10/14/2008

எள்ளுத் தாத்தா 1880'ல் எழுதி வைத்த வைத்தியம்-3

பழமை பழமை யென்று பாவனை பேசலன்றிப்
பழமை இருந்த நிலை - கிளியே!
பாமரர் ஏதறி வார்!!
-- பாரதியார்

நாம, எள்ளுத் தாத்தா 1880-ல எழுதி வெச்ச குறிப்புகளை தொடரா, எழுதிட்டு வர்றோம். இதனால, என்ன பிரயோசனம்ன்னு நீங்க யோசிக்கலாம். நமக்கு, இந்த தொடர் எழுதறதால கையெழுத்துப் பிரதிய, கணனியில தரவேற்றம் செஞ்ச மாதிரி ஆச்சு. உங்களுக்கும், அதப் படிக்கும் போது சுவராசியமா இருந்தாலும் இருக்கலாம். அதாவது, எருமைக்குப் புல் புடுங்கின மாதிரியும் ஆச்சு, காடு சுத்தமான மாதிரியும் ஆச்சு பாருங்க! அதான், இந்த ஒரு முயற்சி!!

லிங்க வீக்கத்திற்கு:

கற்றாழைச் சோற்றை ஏழுதிரம் கழுவியெடுத்து கொருக்குரிணம் கண்டு வீக்கம் உண்டாயிருக்கும் லிங்கத்தின் மீது ஒரு இராத்திரி வைத்துக் கட்ட வாடிப் போகும்.

பிள்ளைகள் அடித்தள்ளினதற்கு:

கரிசலாங்கண்ணியும் பழம்புளியும் சரியிடை வைத்தரைத்து, புன்னைக்காயளவு எட்டு நாள் கொடுக்கத் தீரும்.

விக்கல் வாந்தி சுரத்திற்கு:

கண்டங்கத்திரிவிரை அமுக்குரா சமூலம் திப்பிலி இவை சமனிடை போட்டு கசாயம் வைத்து, தேன் முலைப்பால் விட்டுக் கொடுக்கத் தீரும்.

விரை வீக்கத்திற்க்கு:

கெச்சக்கா இலையை துளி விளக்கெண்ணை விட்டு வதக்கி விரையின் மேல் வைத்துக் கட்டி வைக்கவும். காலையில் பேதிக்கு சாப்பிட்டு வர வீக்கம் நீங்கும்.

காமாலை-சோகை-பாண்டுக்கு:

கோசலமென்னும் சிறுவர் சிறுநீறும் வெள்ளாட்டுப் பாலும் சரியாய்க் கலந்து உட்கொண்டு வந்தால், சோகை‍‍-காமாலை-பாண்டு‍-பித்தம் இவை தீரும்.

நாடியிறுக‌:

சத்திசாட்டரணை மூலத்தை சூரணித்து, சக்கரை கலந்து திருகடியளவு உண்டு வந்தால் நாடியிறுகும். விந்து நன்றாக உண்டாகும்.

சுண்டைக்காய் ப‌ற்றிய‌ வெண்பா

நெஞ்சிற் க‌ப‌ம்போகும் நிரைகிருமி நோயும்போகும்
விஞ்சுவாத‌த்தின் விளைவும்போகும்! வ‌ஞ்சிய‌ரே
வாயைக்க‌ச‌ப்பிக்கும் மாம‌லையி லுள்ள‌சுண்டைக்
காயைச் சுவைப்ப‌வ‌ர்க்குக் காண்!

பாராம விட்டாக் கெடும், பழசு! பழசக் கேளாம விட்டாக் கெடும், புதுசு!!

(...இன்னும் வரும்...)

23 comments:

கடைசி பக்கம் said...

Hi

I cannot understand many items..... :-(

பழமைபேசி said...

@@@கடைசி பக்கம்

//
இன்னது புரியலைன்னு சொல்லுங்க! நான் எனக்குத் தெரிஞ்சதை சொல்லுறேன். வந்து எட்டிப் பாத்ததுக்கு நன்றிங்க!!

கடைசி பக்கம் said...

//லிங்க வீக்கத்திற்கு// - Is it the same what I understand?

//ஏழுதிரம்//

//பிள்ளைகள் அடித்தள்ளினதற்கு//

//தேன் முலைப்பால் // is it the same what I understand?

//கெச்சக்கா இலையை //

//பாண்டுக்கு//

//கோசலமென்னும் சிறுவர் //

//நாடியிறுக‌:

சத்திசாட்டரணை மூலத்தை சூரணித்து,//

Sorry I can't understand above items. If possible pls get me some info.

Thank you for the response

Mahesh said...

மறுக்கா தொடர்றதுக்கு சந்தோசம்.... கூடவே அந்தந்த எல, காய்களோட படமோ, கெடைக்கிற எடமோ, மத்த குறிப்புகளோ இருந்தா நல்லா இருக்கும். இல்லாட்டி சும்மா படிச்சு ரசிக்கறதோட போயிரும்.

பழமைபேசி said...

//லிங்க வீக்கத்திற்கு//

அதே தானுங்க...

//பிள்ளைகள் அடித்தள்ளினதற்கு//

குழந்தைகளுக்கு குடல் சரிந்தால்....

//தேன் முலைப்பால் //

தேனும், குழந்தை பெற்றவளின் முலைப் பாலும் கலந்து....

////கெச்சக்கா இலையை //

ஒரு வகையான காயின் இலை....முடிந்தால் சென்னை-IIT வளாகத்தில் இருக்கும் நண்பர்களிடம் புகைப்படம் கேட்டுப் பார்க்கிறேன். ஆனால் அங்கு உள்ளது என்பது தெரியும்.

//பாண்டுக்கு//

பித்த வாந்தியுடன் கூடிய சுகவீனம்

//கோசலமென்னும் சிறுவர் //

ஆவின் சிறுநீர் என்பது என் எண்ணம்...ஆனால் சிறுவர்களின் சிறுநீர் என்றும் ஒரு கருத்து உள்ளது.

////நாடியிறுக‌:

ஆண்மை கூட....

//சத்திசாட்டரணை மூலத்தை சூரணித்து,//

சத்திசாட்டரணை என்பது மூலிகைத் தாவரம்

சூரணம் - செய்த மூலிகை

பழமைபேசி said...

////ஏழுதிரம்//

ஏழு திரம் என்றால் எண்ணிக்கை ஏழு!

குடுகுடுப்பை said...

நல்ல களஞ்சியம். சுண்டைக்காய் எனக்கு பிடித்த காய், ஆனால் இங்கே கிடைப்பதில்லை.

கடைசி பக்கம் said...

thanks for info and response.

me too worried abt our ancient medical remedies are not documented.

eg: for sorpion bite- no better solution other than our own medicinal value...

good job

பழமைபேசி said...

//
மறுக்கா தொடர்றதுக்கு சந்தோசம்.... கூடவே அந்தந்த எல, காய்களோட படமோ, கெடைக்கிற எடமோ, மத்த குறிப்புகளோ இருந்தா நல்லா இருக்கும். இல்லாட்டி சும்மா படிச்சு ரசிக்கறதோட போயிரும்.

October 14, 2008 9:25 PM
//

http://mooligaivazam-kuppusamy.blogspot.com/2007/11/blog-post_11.html

இங்க குப்புசாமி அய்யா நிறைய படங்கள் போட்டு நல்லாப் பண்ணிட்டு இருக்காரு...

அது போக உடுமலை நாட்டுச் செட்டியார் கடைல எல்லாம் இன்னமும் கிடைக்குது.... திருமூர்த்திமலைச் சரக்குதான்... அப்புறம் சென்னை-IIT ; மருத்துவர் அய்யா, நண்பர் செட்டிகுளம் செ. தெய்வநாயகம்( C.N. Deivanayagam, president, Health India Foundation) அவிங்க உயிர்க் கொல்லி(AIDS) நோய்க்கே நாட்டு மருத்துவத்துல சிகிச்சை அளிக்கிறாங்க‌...

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
நல்ல களஞ்சியம். சுண்டைக்காய் எனக்கு பிடித்த காய், ஆனால் இங்கே கிடைப்பதில்லை.
//

வாங்க.... ஆமாங்க...ஊர்லயே இப்பெல்லாம் குறஞ்சிட்டு வருது இல்ல?

பழமைபேசி said...

//
கடைசி பக்கம் said...
thanks for info and response.

me too worried abt our ancient medical remedies are not documented.

eg: for sorpion bite- no better solution other than our own medicinal value...

good job
//
ஆமாங்க... நன்றிங்க‌!!

Mahesh said...

அது இருக்கட்டும். பாட்டுல சந்தம் பிரிக்கும்போது "ஏதறி வார்"னு எழுதலாமா? நமக்கு கவிதை, பாட்டெல்லாம் ரொம்ப தூரம். தெரிஞ்சுக்கலாம்னுதான்...

பழமைபேசி said...

//
Mahesh said...
அது இருக்கட்டும். பாட்டுல சந்தம் பிரிக்கும்போது "ஏதறி வார்"னு எழுதலாமா? நமக்கு கவிதை, பாட்டெல்லாம் ரொம்ப தூரம். தெரிஞ்சுக்கலாம்னுதான்...
//
தாராளமா.... அது அவிங்க எழுதுற இலக்கண அடிப்படையப் பொறுத்தது.... மரபுக் கவிதைல இலக்கணம் மட்டுந்தான்.....

இது நீங்க கேட்டு இருப்பீங்க....

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி!

lok said...

தங்கள் வலைப்பதிவு நன்றாக உள்ளது. முடிந்தால் அதிகபடியான தமிங்கில பதிவுகள் பதியுங்கள், கவிதைகளுக்கு விளக்க உரை இருந்தால் தமிழும் தெரியாமல் ஆங்கிலமும் தெரியாமல் இருக்கும் என்னை போன்ற அறைவேக்கட்டுகு பயனுள்ள்ளதாக இருக்கும்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

உருப்புடாதது_அணிமா said...

ஒரு நாளில் ரெண்டு பதிவுகள் செல்லாதாம்..
அதனால பாத்து போடுங்க புலவரே

பழமைபேசி said...

//
உருப்புடாதது_அணிமா said...
ஒரு நாளில் ரெண்டு பதிவுகள் செல்லாதாம்..
அதனால பாத்து போடுங்க புலவரே
//

ஒரு நாளைக்கு ஒன்னுங்றதே பெரும் பாடு, இதுல ஒன்னுக்கு மேலயா?
நான் ரெண்டு நாளக்கி ஒன்னு போடலாம்னு இருக்கேன்.

ஆமா, இது என்ன செல்லாது, கில்லாது? அதக் கொஞ்சம் விபரமா சொல்ல முடியுமா?

வடுவூர் குமார் said...

பழமைபேசி
அருமையான தகவல்களை கொடுத்துள்ளீர்கள்.
பெயர்கள் தான் கொஞ்சம் நிரடுகிறது என்று பார்த்தால் அதற்கு விளக்கமும் பதிலில் கொடுத்துவிட்டீர்கள்.
மிக்க நன்றி.
திரு குப்புசாமி பதிவும் ஒரு களஞ்சியமே.

உருப்புடாதது_அணிமா said...

ஹையோ... நான் எங்க ஊரு கணக்குல சொன்னேங்க..
கில்லாது எல்லாம் எனக்கு தெரியாது.. வேணுமுன்னா, கவிகாளமேகம் வருவாரு, அவருகிட்ட கேட்டுக்கோங்க

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க வடுவூர் குமார்!

பழமைபேசி said...

//
உருப்புடாதது_அணிமா said...
ஹையோ... நான் எங்க ஊரு கணக்குல சொன்னேங்க..
கில்லாது எல்லாம் எனக்கு தெரியாது.. வேணுமுன்னா, கவிகாளமேகம் வருவாரு, அவருகிட்ட கேட்டுக்கோங்க
//

ஓ, ஓகோ, இது அந்தக் கணக்கா?

பழமைபேசி said...

@@@உருப்புடாதது_அணிமா said...
//
நான் இப்பத்தான் உங்க ஊட்டுத் திண்ணைக்கு போய்ட்டு வந்தேன்..

பழமைபேசி said...

//lok said...
தங்கள் வலைப்பதிவு நன்றாக உள்ளது. முடிந்தால் அதிகபடியான தமிங்கில பதிவுகள் பதியுங்கள், கவிதைகளுக்கு விளக்க உரை இருந்தால் தமிழும் தெரியாமல் ஆங்கிலமும் தெரியாமல் இருக்கும் என்னை போன்ற அறைவேக்கட்டுகு பயனுள்ள்ளதாக இருக்கும்
//

இராத்திரி பூரா, இத நெனச்சி நெனச்சிப் பாத்தனுன்ங்க.... நம்பனால முடியாதுங்க.... நான் ஒரு பட்டிக்காடு.... பட்டிக்காட்டுத் தனமாவே வளந்துட்டேன்....அப்படியே இருந்துட்டுப் போறனுங்க.... மன்னிச்சுக்குங்க.... எதனாச்சும் தப்பா இருந்தா சொல்லுங்க, திருத்துகிடுறேன்... மத்தபடி, கெராமத்துத் தமிழ்ல எழுதறது தப்பு இல்லைங்களே?