10/20/2008

பிறழ்ந்த பழமொழிகள் - 3

நாம இதுக்கு முன்னாடி, இது சம்பந்தமா ரெண்டு பதிவுகளைப் போட்டோம். இன்னும் நீங்க அதுகளைப் படிக்கலையின்னா, ஒரு எட்டு போயிப் படிச்சுட்டு வாங்க! இதுதாங்க தொடுப்புக: பிறழ்ந்த பழமொழிகள்-1, பிறழ்ந்த பழமொழிகள்-2.

இன்னைக்கு நாம பாக்கப் போற பிறழ்ந்த பழமொழிகள்:

சனி நீராடு!

போக்கத்தவனுக்கு போலீசுக்காரன் வேலையும்,
வாக்கத்தவனுக்கு வாத்தியார் வேலையும்,
வாட்ச்சத்தவனுக்கு வாட்ச்மேன் வேலையுமாம்!

தையல் சொல் கேளேல்!

சனி நீராடுன்னா, ஆம்பிளைங்க சனிக்கிழமை குளிக்கணும் இல்லைங்ளாம். சனின்னா குளிர்ந்த கிரகம், குளிர்ச்சி! அப்படியாக, இதுக்கு அர்த்தம், குளிர்ந்த தண்ணியில குளிங்றதுதானாம்.

போக்குக் கற்றவனுக்கு போலீசு வேலை, வாக்குக் கற்றவனுக்கு வாத்தியார் வேலை, வாட்ச் பாக்கக் கற்றவனுக்கு வாட்ச்மேன் வேலைங்றது அர்த்தமாமுங்க.

தையல் சொல் கேளேல்ன்னா, பெண்கள் சொல்லுறதைக் கேட்டு நட அல்ல‌து ந‌ட‌க்காதேங்றது சரியான அர்த்தம் இல்லைங்ளாம். பெண்களை எட்டு பருவவகைப் பெண்களாப் பிரிச்சு வெச்சு இருந்தாங்ளாம் அந்தக் காலத்துல. அது என்னன்னா வந்து,

7 வ‌ய‌சு வ‌ரைக்கும் பேதை
8 லிருந்து 11 வ‌ய‌சு வ‌ரைக்கும் பெதும்பை
12 லிருந்து 13 வ‌ய‌சு வ‌ரைக்கும் மங்கை
14 லிருந்து 19 வ‌ய‌சு வ‌ரைக்கும் மடந்தை
20 லிருந்து 25 வ‌ய‌சு வ‌ரைக்கும் அரிவை
26 லிருந்து 31 வ‌ய‌சு வ‌ரைக்கும் தெரிவை
32 லிருந்து 40 வ‌ய‌சு வ‌ரைக்கும் பேரிளம்
40 க்கு மேல் இருப்பவர்கள் விருத்தை

இதுல‌ பாருங்க‌, ப‌தினோரு வ‌ய‌சு வ‌ரைக்குமான‌ ப‌ருவ‌ங்க‌ள், பேதை, பெதும்பை ரெண்டையும் சேத்து தைய‌ல்ன்னு சொன்னாங்க‌. அப்ப‌டியாக‌, தைய‌ல் ப‌ருவ‌த்துப் பெண்க‌ள் சிறு வ‌ய‌சுல‌ இருக்குற‌தால‌, அவிங்க‌ சொல்லுற‌த‌ ஆராயாம அப்ப‌டியே கேக்க‌ப் ப‌டாதுன்னு, ஔவைப் பாட்டி தைய‌ல் சொல் கேளேல்ன்னு சொல்லி வெச்சாங்க‌ளாம்.

தப்பாட்டம் ஆடுனாலும் தெரிஞ்சு ஆடுன்னானாம் ஆடுகத்தி!

வாக்களியுங்கள் மக்களே...., வாக்களியுங்க!

26 comments:

அது சரி said...

//
சனி நீராடுன்னா, ஆம்பிளைங்க சனிக்கிழமை குளிக்கணும் இல்லைங்ளாம். சனின்னா குளிர்ந்த கிரகம், குளிர்ச்சி! அப்படியாக, இதுக்கு அர்த்தம், குளிர்ந்த தண்ணியில குளிங்றதுதானாம்.

//

அப்பிடியா? நான் கூட, பல பேரு குளிக்கவே மாட்டேங்கிறானுங்க..இன்னிக்கு சனிக்கிழமை, லீவு தான, இன்னிக்காவது குளிங்கடேன்னு அவனுவளுக்கு சொன்னதாக்கும்னு நெனைச்சிட்டேன்!

நீரு தான் சரியான ஆளு..மாட்டினீரு..

பெண்களில் நாலு வகைன்னு சொல்றாங்க..அது என்ன நாலு வகை?

அத்தினி, சித்தினி, பத்தினி, மோகினின்னு நான் சொல்றேன்..

ஆனா, அது அப்படி இல்ல.. "அத்தினி, சித்தினி, பத்தினி, தரங்கிணினி" அப்படின்னு பலபேரு சொல்றாங்க..

எது சரி?

(தவிர, தரங்கிணியும் மோகினியும் ஒண்ணா?)

அது சரி said...

நாந்தேன் பஸ்டா?

பழமைபேசி said...

//@@@அது சரி //

அண்ணாச்சி, நிலைஅறி கூட்டம்(status call) போய்ட்டு இருக்கு....அப்புறம் வந்து வேலயத் தொடங்குறேன்.

பழமைபேசி said...

@@@அது சரி

அத்தினி
சங்கினி
சித்தினி
பதுமினி

இதுதான் எனக்குத் தெரிஞ்சது....:-o)

நசரேயன் said...

தையல் சொல் கேளேல்! நல்லா இருக்கு, நீங்க ஆராயாம கேட்க கூடாதுனு நீங்க சொல்லுறீங்க, வீட்டுல அவங்க பேச்சை தான் நான் கேட்கிறேன்.

போக்கத்தவனுக்கு போலீசுக்காரன் வேலையும்,
வாக்கத்தவனுக்கு வாத்தியார் வேலையும்,
வாட்ச்சத்தவனுக்கு வாட்ச்மேன் வேலையுமாம்!

இதே மாதிரி கணணி துறைக்கு ஏதும் இருக்கா?

பழமைபேசி said...

//நசரேயன்
இதே மாதிரி கணணி துறைக்கு ஏதும் இருக்கா?
//

வாங்க‌ நசரேயன் !

கணக்கத்தவனுக்கு கணினியாம்!
:-)

Natty said...

தல, அப்போ பெண்களுக்கு 40 மேல் இருந்தால்?

பழமைபேசி said...

//
Natty said...
தல, அப்போ பெண்களுக்கு 40 மேல் இருந்தால்?

//
நினைச்சேன்....இந்தக் கேள்வியக் கண்டிப்பா யாராவது கேப்பாங்கன்னு....

40 வயசுக்கு மேல, கண்டிப்பா பருவந் தாண்டினவங்க தான்! ஆகவே அவர்கள் விருத்தை.

Mahesh said...

அட...அது அப்பிடியா... உடுமலைல கருணாகரன் டெய்லர்ஸ்னு ஒரு கடை. முதலாளி கருணாகரந்தான் அளவெல்லாம் எடுத்து குறிச்சுக்குவாரு. நாம் சொல்றதை காதுலயே போட்டுக்க மாட்டாரு. அவுரா எதயாவது சொல்லி இதுதான் ஃபேஷன் இப்பிடித்தான் தெக்கணும்னு அடுத்த 3 வருசத்துக்கு சட்டையே தெக்க வேணாம்கற மாதிரி தெப்பாரு. அதைத்தான் "தையல் சொல் கேளேல்"னு சொல்றாங்கன்னு நெனச்சேன் :))))))))))))))))))))))

பழமைபேசி said...

//Mahesh said...
அட...அது அப்பிடியா... உடுமலைல கருணாகரன் டெய்லர்ஸ்னு ஒரு கடை.
//

எங்க குடும்பத் தையல்காரரு, மாரியம்மன் கோயில் வீதி P.V.சண்முகம். அவரும், அதே கதைதான்.

குடுகுடுப்பை said...

பெண்கள் இப்படி பிரிச்சி மேஞ்சு வெச்சுருக்கீரு.என்னமோ நடக்குது.

வாக்களியுங்கள் மக்களே...., வாக்களியுங்க!
ஓட்டூ இல்லாட்டியுமா?


எல்லாம் அத்தவனுக்கு கம்பியூட்டர் வேலயா?

வெண்பூ said...

ஆஹா.. அருமையான விளக்கம்.. மன்னர் சந்தேகம் தீர்ந்தது. யாரங்கே? இந்த பழமைபேசிக்கு உடனே ஆயிரம் பொற்காசுகளை கொடுங்கள்.. :))

ஆட்காட்டி said...

பழைய காலத்தில வாட்ச் இருந்திருக்காதே? அப்புறம் எப்படி அந்தப் பழமொழி வந்தது?

முரளிகண்ணன் said...

உஙக பதிவுகள் எல்லாமே கலக்கலா இருக்கு.

நையாண்டி நைனா said...

/*7 வ‌ய‌சு வ‌ரைக்கும் பேதை
8 லிருந்து 11 வ‌ய‌சு வ‌ரைக்கும் பெதும்பை
12 லிருந்து 13 வ‌ய‌சு வ‌ரைக்கும் மங்கை
14 லிருந்து 19 வ‌ய‌சு வ‌ரைக்கும் மடந்தை
20 லிருந்து 25 வ‌ய‌சு வ‌ரைக்கும் அரிவை
26 லிருந்து 31 வ‌ய‌சு வ‌ரைக்கும் தெரிவை
32 லிருந்து 40 வ‌ய‌சு வ‌ரைக்கும் பேரிளம்
40 க்கு மேல் இருப்பவர்கள் விருத்தை
*/
நான் படித்த வரை, பெண்களின் பருவம் ஏழு என்று நீங்கள் கூறியுள்ள முதல் ஏழு பருவாங்களை தான் படித்து உள்ளேன். நீங்கள் இறுதியாக கூறியுள்ள "விருத்தை" என்பதை எங்கே இருந்து பிடித்தீர்கள் என்பதனை சொன்னால் கொஞ்சம் நல்லா இருக்கும்.

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...

எல்லாம் அத்தவனுக்கு கம்பியூட்டர் வேலயா?
//

நித்திரை அத்தவனுக்கு வலைப்பதிவு வேலை

பழமைபேசி said...

//வெண்பூ said...
ஆஹா.. அருமையான விளக்கம்.. மன்னர் சந்தேகம் தீர்ந்தது. யாரங்கே? இந்த பழமைபேசிக்கு உடனே ஆயிரம் பொற்காசுகளை கொடுங்கள்.. :))
//
நன்றிங்க வெண்பூ!

பழமைபேசி said...

//ஆட்காட்டி said...
பழைய காலத்தில வாட்ச் இருந்திருக்காதே? அப்புறம் எப்படி அந்தப் பழமொழி வந்தது?
//
"தமிழ்" எனும் திரைப் படத்தில் இடம் பெற்ற இடைச் செருகல்.

பழமைபேசி said...

//நையாண்டி நைனா said...
நான் படித்த வரை, பெண்களின் பருவம் ஏழு என்று நீங்கள் கூறியுள்ள முதல் ஏழு பருவாங்களை தான் படித்து உள்ளேன். நீங்கள் இறுதியாக கூறியுள்ள "விருத்தை" என்பதை எங்கே இருந்து பிடித்தீர்கள் என்பதனை சொன்னால் கொஞ்சம் நல்லா இருக்கும்.
//

ஆம், நானும் கூட அந்த ஏழையே பதிவு செய்தேன்.

//Natty said...
தல, அப்போ பெண்களுக்கு 40 மேல் இருந்தால்?//

இந்தப் பின்னூட்டம் கண்ட பின்பு, தெரிந்து கொணடத்தான் அந்த எட்டாவது பருவம். 40க்குப் பின்னால், நிறைவு பெற்ற பருவம் எனும் பொருளில் கடைச் சங்க காலத்த்ற்க்குப் பிறகு சொன்னார்களாம், எஞ்சியது விருத்தை என்று.

பழமைபேசி said...

//முரளிகண்ணன் said...
உஙக பதிவுகள் எல்லாமே கலக்கலா இருக்கு.
//

நன்றிங்க‌ முரளிகண்ணன்!

ஆட்காட்டி said...

ஆபாசமாக(?) இரண்டு பழமொழிகள்.
ஆடான ஆடெல்லாம் புல்லுக்கு அலைய சொத்தி ஆடு நமீதாவுக்கு அலைஞ்சுதாம்.

கேக்கிறவன் கேணையனா இருந்தா கேப்பையில ஸ்பேர்ம் வருமாம்.

நல்லா இல்லாட்டி போடாதியுங்கோ.

பழமைபேசி said...

@@@@ஆட்காட்டி ...

//உங்க பங்களிப்பையும் பகிர்ந்துக்குவோம்.... :-o)

குறும்பன் said...

//
7 வ‌ய‌சு வ‌ரைக்கும் பேதை
8 லிருந்து 11 வ‌ய‌சு வ‌ரைக்கும் பெதும்பை
//
//
இதுல‌ பாருங்க‌, ப‌தினோரு வ‌ய‌சு வ‌ரைக்குமான‌ ப‌ருவ‌ங்க‌ள், பேதை, பெரும்பை ரெண்டையும் சேத்து தைய‌ல்ன்னு சொன்னாங்க‌. //

'பெதும்பை'யா இல்ல 'பெரும்பை'யா? இதுல எது சரி?

பழமைபேசி said...

//'பெதும்பை'யா இல்ல 'பெரும்பை'யா? இதுல எது சரி?//

பெதும்பைதான் சரி!பிழை திருத்தத்துக்கு நன்றிங்க குறும்பன்!!

ராஜ நடராஜன் said...

பழம பழமை அருமை.

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
பழம பழமை அருமை.
//

ரொம்ப நன்றிங்க‌!