10/28/2008

நாள்மீன் (நட்சத்திரங்) களுக்கு நல்ல தமிழ்ப் பெயர்கள்...

அன்பர்களே, நாளைக்கு வேலைல சுளுக்கு எடுக்கப் போறதா முன் கூட்டியே சொல்லி இருக்காங்க. அதனால, நாளைக்கும் சேத்து இன்னைக்கே மேலதிகமா ஒரு பதிவைப் போட்டுட்டு, வேலையக் காப்பாத்துற வழியப் பாக்கலாம்னுதான் இந்த பதிவு.

பன்ணெண்டு இராசிகளையும் நல்ல தமிழ்ப் பேர்ல நாம பொழங்குறோம். ஆனாப் பாருங்க, நாள்மீன் (நட்சத்திரம்)களுக்கு நல்ல தமிழ்ப் பெயர்கள், அதாவது அசுவனியில இருந்து ரேவதி வரைக்கும் இருந்து இருக்கு. அதுக‌ பொழக்கத்துல இல்லாமயே போயிடுச்சு. சரி, அந்த தமிழ்ப் பேருக என்னன்ன, மேல படீங்க.

புரவி
அடுப்பு
ஆரல்
சகடு
மான்றலை
மூதிரை
கழை
காற்குளம்
கட்செவி
கொடுநுகம்
கணை
உத்திரம்
கை
அறுவை
விளக்கு
முறம்
பனை
துளங்கொளி
குருகு
உடைகுளம்
கடைக்குளம்
முக்கோல்
காக்கை
செக்கு
நாழி
முரசு
தோணி

இந்த‌த் த‌க‌வ‌ல் நெச‌மான்னு எல்லாம் யோசிக்காதீங்க‌. முத‌ற்க் குலோத்துங்க‌ சோழ‌ன் கால‌த்து வ‌ர‌லாறுல‌ இருக்குங்க‌. வாய்ப்புக் கெட‌ச்சா, அந்த‌ப் புத்த‌க‌த்தைப் ப‌டிக்க‌ணும். நிறைய‌ த‌க‌வ‌ல் கெடைக்குமே?!


மொடாவ‌ வெளக்கி வை!
இருந்த‌தை எழுதி வை!!

10 comments:

நசரேயன் said...

புத்த‌க‌த்தைப் ப‌டிக்க‌ணும்.
அதுக்கு எல்லாம் நேரம் இல்லைங்க

Mahesh said...

//நசரேயன் said...
புத்த‌க‌த்தைப் ப‌டிக்க‌ணும்.
அதுக்கு எல்லாம் நேரம் இல்லைங்க//

அதுனாலதனே அண்ணன் பதிவாப் போடுறாரு :))))))))

குடுகுடுப்பை said...

என்னோட பின்னூட்டத்தை கானோம்.

உருப்புடாதது_அணிமா said...

நாளைக்கும் சேத்து இன்னைக்கே மேலதிகமா ஒரு பதிவைப் போட்டுட்டு, வேலையக் காப்பாத்துற வழியப் பாக்கலாம்னுதான் இந்த பதிவு.////கடமை உணர்ச்சியை பாராட்டுகிறோம்

பழமைபேசி said...

// நசரேயன் said...
புத்த‌க‌த்தைப் ப‌டிக்க‌ணும்.
அதுக்கு எல்லாம் நேரம் இல்லைங்க
//

குளிரு பொளந்து கட்டுது? வெளிலயும் போக முடியாது....என்ன, செய்யுறீங்க அங்க?

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
என்னோட பின்னூட்டத்தை கானோம்.
//

எங்க போட்டீங்களோ, அங்க இருக்கும். :-o)

பழமைபேசி said...

// Mahesh said...
//நசரேயன் said...
புத்த‌க‌த்தைப் ப‌டிக்க‌ணும்.
அதுக்கு எல்லாம் நேரம் இல்லைங்க//

அதுனாலதனே அண்ணன் பதிவாப் போடுறாரு :))))))))
//

வாங்க மகேசு!

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...

கடமை உணர்ச்சியை பாராட்டுகிறோம்
//

வாங்க ஊர்மாறி! :-o)

உருப்புடாதது_அணிமா said...

/// பழமைபேசி said...

வாங்க ஊர்மாறி! :-o)///

ஏதோ கேப்மாரி மொள்ள மாறி ரேன்ஜுக்கு இருக்கு ...

இந்த IP Location தொல்ல தாங்க முடியலப்பா..

எங்க போனாலும் கண்டு புடிச்சுடுறாங்க...

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...


:-0)