10/16/2008

"இரத்தினச் சுருக்கம்", "பொடி வெச்சுப் பேசுற‌து"ன்னா என்ன?


வணக்கம்! நேத்தைக்குப் பாருங்க, ஒரு தகவலைப் பத்தி நம்மோட கருத்தச் சொல்லும் போது, இரத்தினச் சுருக்கமா சொல்லி இருக்கீங்கன்னு குறிப்பிட வேண்டி இருந்துச்சு. அப்ப, எனக்குள்ள எழுந்த கேள்விதான் இது. சரி, இப்ப அதுக்குண்டான விளக்கத்தைப் பாப்பமா?

அதாவது, எப்படி பெருத்த ஒளி உருவத்தில சிறுசா இருக்குற இரத்தினத்துல இருக்கோ, அது மாதிரின்னு ஒப்பிட்டுச் சொல்லுறதுதான் இது.

பொடி வெச்சுப் பேசுற‌துன்னா என்ன‌? இத‌ப் ப‌டிக்குற‌வ‌ங்க‌, அவிங்க‌ அவிங்க‌ க‌ருத்துக்க‌ளைப் ப‌தியுங்க‌.

நாளைய பதிவுல, பொடி வெச்சுப் பேசுறது, சாடை பேசுறது, விட்டேத்தியாப் பேசுறது பத்தி விளக்கமாப் பாப்போம். உங்க விளக்கங்களை பின்னூட்டத்துல சொல்லிட்டிப் போங்க!


தெரிஞ்சதச் சொல்லு! தெரியாததைக் கேளு!!

6 comments:

நசரேயன் said...

நானும் இரத்தினச் சுருக்கமா பதில் சொல்லிவிடுகிறேன்

கிரி said...

எங்க இருந்துங்க இந்த மேட்டரெல்லாம் பிடிக்கறீங்க ..நல்லா இருக்கு

குடுகுடுப்பை said...

பழமைபேசி ரொம்ப நல்லவரு.பழசுன்னா அவருக்கு ரொம்ப இஷ்டம்.

பழமைபேசி said...

நசரேயன் said...
நானும் இரத்தினச் சுருக்கமா பதில் சொல்லிவிடுகிறேன்
//

வருகைக்கு நன்றி நசரேயன்!

பழமைபேசி said...

//
கிரி said...
எங்க இருந்துங்க இந்த மேட்டரெல்லாம் பிடிக்கறீங்க ..நல்லா இருக்கு
//
வாங்க கிரி! நல்லா இருக்கீங்ளா? நன்றிங்க!!

பழமைபேசி said...

//
குடுகுடுப்பை said...
பழமைபேசி ரொம்ப நல்லவரு.பழசுன்னா அவருக்கு ரொம்ப இஷ்டம்.
//

பொடி வெச்சுப் பேசற மாதிரி இருக்கு? :-O)