7/03/2008

மாங்கல்ய மகிமை

என்னேரம், இந்த கிரிக்கெட்டயே பாக்குறது? அதான் ஒரு விசயத்தப் போட்டுத் தாக்குவோம்னு தாக்குறேன். நீங்க புலம்பறதும் புரியுது. தாமரை அவங்க, 'மணீ, தகவல்களா அனுப்புங்க, மொக்கைகல கொறச்சுகுங்கனு சொன்னாலும் சொன்னாங்க, இவன் தினமும் போட்டுத் தாக்கிகினே இருக்குறான்'னு நீங்க புலம்பறது நல்லாவே புரியுது. ஆனாலும் பாருங்க,நாம நமக்கு தெரிஞ்சத சொல்லிப் போடோனும் இல்லீங்களா?

நீங்க கொற சொல்லணும்னா, எங்க முதலாளியத்தான் கொற சொல்லோணும். ஆமாங்க, நமக்கு இந்த வாரம் வீட்டுல இருந்து வேலை. வீட்டுல இருந்து வேலைனா, நமக்கு இதான் வேலை. என்ன நாஞ்சொல்லுறது, சரிதானுங்களே? சரி, விசயத்த மேல பாப்போம்.

அந்த காலத்துல எல்லாம்,கல்யாணத்தின் போது கட்டுற மாங்கல்யத்துல ஒம்பது இதழ் இருக்குமாம். அதுல, ஒண்ணு ஒண்ணுக்கும் ஒரு அர்த்தத்த பெரியவங்க சொல்லி வெச்சாங்க. அதான் இந்த மாங்கல்ய மகிமை:

மாங்கல்ய மகிமை

  1. வாழ்க்கையைப் புரிந்து கொள்வது
  2. மேன்மை
  3. ஆற்றல்
  4. தூய்மை
  5. தெய்வீக எண்ணம்
  6. நற்குணங்கள்
  7. விவேகம்
  8. தன்னடக்கம்
  9. தொண்டு

மூணு முடிச்சு தெரிஞ்சது தானே,

  1. பிறந்த வீட்டிற்கு அனுசரிப்பு
  2. புகுந்த வீட்டிற்கு அனுசரிப்பு
  3. ஊருக்கு, தெய்வத்திற்குக் கட்டுப்படுதல்

No comments: