10/18/2008

தவுட்டுக்காசு!

பள்ளிகூடம்வுட்டு
நான் ஓடியாற‌,
அம்மா சொன்னா
ஆறுமணி வண்டிக்கு
ஊருக்குப் போடா
இன்னைக்கு அமுச்சி
ஊர்ல சிவராத்திரி!

ஊருக்கும் நான்வர‌
அமுச்சியும் தந்தா
ஒன்னேமுக்கா ரூவா
அதையுந்தானெடுத்து
கோயப்பக்கம் போனேன்
ஆசையா தவுட்டுக்காசு
நான் வெளையாட!!

ஊருசனம் கூடியிருக்க‌
கண்ணு சொழண்டது
கூட வெளையாடுற‌
கண்ணம்மாவை
எங்கயுங்காணமின்னு;
எங்க‌யின்னு கேட்டாக்க‌
அவிங்க‌ சொன்னாங்க‌,
அவ‌யினி வ‌ர‌மாட்டா!
பெரியமனுசி ஆயிட்டாடா!!!

தவுட்டுக்காசு: ‍‍ தவிடில் ஒரு பைசாக் காசுகளை மறைத்து, கூட்டிய தவிடை இரண்டாகப் பிரித்து, தனக்கு ஒரு பங்கெடுத்து, பின் அதில் இருக்கும் காசுகளை எடுத்துக் கொள்தல். சிவராத்திரி, ஏகாதசி போன்ற நாட்களில் இரவைக் கண்விழித்துக் கழிக்க விளையாடும் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று!

ஆடுன ஆட்டத்தைச் சொல்லி வை! குடுத்த கணைக்கை எழுதி வை!!

14 comments:

நசரேயன் said...

நான் தான் முதல் ..

தவிட்டு காசு மாதிரி தவிட்டு டாலர் விளையாட்டு இருக்கா?

குடுகுடுப்பை said...

//தவிட்டு காசு மாதிரி தவிட்டு டாலர் விளையாட்டு இருக்கா?//

இன்னும் கொஞ்சம் நாள்ல டாலருக்கு தவிடு கெடக்குதான்னு பாப்போம்.

அப்புறம் கண்ணம்மா தான் நீங்க பழமைபேசியானதுக்கு காரணமா?

பழமைபேசி said...

//நசரேயன் said...
நான் தான் முதல் ..

தவிட்டு காசு மாதிரி தவிட்டு டாலர் விளையாட்டு இருக்கா?
//

வாங்க‌ நசரேயன்! :-o)

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
//தவிட்டு காசு மாதிரி தவிட்டு டாலர் விளையாட்டு இருக்கா?//

இன்னும் கொஞ்சம் நாள்ல டாலருக்கு தவிடு கெடக்குதான்னு பாப்போம்.

அப்புறம் கண்ணம்மா தான் நீங்க பழமைபேசியானதுக்கு காரணமா?
//

அண்ணே.... வணக்கம்!

கூடுதுறை said...

இதைத் இதைதான் நான் சொன்னேன்...

Mahesh said...

தவுட்டுல காச வெச்சு தேடுறதே கண்ணம்மா கைஇயப் புடிச்சுப் பாக்கத்தானே :)))

பழமைபேசி said...

//கூடுதுறை said...
இதைத் இதைதான் நான் சொன்னேன்...
//

:-o) சாமி, உங்கள வெச்சி இன்னைக்கு ஒரு பதிவு வந்துகிட்டே இருக்குது இராசா!!

பழமைபேசி said...

//Mahesh said...
தவுட்டுல காச வெச்சு தேடுறதே கண்ணம்மா கைஇயப் புடிச்சுப் பாக்கத்தானே :)))
//

அந்த வெவரம் எல்லாம் அப்ப நமக்கு சுத்தமா இல்லாமப் போனத நெனச்சிப் பதிவுதான் போடணும். :-o)

பழமைபேசி said...

//
கூடுதுறை has left a new comment on your post "தவுட்டுக்காசு!":

//:-o) சாமி, உங்கள வெச்சி இன்னைக்கு ஒரு பதிவு
வந்துகிட்டே இருக்குது இராசா!!//

ஆஹா....ஆஆஆஅ

இதைத்தான் சொந்த செலவில் சூன்யம் வைப்பது என்று கூறுவார்களே.. அதுதானா இது?
//
நீங்களும் இப்ப நம்ம வழில...

:-o)

ராஜ நடராஜன் said...

இப்பத்தான் சல்லிக்காசு பாத்துட்டு வாரேன்.அதுக்குள்ள தவிட்டுக்காசா? எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு.

தவிட்டுக்குப் பொறந்த..... அது வேறேயோ.எதுக்கும் பதிவையும் பின்னூட்டத்தையும் பாத்துட்டு வாரேன்.

ராஜ நடராஜன் said...

அய்! ஞாபகம் வந்துரிச்சு (ஆசையில் ஓடி வந்தேன்)

தவிட்டுக்குள்ள கைய விட்டு விளையாடறது.ரொம்ப ஜாலியாக்கும்.(வெலயாடுறவுங்குளுக்குத்தான்)

கூடுதுறை said...

உங்களைப்போன்றவர்களின் பயமுறுத்தலுக்காக இதோ ஓர் பதிவு.

அமெரிக்காவில் பணிபுரிவோரின் வேலை பறி போகும் அபாயம்
http://scssundar.blogspot.com/2008/10/blog-post_26.html

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
அய்! ஞாபகம் வந்துரிச்சு (ஆசையில் ஓடி வந்தேன்)

தவிட்டுக்குள்ள கைய விட்டு விளையாடறது.ரொம்ப ஜாலியாக்கும்.(வெலயாடுறவுங்குளுக்குத்தான்)
//

:-o) :-o)

பழமைபேசி said...

//கூடுதுறை said...
உங்களைப்போன்றவர்களின் பயமுறுத்தலுக்காக இதோ ஓர் பதிவு.

//

பேதி மாத்திரை (சூரணம்) குடுக்குறதுல ஒரு மகிழ்ச்சி! :-o)