7/02/2008

மேலதிகத் தகவல்

நம்ம கூறுகள் பதிவப் பாத்துட்டு, நண்பர் ஜெயக்குமார் அனுப்பி இருந்த மேலதிகத் தகவல்:

சிதம்பர ரகசியம்

நான் சிதம்பரம் கோயிலுக்கு தரிசனம் சென்ற போது, மூலவருக்கு பக்கத்து அறையில் தங்க இலைகள் சூழ்ந்த ஒரு திரை போன்ற அமைப்பு இருந்தது. தீட்சிதர், மணியார் சொன்ன தத்துவத்தைத் தான் விளக்கினார்.

சமீபத்தில் சிதம்பர ரகசியம் குறித்து வேறு சில தகவல்களையும்(கொஞ்சம் சங்கடமான மற்றும் வேறுபாடான தகவல்கள்) அறிய நேர்ந்தது. அவை,

1. நந்தனார் கோயிலுக்குள் புகுந்ததை விரும்பாத தீட்சிதர்கள் அவரை எரித்து அந்த உண்மையை ஊருக்கு மறைத்த விஷயம் 'சிதம்பர ரகசியம்'. ஆதாரம்: சிதம்பரம் கோவிலில் இன்றும் ஒரு வாசல்(நந்தனார் நுழைந்ததாக கருதப் படும் வாசல்) நிரந்தரமாக பூட்டியிருக்கும்.

2. திருஞான சம்பந்தரும், அப்பரும் சம காலத்திய சிவனடியார்கள். அவர்களுக்குள் சில தத்துவ கருத்து வேறுபாடுகள் உண்டு. ஒரு முறை, திருஞான சம்பந்தர் தீட்சிதர்களுடன் சேர்ந்து கொண்டு அப்பரை சிதம்பரம் கோவிலுக்கு விவாதத்திற்கு (ஒரு சதி திட்டத்துடன்) அழைத்தார். அப்பரை கோவிலுக்குள் வைத்து அக்னி பகவானுக்கு அளி(ழி)த்து விட்டு,வெளியே வந்து மக்களிடம், 'அப்பரை இறைவன் வந்து கூட அழைத்து சென்று விட்டார்' என்று கூறி விட்டார்கள். அது ஒரு 'சிதம்பர ரகசியம்'.


எல்லாம் அந்த‌ எம்பெருமானுக்கே வெளிச்ச‌ம்!!!

சிங்'கை' பாண்டிய‌ன்


(ஒரு பாண்டியனும் இல்ல. விவ(கா)ரமான எல்லா விசயங்களும் தெரிஞ்சி வெச்சு இருக்குறதால, இவரு ஒரு விவ(கா)ரப் பாண்டியன்)

No comments: