10/12/2008

அறிவியலுன்னு சொல்வீகளா?

புணர்ச்சியேதும் இல்லாமலே
ஒத்தச்செல்லுல அச்சுஅசல்
மனுசனைத்தான் உண்டுபண்ணி
அறிவியலுன்னு சொன்னீங்க!

அன்புப்புணர்ச்சி இல்லாமலே
ஒத்தைநொடியில அணுகுண்டைத்
தலையில போட்டதைத்தானே
அறிவியலுன்னு சொல்வீகளா?

அலைபேசி காணொளியும்
இணையமும் கணினியும்
நல்லநல்ல மருத்துவமும்
அறிவியலுன்னு சொன்னீங்க!

ஈரெண்டுநாலு செவுத்துக்குள்ள
நடக்குறதெல்லாம் ஊருபூரா
போட்டுக் காசுபாக்குறதை
அறிவியலுன்னு சொல்வீகளா?

மாற்றுமரபணு விதைவிதைச்சா
உற்பத்திதான் கூடுறதையும்
காசுநிறையக் கிடைக்குறதையும்
அறிவியலுன்னு சொன்னீங்க!

பாட்டன் முப்பாட்டாந்தந்த
பொன்னு விளையுறபூமி
பட்டுப்போய் பல்இளிக்குறத
அறிவியலுன்னு சொல்வீகளா?

நித்தம்நித்தம் புதுசுபுதுசா
கேளிக்கை பெருகிப்போய்
மனிதகுலம் மகிழுறதை
அறிவியலுன்னு சொன்னீங்க!

மனிதநேயம் அருகிப்போச்சு
பயங்கரவாதம் பெருகிப்போச்சு
அமைதியும் கெட்டுப்போச்சு; இதை
அறிவியலுன்னு சொல்வீகளா?

நாம் அறிவியலுக்கு எதிரானவர்கள் அல்லர்! ஆனால், அறிவியலின் பேரால் நடக்கும் வியாபார மோசடிகளின் விட்டில் பூச்சிகள்!! இரண்டு வயது சிறுவனுக்கு, இருபது வயது ஆடவனின் சட்டையை அணிகிற பட்சத்தில், அதுவே அவன் தடுக்கிக் கீழே விழுந்து, இடர் அடைய வித்தாகும். ஆகவே, அளவுக்கேற்ற அறிவியல் ஆடை அணிவோம். எளிமை காப்போம்! வாழ்வில் இன்புறுவோம்!!

பழுத்த ஓலயப் பாத்து, பச்ச ஓல சிரிச்சதாம்!

38 comments:

சுரேஷ் ஜீவானந்தம் said...

நல்ல கருத்துக்கள்.

பழமைபேசி said...

பாராட்டுக்கு நன்றி சுரேஷ்!

Subash said...

அருமை

குடுகுடுப்பை said...

நல்ல கவிதைகள்.

பகுத்தறிவு மனிதனுக்கு கிடைத்த மிக மோசமான ஆயுதம். அது இருக்கும் வரை நல்லவையும், கெட்டவையும் கலந்து தான் இருக்கும். நம்மால் முடிந்த வரை நன்றாக பயன்படுத்த முயல்வோம்.

அறிவகம் said...

அருமைங்க.. இந்த கொங்குதமிழ் கொஞ்சும் கவிதை. அதுவும் மிதமிஞ்சிய அறிவியலை அழகா கவிதையில் புரியவச்சிருக்கீங்க...

கொங்குநாட்டு பழமொழிகளை எங்க ஆத்தா சொல்லி கேட்க எனக்கு அலாதிபிரியம். பதிவின் முடிவில் பழமொழி கொடுத்து முழுதிருப்தி படுத்தும் தங்கள் எழுத்துநடை எனுக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க...

உருப்புடாதது_அணிமா said...

நச் என்ற வரிகள்...

உருப்புடாதது_அணிமா said...

ஆழ்ந்த கருத்துக்கள்..

உருப்புடாதது_அணிமா said...

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு தான் நண்பரே..
அதே போல இந்த அறிவியல் வளர்ச்சியும் எங்கு சென்று முடியுமோ??
அது அந்த அறிவியலுக்கே வெளிச்சம்

உருப்புடாதது_அணிமா said...

ஆனால்.,இன்று அறிவியல் கண்டு பிடித்த விவசாய முறைகள் தோல்வியில் முடிந்து , நாம் பழைய முறைக்கே திரும்பி கொண்டு இருக்கிறோம் ....

chitravini said...

வாழ்க்கையில் வெற்றி....நம் முன்னோர்கள் ஒரு மிதமான, ஆரோக்கியமான வழி வகுத்துத் தந்தார்கள். அத்துடன்...வெற்றி ஒன்று மட்டுமே வாழ்க்கை அல்ல...அடுத்தவரை காயப்படுத்தாமல் வாழ்வதும் வெற்றிதான் என்று வாழ்ந்து காட்டினார்கள். ஆனால், இன்று...எப்படியாவது வெற்றி...தான் மட்டுமே வெற்றி அடைய வேண்டும்....அதற்காக அறிவியலை எப்படியும் உபயோகிக்கலாம் என்ற எண்ணம் உடைய அறிவிலிகள் பெருகிப் போனதால்...இன்று இந்த நிலை. எங்கு போய் சொல்வது, யாருக்கு சொல்வது, எப்படி சொல்வது?...பழமைபேசி...மன வருத்தம்...அப்படியே வெளிக் கொணர்ந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

நசரேயன் said...

நல்ல கருத்தான கவிதைகள்

Anonymous said...

அறிவியலும் ஆன்மவியலும்

ஒன்றிணைந்தால்தான் உண்டு

நன்மை.

அது சரி said...

நேத்தி தண்ணியடி விரதம் இருந்ததுக்கு...

பாட்டில் மேல பலன் கெடச்சிருச்சி போலருக்கே!

இம்புட்டு நல்லா எழுதுவீங்கன்னா, இனிமே உங்களை அப்பப்ப விரதத்தில விட்றலாம் போல இருக்கே!

பழமைபேசி said...

வாங்க அது சரி அண்ணே! அய்ய, நீங்க என்னோட இந்த பதிவப் பாக்கலயா இன்னும்?
பாட்டில் மேல பலன்

பழமைபேசி said...

//
Anonymous said...
அறிவியலும் ஆன்மவியலும்

ஒன்றிணைந்தால்தான் உண்டு

நன்மை.
//

எனக்கு இதில் உடன்பாடுதான்.... ஆன்மீகம் ஒழுக்கத்தை கற்றுத் தரும் என்கிற ரீதியில். ஆனால், ஒழுக்கம், பொறுப்பு என்பது வேறு வழியாகவும் கற்றுக் கொள்ள முடியும். உதாரணம், சிறந்த விளையாட்டு வீரனாக இருப்பது, சமூக சேவகன் முதலானவை.

பழமைபேசி said...

//
நசரேயன் said...
நல்ல கருத்தான கவிதைகள்
//

வாங்க நசரேயன்! நன்றிங்க!!

பழமைபேசி said...

வாங்க சுபாஷ்! நன்றிங்க!!

பழமைபேசி said...

//
குடுகுடுப்பை said...
நல்ல கவிதைகள்.

பகுத்தறிவு மனிதனுக்கு கிடைத்த மிக மோசமான ஆயுதம். அது இருக்கும் வரை நல்லவையும், கெட்டவையும் கலந்து தான் இருக்கும். நம்மால் முடிந்த வரை நன்றாக பயன்படுத்த முயல்வோம்.
//

அண்ணா, சரியாச் சொன்னீங்க!!

பழமைபேசி said...

//
அறிவகம் said...
அருமைங்க.. இந்த கொங்குதமிழ் கொஞ்சும் கவிதை. அதுவும் மிதமிஞ்சிய அறிவியலை அழகா கவிதையில் புரியவச்சிருக்கீங்க...

கொங்குநாட்டு பழமொழிகளை எங்க ஆத்தா சொல்லி கேட்க எனக்கு அலாதிபிரியம். பதிவின் முடிவில் பழமொழி கொடுத்து முழுதிருப்தி படுத்தும் தங்கள் எழுத்துநடை எனுக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க...
//
ஆமாங்க.... நம்ப ஊர் பழமைகளை பகிர்ந்து கொள்கிற ஒரு முயற்சி தாங்க இது....
வருகைக்கும் பாராட்டுக்கும் நொம்ப நன்றி!

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
ஆழ்ந்த கருத்துக்கள்..
//

மலைக்கோட்டையார் மிக்க நன்றி!

பழமைபேசி said...

//chitravini said...
வாழ்க்கையில் வெற்றி....நம் முன்னோர்கள் ஒரு மிதமான, ஆரோக்கியமான வழி வகுத்துத் தந்தார்கள். அத்துடன்...வெற்றி ஒன்று மட்டுமே வாழ்க்கை அல்ல...அடுத்தவரை காயப்படுத்தாமல் வாழ்வதும் வெற்றிதான் என்று வாழ்ந்து காட்டினார்கள். ஆனால், இன்று...எப்படியாவது வெற்றி...தான் மட்டுமே வெற்றி அடைய வேண்டும்....அதற்காக அறிவியலை எப்படியும் உபயோகிக்கலாம் என்ற எண்ணம் உடைய அறிவிலிகள் பெருகிப் போனதால்...இன்று இந்த நிலை. எங்கு போய் சொல்வது, யாருக்கு சொல்வது, எப்படி சொல்வது?...பழமைபேசி...மன வருத்தம்...அப்படியே வெளிக் கொணர்ந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
//

அண்ணா, நீங்க சொல்லுறது எதார்த்தம்! நீங்க அவசியம் என்னோட மூனாம் விழுது கதை படிங்க!
நன்றிங்க அண்ணா!

பழமைபேசி said...

எமக்கு இனி நிதானமும் பொறுப்பும் தேவை! போட்டுட்டாங்க அன்புக் கடிவாளம்!!

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
ஆனால்.,இன்று அறிவியல் கண்டு பிடித்த விவசாய முறைகள் தோல்வியில் முடிந்து , நாம் பழைய முறைக்கே திரும்பி கொண்டு இருக்கிறோம் ....
//

அடிப்படையிலிருந்து மேல நீங்க கட்டிடம் கட்டலாம். அடிப்படையவே தூக்கிக் கடாசக் கூடாது.

பழமை பெருமையே! பெருமை பழமையே!!

பழமைபேசி said...

//chitravini said...
ஆனால், இன்று...எப்படியாவது வெற்றி...தான் மட்டுமே வெற்றி அடைய வேண்டும்....அதற்காக அறிவியலை எப்படியும் உபயோகிக்கலாம் என்ற எண்ணம் உடைய அறிவிலிகள் பெருகிப் போனதால்...
//

சரியாச் சொன்னீங்க...... துவக்கப் பள்ளியில இருந்து ஒரு விழிப்புணர்வு வரணும். அண்ணா, நாம வரும் காலங்கள்ல நிறையப் பேசுவோம்.

கடைசி பக்கம் said...

:-))

Mahesh said...

நல்ல கவிதை... நல்ல கருத்துக்கள்..... மிக சமீபத்துல விஜய் டிவியில் ஒரு சொல்லாடல் நிகழ்ச்சியிலும் ஒரு பேச்சாளர் இதே உதாரணம் (பொருந்தாத உடை) சொல்லி அறிவியலின் குருட்டுத்தனமான வளர்ச்சியை சாடினார்.

ஆனால், அறிவியல் என்பது ஒரு இருமுனைக் கத்தி. உபயோகிப்பவரின் நோக்கத்தை பொறுத்தது. அழிவுக்கான உபயோகத்தை அறிவியலின் வளர்ச்சி என்றோ வீழ்ச்சி என்றோ போகிற போக்கில் சொல்லி விட முடியாது, அது அறிவியலின் குற்றமல்ல. அறிவியல் என்பது வளர வேண்டிய ஒன்று, வளர வேண்டும். எனவே, இந்த இடத்தில் நீங்கள் "அறிவியல் வளர்ச்சியா" என்று கேட்பதை விட "எண்ணக் கேடா" என்றோ "மனத்தின் வக்கிரமா" என்று வேண்டுமானால் கேட்கலாம்.

பழமைபேசி said...

//கடைசி பக்கம் said...

வாங்க கடைசி பக்கம் !!! :-))

வாங்க மகேசு!

இது ஒரு சித்தாந்தம். மனிதன் இருக்கும் வரை அறிவியல் இருக்கும். அறிவியல் இருக்கும் வரை வளரவும் செய்யும். இது நியதி! ஆனால், வருவதோ விரக்தி!!

இது எப்படி இருக்கு? :-)

ஆட்காட்டி said...

காவோலை விழ குருத்தோலை சிரிச்சதாம்.

பழமைபேசி said...

ஆட்காட்டி said...
காவோலை விழ குருத்தோலை சிரிச்சதாம்.
//
நன்றிங்க!
சாரோலையப் பாத்து குருத்தோலை சிரிச்சதாம். :0)

ஆட்காட்டி said...

யோவ் நீங்க அந்தியூராக இருக்க சந்தர்ப்பங்கள் குறைவு. அப்பிடித்தானே?

பழமைபேசி said...

//
ஆட்காட்டி said...
யோவ் நீங்க அந்தியூராக இருக்க சந்தர்ப்பங்கள் குறைவு. அப்பிடித்தானே?
//
யோவ், சொன்னாக் கேளுங்க.... நான், எங்க அப்பன், பாட்ட்டன், பூட்டன், கொள்ளுப் பாட்டன், எள்ளுப் பாட்டன் அல்லாரும் அந்தியூர்தான்....

ஆட்காட்டி said...

நானும் அந்தியூருக்கு அருகில் 5 வருடங்கள் இருந்துள்ளேன். ஆனால் சாரோலை கேள்விப் பட்டது இல்லை. யாழ்ப்பாணத்தில் தான் பயன் படுத்துவார்கள். அது தான்.

பழமைபேசி said...

//
ஆட்காட்டி said...
நானும் அந்தியூருக்கு அருகில் 5 வருடங்கள் இருந்துள்ளேன். ஆனால் சாரோலை கேள்விப் பட்டது இல்லை. யாழ்ப்பாணத்தில் தான் பயன் படுத்துவார்கள். அது தான்.
//
அய்யா, நான் கனடாவுல படிச்சப்ப நிறய ஈழ நண்பர்கள் சகவாசம் உண்டு.
நீங்க பெரியாளுங்க....சரியாப் போட்டுத் தாக்குறீங்க....

ஆட்காட்டி said...

பனங்கொட்டைன்னா சும்மாவா? பனையின் வேரில்(கொட்டுப்பனை) இருந்து பன்னாடை, ஊமல் கொட்டைவரை கணினியில் தட்டச்சு செய்யும் இந்தக் கையால பொறுக்கி இருக்கிறன். இது கூட தெரியாட்டி.......... தான்.

பழமைபேசி said...

//ஆட்காட்டி said...
பனங்கொட்டைன்னா சும்மாவா? பனையின் வேரில்(கொட்டுப்பனை) இருந்து பன்னாடை, ஊமல் கொட்டைவரை கணினியில் தட்டச்சு செய்யும் இந்தக் கையால பொறுக்கி இருக்கிறன். இது கூட தெரியாட்டி.......... தான்.
//

நாம இப்படியே பேசிட்டு இருந்தா, படிக்கிறவங்க புளிச்ச கள்ளுக‌ன்னு திட்டப் போறாங்க!

ஆட்காட்டி said...

திட்டட்டன். புளிச்ச கள்ளின் அருமை தெரியாதவர்கள். அப்பபுறமா பாக்கலாம்.

பழமைபேசி said...

//ஆட்காட்டி said...
திட்டட்டன். புளிச்ச கள்ளின் அருமை தெரியாதவர்கள். அப்பபுறமா பாக்கலாம்.
//

நீங்க எந்த ஊர்? தெல்லிப்பளை, உடுப்பிட்டி, சங்காணை, இல்ல புங்குடுதீவு? நான் கோப்பாய்க்காரன் கூட்டாளி.... என்னது, நீங்க மணிப்பாய் மாப்பிள்ளையா?