10/05/2008

யாரிந்த கோவை அய்யாமுத்து அய்யா?

கோயம்பத்தூர்ல பொறந்து, இருவது இருவத்தி மூனு வருசம் அங்கயே படிச்சு, பொழப்பும் நடத்தி இருக்குறேன். கோவை அய்யாமுத்து அய்யாவைப் பத்திக் கேள்விப்பட்டது கெடையாது. இது எப்படி? இல்ல, அது என்னோட தப்பா?? கண்ட கண்ட கதையை எல்லாம் பள்ளித் துணைப் பாடத்துல வெச்சீங்களே, ஏன் இவரைப் பத்தி ஒரு பாடம் வெச்சிருக்கக் கூடாதா? ஏன் இந்த ஓரவஞ்சினை? ஒரு வேளை, இப்ப ஏதாவது அவருக்கான கௌரவம் கொடுக்கப்பட்டு இருக்கலாம். அப்படியே இருந்தாலும், அது தாமதமான, நிறைவற்ற ஒண்ணுதான். சரி, இனி அவரைப் பத்தி கொஞ்சம் பாப்பமா?!

அவர் அந்தக் காலத்துல பெரிய, நேர்மையான தலைவர்ங்க. காந்தி கூடவே இருந்து, நெருக்கமாப் பழகுனவர். தமிழ் நாட்டுல காதி, கதர் சங்கத்தை மூலை மொடுக்கெல்லாம் கொண்டு போய்ச் சேத்துனவர். அய்யா பெரியார் கூட வேலை செஞ்சு, நெருங்கிப் பழகுனவர். பாருங்க, பெரியார் காங்கிரசுல இருந்து வெளிய போனப்ப இவர் போகலை. ஆகவே, திராவிடம் இவரைக் கண்டுக்கலை. கர்மவீரர் காமராசர் கூடவும் போகலை. கடைசில மூதறிஞர் இராஜாஜி கூட இருந்தாரு. பொது வாழ்வுக்காக தன்னை அர்ப்பணம் செஞ்சவர். அவர் தயாரிப்புல, இயக்கத்துல வந்த
கஞ்சன் திரைப்படப் பாடல்தான் திராவிட, தமிழ் மேடைகள்ல தவறாம இசைக்கப்பட்டு மக்களைத் தெரட்ட ஒதவி இருக்கு. அந்தக் காலத்துல, இந்தப் பாட்டை கடவுள் வாழ்த்து மாதிரியே பாடினாங்களாம். ஆமாங்க, அந்தப் பாட்டு, "இந்த உலகினில் இருக்கும் மாந்தரில் எழில் உடையோன் எங்கள் தமிழன்" ன்னு தொடங்கும்.

இனியாவது அவரை முன்னிறுத்தி, அவரோட தியாகம், பண்புகள் எல்லார்த்தையும் அடுத்து வர்ற தலைமுறைக்கு கொண்டு போய்ச் சேருங்க. அவர் எழுதின சுயசரிதையப் பாடமாக்கலாம். பல்கலைக் கழகங்கள்ல பாவியுங்க. அந்தப் பாட்டை புத்தகத்துல போடுங்க. தியாகிகளைப் பத்தி சொல்லுறதுல எதுக்குத் தயக்கம்?

நல்லார நாவில் உரை! பொன்னைக் கல்லில் உரை!!

6 comments:

Mahesh said...

இத.. இத...இதத்தான் எதிர்பார்த்தோம்.... அய்யாவோட புகைப்படம் கிடைச்சா போடுங்களேன்...

இறுதியில இருக்கற அந்த சொலவடை... எதோ தப்பு மாதிரி தெரியுதே? இல்லயா... நாந்தான் சரியா படிக்கலயா?

பழமைபேசி said...

//

இறுதியில இருக்கற அந்த சொலவடை... எதோ தப்பு மாதிரி தெரியுதே? இல்லயா... நாந்தான் சரியா படிக்கலயா?
//

நல்லாரை நாவில உரை!
பொன்னைக் கல்லுல உரை!!


மென்மையான நாவால் சொல்லி நல்லவரைத் தெரியும்படி செய்யணும்!
வன்மையான கல்லால் உரசி, தங்கத்தை தெரியும்படிச் செய்யணும்!!

இப்படிச் சொல்லக் கேள்விப்பட்டு இருக்கேன்.

பழமைபேசி said...

//Mahesh said...
இத.. இத...இதத்தான் எதிர்பார்த்தோம்.... அய்யாவோட புகைப்படம் கிடைச்சா போடுங்களேன்...
//

வாங்க மகேசு! முயற்சி செய்யுறேன்ங்க.....

Mahesh said...

நான் காலைல பாத்தபோது "நல்லார நாவில உர" அப்பிடின்னு மட்டும் இருந்துது. அதான் கேட்டேன். இப்போ சரியா இருக்கு.

Anonymous said...

You can now get a huge readers' base for your interesting Tamil blogs. Get your blogs listed on Tamil Blogs Directory - http://www.valaipookkal.com and expand your reach. You can send email with your latest blog link to

valaipookkal@gmail.com to get your blog updated in the directory.

Let's show your thoughts to the whole world!

பழமைபேசி said...

//Mahesh said...
நான் காலைல பாத்தபோது "நல்லார நாவில உர" அப்பிடின்னு மட்டும் இருந்துது. அதான் கேட்டேன். இப்போ சரியா இருக்கு.
//
ஆமாங்க மகேசு, ஆமாங்க!

நீங்க இல்லாம ஒரு கை ஒடஞ்ச மாரியே இருந்தது போங்க.....