10/03/2008

பழையதன் பெருமை புதுமையே!

From: XXXXXXXXXXXXXXXXXXXX
To: xxxxxxxxxxxxxxxxxxxxx
Subject:
Date: Fri, 3 Oct 2008 10:46:37 +0200

பழையதன் பெருமை புதுமையே


தமிழா என்றும் மறவாதே பழமையை,

தமிழா ஏற்றம் தந்ததும் பழமையே!

தமிழா குற்றம் இல்லை பழமையில்

தமிழா குன்றென நிற்குமே பழமை!!


தமிழா பழையதில் புதுமை காண்பாய்,

தமிழா பழகிய புதுமையும் பழமையே!

தமிழா பழய திராட்சை ரசத்திற்கே மதிப்பு,

தமிழா பழயதை பழகின் தருவது புதுமையே!!



தங்கள் வாசகன்,

அ.இராமலிங்கம்



நண்பரே,

வணக்கம்! இதை விடப் பெருமை, இனி எனக்கு என்ன வேணும்? ரொம்ப நன்றிங்க! அழகான கவிதையைப் பகிர்ந்து கொண்டமைக்கு!! மாற்றங்கள் அவசியமானது, தவிர்க்க முடியாதது! அதே வேளையில், பழமை பேணி காக்க வேண்டும். இல்லை என்றால், அடிப்படை மறந்து சிக்கலில் தவிக்கக் கூடும் என்பதே எம் தாழ்மையான எண்ணம். உதாரணம், சமீபத்திய அமெரிக்க நிதிச் சிக்கல். ஒரு சில ஆயிரங்களுக்கு, வீடு காட்டுப் பத்திரம் கேட்டு வாங்கிப் பெற்றது பழமை. பெரும் தொகைக்கு, எந்த அடிப்படையும் இல்லாமல் அன்றைய தினக் கூலியை மட்டும் கணக்கில் கொண்டு பெரும் தொகையை தூக்கிக் கொடுக்க, சிக்கலில் கொடுத்தவனும், வாங்கியவனுமாக. ஆனால், நம்மில் பலர் இந்த அடிப்படையை ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.

மிக்க நன்றி, நாம் சொல்ல வேண்டியதைச் சொல்லிக் கொண்டே இருப்போம்.!

பணிவுடன்,
பழமைபேசி

4 comments:

குடுகுடுப்பை said...

//தமிழா பழய திராட்சை ரசத்திற்கே மதிப்பு,//

இதுதான் எனக்கு புடிச்சிருக்கு:)

பழமைபேசி said...

@@@குடுகுடுப்பை said...

//
வாங்க அண்ணே! நீங்க சொன்னா சரிதான்!!

Mahesh said...

வந்தாச்சு... வந்தாச்சு.... இன்னிக்கு காலைல சிங்கை மாநகர் திரும்பியாச்சு.... பொறுமையா எல்லா பதிவுகளயும் படிச்சுட்டு பின்னூட்டம் போடறேன்...

பழமைபேசி said...

@@@Mahesh said...

வாங்க! ஊர்ப் பிரயாணம் எல்லாம் நல்ல படியா முடிஞ்சுதா? அண்ணா, ஸ்ரீநகர்னு நாலும் எங்களுக்கு எடுத்து சொல்லுங்க பாப்போம்.