவதும்(மத்தவங்களை ஏசுறதும் புறம் பேசுறதும்) விட்டொழி (அற).

பிறழ்ந்த பழமொழிகள்-1

8 comments:

ராஜ்குமார் said...

உங்களுடைய படைப்புக்கள் நன்றாகவே உள்ளன.இன்னும் சற்று கூடுதல் தகவல்களை இணைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.வாழ்த்துக்கள்!

பழமைபேசி said...

இராஜ்குமார், வரும் காலங்களில் கூடுதல் தகவல்களுடன் படைக்க முயற்சிக்கிறேன். வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!

பழமைபேசி said...

//பரிசல்காரன்

மிக நல்ல தகவல்கள் நண்பா!

//

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி பரிசல்காரரே!

Anonymous said...

களவெடுப்பதனால் களவு கொடுத்தவர்களுக்கு வரும் நஷ்ட லாபத்திலும் பார்க்க நாம் இழக்கப் போகும்

நற்குணங்களையும், நல்வாழ்வையும் பற்றி பெரியவர்கள் அறிஞர்கள் அறிவுருத்தும் அறிவுரைகளை கற்று (படித்து அறிவதோ அடுத்தவர் சொல்லி அறிவதோ)
தீய செயலான களவு செய்வதை மறந்திடு என்பதாகும்.

குட்டிக் கதை.
+++++++++++++
சிறு பையன் ஒருவன் பக்கத்து வீட்டில் இருந்து ஒரு ஊசி களவெடுத்து வந்து அம்மாவிடம் கொடுக்கிறான்.
அம்மா அவன் களவெடுத்து கொண்டுவந்ததைப் பாராட்டுவதுடன் ஊசியையு வாங்கி வைத்துக்கொள்க்கிறாள்.

இப்படியே களவுத்தொழிலில் வளர்ந்தவன் பின்பு கொலை கொள்ளை என செய்யத்தொடங்கி பிடிபட்டு விடுகிறான்.

தூக்கு தண்டனை கொடுக்கப் பட்டு கடைசி ஆசையை கேட்ட போது,
அம்மாவை முத்தமிடவேண்டும் என்றான் அம்மாவும் வந்தாள்.

அவன் முத்தமிடுவாக அம்மாவின் மூக்கைக்கடித்து துப்பி விட்டு சொன்னான் ஊசி களவெடுத்த போதே என்னை திருத்தியிருந்தால் இன்று நான் தூக்குமேடை ஏறியிருக்க மாட்டேனல்லவா?

இது மற்றய தாய்மார்களுக்கு படிப்பினையாகட்டும் என்றானாம்.

இதிலிருந்து நாம் கற்றுகொண்டது என்ன?:)

நசரேயன் said...

நல்ல தகவல் பழமை பேசி..

பந்திக்கு முந்து படைக்கு பிந்து. இதுக்கும் விளக்கம் கிடைத்தால் நல்லது

பழமைபேசி said...

//நசரேயன் said...
நல்ல தகவல் பழமை பேசி..

பந்திக்கு முந்து படைக்கு பிந்து. இதுக்கும் விளக்கம் கிடைத்தால் நல்லது
//
பிறழ்ந்த பழமொழிகள்-1 பாருங்க‌ நசரேயன்!

பழமைபேசி said...

//Anonymous said...

இதிலிருந்து நாம் கற்றுகொண்டது என்ன?:)
//
அனாமதேய அன்பருக்கு வணக்கம். தங்களின் வருகைக்கும், கதைக்கும் மிக்க நன்றி!

அதிலிருந்து நாம் கற்றுக் கொள்வது யாதெனில், களவு கற்பது அற! களவானதைத் தெரிந்து கொளவதே வேண்டாமே!!

Nanjil Siva said...

good..