10/24/2008

துயரம்டா, இது துயரம்!

வா வா கதிரவா,
தமிழன் நிலையத் தெரிஞ்சுக்க‌,
வஞ்சகர் அதிகம் உண்டு
நோக்கம் பாத்து நடந்துக்க!

தூங்கிக்கிடந்த உசுரெல்லாம்
துள்ளிக் குதிக்கும் காலையிலே
சோந்து கெடந்த கைகளெல்லாம்
துணிந்து எழும் பல வேளையிலே
ஒலகத்தை நெனச்சாலே
ஒடம்பு நடுங்குது!
ஊருகெட்ட கேட்டைப் பாத்து
நீதி பதுங்குது!
உருவங்க மனுசங்க‌போல‌
ஓடி அலையுது நம்ம‌
தமிழ் நாட்டுல!
உருவங்க மனுசங்க‌போல‌
ஓடி அலையுது நம்ம‌
தமிழ் நாட்டுல!!

நாடு முன்னேற பலபேரு
நல்லதொண்டு செய்யுறதுண்டு!
அதைக் கெடுக்கச் சிலபேரு
நாச வேலையும் செய்யுறதுமுண்டு!!
ஓடெடுத்தாலும் சிலபேரு,
திருவோடு எடுத்தாலும் சிலபேரு,
ஒத்துமையா இருப்பதில்லை; இந்த‌
உண்மைய‌த் தெரிஞ்சும் - நீ
ஒருத்த‌ரையும் வெறுப்ப‌தில்லை!

வா வா கதிரவா,
தமிழன் நிலையத் தெரிஞ்சுக்க‌,
வஞ்சகர் அதிகம் உண்டு
நோக்கம் பாத்து நடந்துக்க!


ஒரு ஆதங்கத்தோட‌ பேசுறது தப்பா, நாட்டுல? என்னவோ போங்க!!

13 comments:

குடுகுடுப்பை said...

நல்லா இருக்கு. யாரு அந்த கதிரவன்

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
நல்லா இருக்கு. யாரு அந்த கதிரவன்
//

வாங்கண்ணே! சக தமிழந்தான்!!

பழமைபேசி said...

எத்துனை தடவ பாத்தாலும் கேட்டாலும், ஒரு தப்பும் கண்ணுக்குப் படலை.

Selvam said...

very true

Mahesh said...

ஒஹோ...உதய கதிரவனச் சொல்றீங்களா? :))))

பழமைபேசி said...

//
Mahesh said...
ஒஹோ...உதய கதிரவனச் சொல்றீங்களா? :))))
//
வாங்க! சக தமிழந்தான்!!

ராஜ நடராஜன் said...

பொடி வச்சு என்னமோ....

பழமைபேசி said...

//
ராஜ நடராஜன் said...
பொடி வச்சு என்னமோ....
//

ஹி! ஹி!!

Anonymous said...

மறந்திடு
மக்கள் போராட்டம்
பேசிடு
தமிழ் இனவாதம்
வழிபடு
தேசிய முண்டத்தை
கொனறிடு
மானுடத்தை
22-11-2007

பழமைபேசி said...

//Anonymous said...

மறந்திடு
மக்கள் போராட்டம்
பேசிடு
தமிழ் இனவாதம்
வழிபடு
தேசிய முண்டத்தை
கொனறிடு
மானுடத்தை
//

குழப்பமா இருக்கு... நீங்க இந்தப் பக்கமா? இல்ல அந்தப் பக்கமா??

நசரேயன் said...

அருமையா இருக்கு பழமைபேசி,
உங்கள் வார்த்தையின் பலம் வரிகளில் தெரிகிறது

பழமைபேசி said...

//நசரேயன் said...
அருமையா இருக்கு பழமைபேசி,
உங்கள் வார்த்தையின் பலம் வரிகளில் தெரிகிறது
//

நாடுவிட்டு நாடுவந்து
மனசு வலி தாங்காம‌
புலம்புறதுதானிருக்க‌....நாம‌
வேற என்ன செய்ய‌
முடியும் சொல்லுமையா!
பழமையத்தான் கேளுமையா!!

பழமைபேசி said...

இதுல தீபாவளி வேற‌?