10/23/2008

ஊரான் ஊரான் தோட்டத்துல‌...

ஊரான் ஊரான் தோட்டத்துல‌
ஊரான் ஊரான் தோட்டத்துல‌
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா
காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி
காயிதம் போட்டான் வெள்ளக்காரன்
வெள்ளக்காரன் பணம் செல்லப் பணம்
வேடிக்கை பாத்தாலும் வெள்ளிப் பணம்
வெள்ளிப் பணத்துக்கு ஆசப்பட்டு
வேசம்
கொலஞ்சாளாம் பொன்னுத்தாயி!
வேலும் வாளும் தீட்டுவோம்!!
வெள்ளக்காரனை விரட்டி விரட்டி ஓட்டுவோம்

பல்லுக்குப் பத்தாத வெத்தலையும்
படுக்கைக்குப் பத்தாத ஆம்பளையும்
இருந்தென்ன? போயென்ன??

16 comments:

நசரேயன் said...

/*பல்லுக்குப் பத்தாத வெத்தலையும்
படுக்கைக்குப் பத்தாத ஆம்பளையும்*/
இது நாள் வரைக்கும் கேள்வி பட்டதே இல்லை

பழமைபேசி said...

//நசரேயன் said...

இது நாள் வரைக்கும் கேள்வி பட்டதே இல்லை
//

வாங்க நசரேயன்! அதுக்குத்தானே போடுறது!!

குடுகுடுப்பை said...

/*பல்லுக்குப் பத்தாத வெத்தலையும்
படுக்கைக்குப் பத்தாத ஆம்பளையும்*/
இது நாள் வரைக்கும் கேள்வி பட்டதே இல்லை

வாங்க நசரேயன்! அதுக்குத்தானே போடுறது!!

/
ஆபாச பேசி
/

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...

ஆபாச பேசி
/

வாங்கண்ணே, அது அப்படியில்லைண்ணே, ஆபாசம்பேசின்னு சொல்லணும்.

வேசங் கொலஞ்ச பொன்னுத்தாயி சொன்னதச் சொன்னேன். அது தப்பா?

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...

ஆபாச பேசி
/

வாங்கண்ணே, அது அப்படியில்லைண்ணே, ஆபாசம்பேசின்னு சொல்லணும்.

வேசங் கொலஞ்ச பொன்னுத்தாயி சொன்னதச் சொன்னேன். அது தப்பா?

Mahesh said...

வெளவிக்கறது ஒருத்தன், வெல சொறது ஒருத்தன்... இது என்னக்கித்தான் தீருமோ?

என்னண்ணே... சொலவடையெல்லாம் ஒரு மார்க்கமாப் போகுது?

கூடுதுறை said...

மிக நல்லவொரு பாட்டு...

நன்றி...

ஓட்டும் போட்டாச்சு...

பழமைபேசி said...

//Mahesh said...
வெளவிக்கறது ஒருத்தன், வெல சொறது ஒருத்தன்... இது என்னக்கித்தான் தீருமோ?
//

1920, 30லயும் இதுதான் நடந்துச்சு.... இப்பவும் இதேதான்...

//என்னண்ணே... சொலவடையெல்லாம் ஒரு மார்க்கமாப் போகுது?
//

:-o)

பழமைபேசி said...

//கூடுதுறை said...
மிக நல்லவொரு பாட்டு...
//

வஞ்சப் புகழ்ச்சி அணி மாதிரி இருக்கே?!

//நன்றி...

ஓட்டும் போட்டாச்சு...
//

நொம்ப நன்றிங்க‌......

கூடுதுறை said...

////கூடுதுறை said...
மிக நல்லவொரு பாட்டு...
//வஞ்சப் புகழ்ச்சி அணி மாதிரி இருக்கே?!//

பாத்திங்களா... நிஜமா பாரட்டின கூட இப்படி எடுத்துகிறிங்க...

என்ன கடந்த 2 பதிவா பின்நவினத்துவம் இல்லை என்பதால்தான் பாராட்டுக்கள்...

(ஒன்னுமே புரியவில்லை என்றால் அதுதான் பின்நவினத்துவம்...மறுபடியும் ஒரு பதிவு அதுக்காக போட்டுவிட வேண்டாம்)

S. Ramanathan said...

பாட்டின் கடைசி பகுதி வேறுமாதிரி இருந்ததாக ஞாபகம். இது வெள்ளைக்காரன் நம்மை ஆண்டபொழுது, எதிர்த்து போரிட்ட சமயம் வந்த கிராமத்துப் பாட்டு என்று கேள்வி. சில வரிகள் மறந்து விட்டன, ஆனால், கடைசி இரு வரிகள் “வேலும் வாளும் தீட்டுவோம், விரட்டி விரட்டி ஓட்டுவோம்” என்றுதான் ஞாபகம்.

பழமைபேசி said...

// S. Ramanathan said...

வாங்க அய்யா! சரியாச் சொன்னீங்க..... எனக்கும் மறந்து போச்சுங்க!

பழமைபேசி said...

// கூடுதுறை said...

என்ன கடந்த 2 பதிவா பின்நவினத்துவம் இல்லை என்பதால்தான் பாராட்டுக்கள்...
//

நீங்க அப்பப்ப வந்து போனாச் சரிங்க... :-o)

பழமைபேசி said...

//// S. Ramanathan said...
பாட்டின் கடைசி பகுதி வேறுமாதிரி இருந்ததாக ஞாபகம். இது வெள்ளைக்காரன் நம்மை ஆண்டபொழுது, எதிர்த்து போரிட்ட சமயம் வந்த கிராமத்துப் பாட்டு என்று கேள்வி. சில வரிகள் மறந்து விட்டன, ஆனால், கடைசி இரு வரிகள் “வேலும் வாளும் தீட்டுவோம், விரட்டி விரட்டி ஓட்டுவோம்” என்றுதான் ஞாபகம்.
////

ஐயா, அந்த ரெண்டு வரிகளையும் சேத்துகிட்டேன் இப்ப...

ராஜ நடராஜன் said...

பழம! பாட்டில முதல் பாதிதான் நினைவுக்கு வருது.கூட்டமா இருக்குற எடத்துக்கு கள புடுங்குற எடத்துக்குப் பொறணி கேட்க ஏன் போனிங்கன்னு ரெண்டாவது பாட்ட பாடிப் பார்க்கும் போதுதான் தெரியுது:)

டிஸ்கி: அந்த மாதிரிப் பாடல்களெல்லாம் சகஜமானதுதான்.சும்மா அடிச்சு வுடுங்க யார் பின்னூட்டத்தையும் பார்க்காம.

பழமைபேசி said...

// ராஜ நடராஜன் said...

டிஸ்கி: அந்த மாதிரிப் பாடல்களெல்லாம் சகஜமானதுதான்.சும்மா அடிச்சு வுடுங்க யார் பின்னூட்டத்தையும் பார்க்காம.
//

இரசிக்குறதுக்கு ஆள் இருக்கும்போது, எனக்கென்ன..... வர்ற காலங்கல்ள, அப்படியே சந்துல சிந்து பாஞ்சிடுவோம்.