10/18/2008

பின் நவீனத்துவம் - அலசல்!

நண்பர் கூடுதுறை அவர்கள் பின் நவீனத்துவம் எனும் சொல்லை அறிமுகப் படுத்தினார். பின்னர் அது குறித்துத் தெரிந்து கொள்ள முற்பட்டபோது, பல தகவல்களைத் தெரிந்து கொள்ள நேரிட்டது.

அவரவர், அவரவர் வசதிக்கேற்ப இதற்கு விளக்கம் கொடுத்துக் கொள்கிறார்கள். அதற்கும் ஒரு படி மேலே சென்று, சர்ச்சைக்கு உரியவாறு பேசுபவர்கள், எழுதுபவர்களைக்கூட பின் நவீனத்துவவாதி என்கிறார்கள். இவற்றில், ஒரு விளக்கம் மட்டும் எனக்கு ஏற்பு உடையதாக இருந்தது. இதோ அந்த விளக்கம்,

"பின்நவீனத்துவம் ஓர் எதிர்க் கலாச்சாரம். நவீனமயப் படுத்தப்பட்ட சமூகங்களின் அனுபவங்களில் இருந்து உயிர்பெற்ற ஓர் எதிர்க் கலாச்சாரம். நவீனத்துவம் மனிதர்கள் மேல் செலுத்தும் நெருக்கடிகளுக்கு எதிரான கருத்தியல் மறுப்பு. அதன் முக்கியத் தளம் இலக்கியம் மற்றும் மானுட அறிவியக்கங்கள். அந்த நிலையில் பின் நவீனத்துவம் என்பது வட அமெரிக்க, ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் மையம் கொண்ட கல்வித்துறைச் செயல்பாடு!"

இந்த இடத்தில், சுல்தான் பேட்டை இலக்குமி நாயக்கன் பாளையத்துப் பள்ளியில் எமக்குப் பாடம் பயிற்றுவித்த ஆசான் வேலப்ப நாயக்கன் பாளையம், ஜெயராமன் அவர்களுடைய நினைவுதான் வருகிறது. அவர் வேதியல் பாடத்துறைக்குத் தலைவர். நல்ல மனிதர். நாம் இருந்தது ஆண் மாணவர்கள் மட்டுமே இடம் பெற்ற ஒன்பதாம் வகுப்பு முதல் பிரிவில். அவர் எங்களுக்கு ஆங்கில ஆசிரியர். ஆனால், ஆங்கிலம் மட்டுமே கற்றுத் தருகிற சராசரி ஆசிரியர் அல்லர் அவர். வாழ்க்கைக்குத் தேவையான நல்ல பல சூட்சுமங்களை இளம் மாணவர்களிடத்திலே விதைக்கக் கூடியதில் திறம் வாய்ந்த்வர்.

இப்படி இருக்கையிலே, ஒரு நாள் ஆண் குறியைத் தெளிவாகக் கரும்பலகையில் வரைகிறார். வரைந்துவிட்டு, நுனித் தோல் பற்றிப் பேசுகிறார். காரணம், சிறு நீரும் இன்ன பிற மாசும் அங்கே தங்கி இருந்து, ஆரோக்கியம் பாதிக்கக் கூடும் என்கிறார். பின்னர், நீங்களனைவரும் கட்டாயம் அப்பகுதியை குளிக்கும்போதெல்லாம் தண்ணீர் விட்டுக் கழுவுங்கள் என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். உடனே நவீன‌வாதி முத்திரை குத்தப்பட்டது, அரசியல், தலைமை ஆசிரியர் விசாரணை, கூக்குரல்கள் எங்கும். ஆனால் அவரோ, "ஆம். நான் அது பற்றிப் பேசியது உண்மை!" என்றார். சிறிது காலம் சென்றது. குரல்கள் அடங்கியது.

வந்தது மழைக்காலம்! அந்தப் பள்ளியைச் சுற்றிலும் இருப்பது கிராமங்களும், மண் சாலைகளும். மாணவர்கள், அதே ஒன்பதாம் வகுப்பினுள் நுழைகிறார்கள். அதே ஆசான் ஜெயராமன் வருகிறார். அன்று ஆங்கிலத் தேர்வு நடக்க இருந்தது. இன்றைக்கு அது இல்லை என்கிறார். கோவில்களுக்கு நுழையும் முன் நாம் எப்படிக் கை கால் கழுவிவிட்டுச் செல்கிறோமோ, அப்படி வகுப்பினுள் நுழையும் முன்னும் இன்றையிலிருந்து கை, கால் கழுவி கழுவிட்டுத்தான் நுழைய வேண்டும் என்கிறார். காரணம், கால்நடையாகத்தான் பெரும்பாலும் மாணவர்கள் வருவது வழக்கம். ஆதலால், சேறும் சகதியும் இன்னபிற அசுத்தமும் வகுப்பு அறையினுள்.

அடுத்த நாள்! மாணவர்கள் தண்ணீர்க் குழாயடியில். இருப்பதோ, ஒரே ஒரு குழாய். ஆக, ஒரே அல்லோகலம்! கூடவே, சில மாணவர்கள் பிரார்த்தனைக்(prayer) கூட்டத்திற்குத் தாமதம். காரணம் அலசப் பட்டது. கோயில்களில் நுழையுமுன் அப்படியென்றால், பள்ளியிலும் அப்படியே இருக்க வேண்டுமா? அதே கூக்குரல்! அதே அரசியல், அதே விசாரணை!! முத்திரை மட்டும் வேறு, ஆம் இம்முறை பழமைவாதி என!!!

ஆனால், அதே ஆசான்! இரு வேறு முரணான முத்திரைகள்!! இது எப்படி? உண்மை என்ன?? பழமைவாதியுமில்லை, நவீனவாதியுமில்லை, அவர் ஒரு நவீன யதார்த்தவாதி!

நவீனம் எனபதே, பழமையில் மேம்பாட்டைக் கூட்டுவதால் வருவதுதானே?! பழமையைப் புறந்தள்ளிவிட்டு வருவது நவீனமாகுமா? ஒருக்காலும் ஆகிவிட முடியாது என்பது எம் தாழ்மையான எண்ணம். ஒரு வேளை, பழமையைக் கருத்தில் கொள்ளாமல் ஏதேனும் உயிர்த்தது என்றுச் சொன்னால், அவை முழுமையான ஒன்றாக இருக்கவே முடியாது. அதனால்தானே மேற்கத்திய நாட்டவன் இருப்பன‌ அலசுதல்(gap analysis) என்று ஒன்றை வைத்தான்.

உதாரணம், இந்தியாவில் இருந்து அமெரிக்கா வரும் ஒருவன் ஏற்கனவே இருக்கும் சக நாட்டவனின் அனுபவம், கருத்தறியாமல், ஒரு சில முடிவுகளை மேற்கொள்வது உண்டு. கேட்டால், இது நவீன யுகம். அப்ப‌டிச் செய்ப‌வ‌ன் ச‌ரியாக‌ச் செய்வ‌து என்ப‌து குறைவாக‌வே உள்ள‌து. அப்ப‌டியே அவ‌ன் சிற‌ப்பாக‌ச் செய்தாலும், எடுத்துக் கொண்ட‌ நேர‌ம் ம‌ற்றும் செல‌வு அதிக‌மாக‌வே இருக்கும். கார‌ண‌ம், மூதாதைய‌ர் அனைத்தும் அல‌சி ஆராய்ந்து, ந‌ல்ல‌ வ‌ழியை ந‌ம‌க்காக‌ விட்டுச் சென்று உள்ளார்க‌ள். அதைத்தான் நாங்க‌ள் இந்திய‌ ம‌ர‌பு(Desi Protocol) என்று சொல்கிறோம். அத‌னைச் ச‌ரிவ‌ர‌ ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ப‌வ‌ன் புத்திசாலி என்ப‌து நித‌ர்ச‌ன‌ம்! அந்தப் பழமையில் மேம்பாடு காண்பது நவீனம்!! அந்த நவீனத்தின் வழு திருத்துவது பின் நவீனம்!!

கொசுறு: கொங்கு மண்டலத்தில் பழமை பேசுவது என்றால் அளவளாவுதல் என்று பொருள். (உ‍-ம்: திண்ணையில ஒக்காந்து பழமை பேசிட்டு இருந்தேன்!) அதன் அடிப்படையில், அளவளாவி எனும் பொருளில் புனையப்பட்டதே, எம் புனைப் பெயரான பழமைபேசி. எனினும், பழமை பேசுகிறவன் என்கிற பொருள் கொள்வதிலும் எமக்கு மிக்க மகிழ்வே!

பசுவைக் கொன்றால், கன்று பிழைக்குமா?

24 comments:

நசரேயன் said...

நான் தான் முதல் ..

பின் நவீனத்துவம் அருமையான விளக்கம்.

சில சமயம் போறமையாதான் இருக்கு..ம்ஹும் இப்படி எழுத கொடுத்து வைச்சு இருக்கனும்

அது சரி said...

நீங்க சொல்றது தப்பு..

பின் நவீனத்துவம் என்பது முன் நவீனத்துவத்திற்கும், நவீனத்துவத்திற்கும் பிற்பட்ட காலத்தில், ஆனால் பின் பின் நவீனத்துவத்திற்கு முற்பட்ட காலத்தை சேர்ந்த, கோட்பாடுகள் இல்லை, இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் இருந்தால் தப்பு, தவறில்லை, இருப்பதை உறுதி செய்தால் தான் இல்லைமையை அறுதி செய்ய முடியும் என்ற கால கட்டத்தை சேர்ந்தது என சிலேவின் முன் நவீனத்துவ, நவீனத்துவ, பின் நவீனத்துவ தந்தை அறுதியிட்டு சொல்லியிருக்கிறார்..

அவர் எழுதிய "பின் நவீனத்துவ பின்புறங்கள்" நூலை படித்திருக்கிறீர்களா இல்லையா? அதில் 13,174வது பக்கத்தில் வரும் மிக முக்கியமான, பின் நவீனத்துவ வரையறையை மறந்து விட்டீர்களா இல்லை மறைத்து விட்டீர்களா?

அதையெல்லாம் நீங்கள் படிக்கவில்லையா?? படிக்காவிட்டால், இந்தியாவின் பின் நவீனத்துவ தந்தை (என தானே சொல்லிக்கொள்ளும்) சாருவின் வெப்சைட்டை படித்து விட்டு வாருங்கள்.

நானும் இது குறித்து தெளிவாக ஒரு பதிவிட்டிருக்கிறேன்..

http://muranthodai.blogspot.com/2008/08/blog-post.html

பழமைபேசி said...

//
அது சரி said...
நீங்க சொல்றது தப்பு..
//
வாங்க அது சரி அண்ணாச்சி! இந்த வார்த்தையே எனக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் தெரியும். ஆகவே, இதுல நான் சொன்னதுன்னு எதுவும் இல்லை. நான் தெளிவா சொல்லி இருக்குறேன்,

அவரவர், அவரவர் வசதிக்கேற்ப இதற்கு விளக்கம் கொடுத்துக் கொள்கிறார்கள். அதற்கும் ஒரு படி மேலே சென்று, சர்ச்சைக்கு உரியவாறு பேசுபவர்கள், எழுதுபவர்களைக்கூட பின் நவீனத்துவவாதி என்கிறார்கள். இவற்றில், ஒரு விளக்கம் மட்டும் எனக்கு ஏற்பு உடையதாக இருந்தது. இதோ அந்த விளக்கம்,

அப்படியின்னு அஷிஸ் நந்தியோட விளக்கத்தை குடுத்து இருக்குறேன்.

மத்தபடி உங்கதரப்பு விளக்கத்தைக் குடுத்ததுக்கு நன்றிங்க அண்ணா!

பழமைபேசி said...

//நசரேயன் said...
நான் தான் முதல் ..

பின் நவீனத்துவம் அருமையான விளக்கம்.

சில சமயம் போறமையாதான் இருக்கு..ம்ஹும் இப்படி எழுத கொடுத்து வைச்சு இருக்கனும்
//

வாங்க நசரேயன்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!!

Mahesh said...

நான் இந்த ஆட்டைக்கு வரல.... முன்னோ, பின்னோ படிக்க நல்லாயிருந்தா படிக்கறது, ஒண்ணுமே புரியலயா... போய்கிட்டெ இருக்கறது... ஆனா ஒண்ணு... இந்த பி.ந.வுக்கு வலைல தேடிப்பாத்தா ஆயிரம் விளக்கம் இருக்கு. எல்லாமெ சரிதான் போல.

வாங்க மகேசு!

எனக்கு ஊர் ஞாபகந்தான் வருது.... ஆட்டத்துல தோக்கற மாதிரி இருந்தா நாம சொல்லுறது, "டேய், நான் ஆட்டத்துக்கு வரல. போயி, வீட்டுப் பாடம் செய்யனும்!".

நீங்க சொல்லுறது சரி. ஆயிரத்துக்கு மேலயே இருக்கு.... கூடுதுறை நம்மை நல்லா குழப்பி விட்டுடுச்சுங்க. இந்த ஒன்னுதான் எனக்கு சமாதானமா இருக்கு. அவ்வளவுதேன்!

குடுகுடுப்பை said...

நல்லா எழுது இருக்கீங்க ஆனா எனக்கு ஒன்னும் புரியல. நான் எழுதின சாவு காப்பீட்டின் அவசியம் பதிவு பின் நவீனத்துவம் அப்படின்னு ஜி சொல்லிட்டுப்போனார்.ஆனாலும் இது அப்படின்னா என்னான்னு படிக்கிற ஆர்வத்தை தூண்டுது.

இந்தியப்பழமையில் நம் மேல் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் சாதியம் பழமையா இல்லை இடைச்செருகலா?

பின்னாடி பக்கம் மறைக்காம ஜட்டி போடுறதுதான் பின்னவீனத்துவம் அப்படின்னு நம்ம மூலைக்கு தோனுது:)

கூடுதுறை said...

ஆஹா....

இப்ப புரிஞ்சிடுச்சிங்க...

ஆக மொத்தம் முன்னெ பின்னெ குழப்புவதுதான் பின்நவினத்துவம் இது சரியா?

கூடுதுறை said...

//நண்பர் கூடுதுறை அவர்கள் பின் நவீனத்துவம் எனும் சொல்லை அறிமுகப் படுத்தினார். பின்னர் அது குறித்துத் தெரிந்து கொள்ள முற்பட்டபோது, //

நல்லவேளை செய்தீர்கள் இந்த வார்த்தையை நான் அறிமுகப்படுத்தவில்லை. பதிவுலகில் உலா வரும் ஒரு முக்கிய வார்த்தை.... அதைத்தான் நானும் கையாண்டேன்...

மூத்த பதிவர்கள் கோவித்துக்கொண்டு எச்சரிக்கை பதிவிடப்போகிறார்கள்.

பழமைபேசி said...

// நான் எழுதின சாவு காப்பீட்டின் அவசியம் பதிவு பின் நவீனத்துவம் அப்படின்னு ஜி சொல்லிட்டுப்போனார்.//

இதில் அவருடைய் கருத்தே எந்து கருத்தும். நவீனத்தைச் சாடுவதால், அவர் சொன்னது சரியென்று எனக்குப் படுகிறது.

//பின்னாடி பக்கம் மறைக்காம ஜட்டி போடுறதுதான் பின்னவீனத்துவம் அப்படின்னு நம்ம மூலைக்கு தோனுது.//

நான் புரிந்து கொண்டமை அப்படி அல்ல. செய்தன மேலும் திருந்தச் செய் என்பதே பின் நவீனத்துவம்.

//இந்தியப்பழமையில் நம் மேல் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் சாதியம் பழமையா இல்லை இடைச்செருகலா?
//
இடைச்செருகலே....

பழமைபேசி said...

//
கூடுதுறை said...
ஆஹா....

இப்ப புரிஞ்சிடுச்சிங்க...

ஆக மொத்தம் முன்னெ பின்னெ குழப்புவதுதான் பின்நவினத்துவம் இது சரியா?
//

இதைப்பத்தி மாறுபட்ட கருத்துக்கள் இருக்குறதால, நெலமை அப்ப்டி ஆயிடுச்சி... பின்பனிக் காலம் அப்ப்டியின்னா, பனிக்காலதின் பின் பகுதி. அதே மாதிரி பின் நவீனத்துவம் அப்பிடியின்னா, நவீனத்தின் பின் பகுதியின்னு புரிந்து கொள்ளுறதுல ஏன் இவ்வளவு குழப்பம்னு தெரியல. அப்படியில்லாத பட்சத்துல, இந்த வார்த்தையவே தூக்கிக் கடாசனும்ங்றது என்னோட கருத்து. நீங்க அந்த வார்த்தைய எங்கிட்ட அந்த அர்த்ததுலதான் சொன்னீங்களா? அப்படியின்னா, நான் எங்க முன்னுக்குப் பின் முரணா எழுதி இருக்கேன்? (குத்தூசியா?)

பழமைபேசி said...

//கூடுதுறை said...

நல்லவேளை செய்தீர்கள் இந்த வார்த்தையை நான் அறிமுகப்படுத்தவில்லை. பதிவுலகில் உலா வரும் ஒரு முக்கிய வார்த்தை.... அதைத்தான் நானும் கையாண்டேன்...

மூத்த பதிவர்கள் கோவித்துக்கொண்டு எச்சரிக்கை பதிவிடப்போகிறார்கள்.
//

அய்ய, இந்த இலட்சணத்துல இதுக்கு காப்புரிமை வேறயா? எனக்கு நீங்க அறிமுகப்படிச்சி வெச்சீங்கன்னு சொல்ல வர்றேன். ஒ... ஓ.., உங்களுக்கு அப்ப்டி வேற ஒரு ஆசையா?

Kasi Arumugam - காசி said...

//கொசுறு: கொங்கு மண்டலத்தில் பழமை பேசுவது என்றால் அளவளாவுதல் என்று பொருள். (உ‍-ம்: திண்ணையில ஒக்காந்து பழமை பேசிட்டு இருந்தேன்!) அதன் அடிப்படையில், அளவளாவி எனும் பொருளில் புனையப்பட்டதே, எம் புனைப் பெயரான பழமைபேசி.//

இதைப்பற்றி நானும் குறிப்பிட இருந்தேன் ('பாடு பழமை' பற்றித்தெரியாதவர்களால் உங்கள் பெயர் தவறாகப் புரிந்துகொள்ளப்பட வாய்ப்பிருப்பதை). நீங்களே எழுதிவிட்டீர்கள்.:)

பழமைபேசி said...

//
Kasi Arumugam - காசி said...

இதைப்பற்றி நானும் குறிப்பிட இருந்தேன் ('பாடு பழமை' பற்றித்தெரியாதவர்களால் உங்கள் பெயர் தவறாகப் புரிந்துகொள்ளப்பட வாய்ப்பிருப்பதை). நீங்களே எழுதிவிட்டீர்கள்.:)

//
வாங்க அண்ணா, வணக்கமுங்க! சௌக்கியமுங்ளா?? நீங்க வந்து, நல்ல பழமை சொல்லுறதுல நொம்ப சந்தோசமுங்க....

பழமைபேசி said...

எங்க அண்ணன் காசி ஆறுமுகம் அவிங்களப் பத்தித் தெரியாதவிங்க, இந்தத் தொடுப்பைச் சொடுக்கித் தெரிஞ்சுக்குங்கோ.....

அண்ணன் காசி ஆறுமுகம்

பழமைபேசி said...

கூடுதுறையார், நீங்க திண்ணையில இருக்குறது தெரியுது.... ம்ம்... சொல்லுங்க...

அது சரி said...

//
பழமைபேசி said...
//
அது சரி said...
நீங்க சொல்றது தப்பு..
//
வாங்க அது சரி அண்ணாச்சி! இந்த வார்த்தையே எனக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் தெரியும். ஆகவே, இதுல நான் சொன்னதுன்னு எதுவும் இல்லை. நான் தெளிவா சொல்லி இருக்குறேன்,

அவரவர், அவரவர் வசதிக்கேற்ப இதற்கு விளக்கம் கொடுத்துக் கொள்கிறார்கள். அதற்கும் ஒரு படி மேலே சென்று, சர்ச்சைக்கு உரியவாறு பேசுபவர்கள், எழுதுபவர்களைக்கூட பின் நவீனத்துவவாதி என்கிறார்கள். இவற்றில், ஒரு விளக்கம் மட்டும் எனக்கு ஏற்பு உடையதாக இருந்தது. இதோ அந்த விளக்கம்,

அப்படியின்னு அஷிஸ் நந்தியோட விளக்கத்தை குடுத்து இருக்குறேன்.

மத்தபடி உங்கதரப்பு விளக்கத்தைக் குடுத்ததுக்கு நன்றிங்க அண்ணா!

//

பின் நவீனத்துவமெல்லாம் இருக்கட்டும், என்னோட பின்னூட்டத்தை படிக்கவே இல்லையா? :0))))

நான் விளக்கமெல்லாம் கொடுக்கல..முடிஞ்சா திருப்பி படிச்சி பாருங்க..உள் குத்து எதுனா தெரியும் :0)

பழமைபேசி said...

//
பின் நவீனத்துவம் என்பது முன் நவீனத்துவத்திற்கும், நவீனத்துவத்திற்கும் பிற்பட்ட காலத்தில், ஆனால் பின் பின் நவீனத்துவத்திற்கு முற்பட்ட காலத்தை சேர்ந்த, கோட்பாடுகள் இல்லை, இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் இருந்தால் தப்பு, தவறில்லை, இருப்பதை உறுதி செய்தால் தான் இல்லைமையை அறுதி செய்ய முடியும் என்ற கால கட்டத்தை சேர்ந்தது என சிலேவின் முன் நவீனத்துவ, நவீனத்துவ, பின் நவீனத்துவ தந்தை அறுதியிட்டு சொல்லியிருக்கிறார்..
//

அண்ணாச்சி, நீங்க சொன்ன இதுல சொல்லி இருக்குற எல்லாமே, நல்லாவே புரிஞ்சி, இல்ல அண்ணாச்சி...அதான் மொதல் வரியோட நிப்பாட்டிகிட்டேன்...
ஏற்கனவே, நம்ம மனசு கலங்கிப் போய் நிக்குது.... ஒப்பந்தம் போட்ட வீட்டை வாங்கலாமா? இல்ல, முன் பணம் போனாப் போகட்டுமான்னு நெனச்சி, நெனச்சி கொழப்பத்துல இருக்கேன் அண்ணாச்சி!

அவன் அறுபதினாயிரம் வெள்ளி தள்ளித் தாறேங்கிறான். ஆனா, அதுக்கும் வீடு தகுமா? இதான் என்னோட தலைவலி! இல்ல அஞ்சாயிரத்தோட போகுட்டுங்கழுதைன்னு விட்டுறலாமா??

chitravini said...

புரிந்த மாதிரியும், புரியாத மாதிரியும் இருக்கு. இந்த பின் நவீனத்துவம் நம் அன்றாட வாழ்க்கையை எந்த விதத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கிறது? அல்லது எதிர்கால விளைவுகள் என்ன?

பழமைபேசி said...

@@@chitravini
பின் நவீனத்துவம்

I will be back soon and provide more info Anna. But please watch this one in which presenter talks about post-modernization in economic era.

பழமைபேசி said...

//
chitravini said...
புரிந்த மாதிரியும், புரியாத மாதிரியும் இருக்கு. இந்த பின் நவீனத்துவம் நம் அன்றாட வாழ்க்கையை எந்த விதத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கிறது? அல்லது எதிர்கால விளைவுகள் என்ன?
//
அண்ணா, நான் புரிந்து கொண்டதின்படி, அது மிகவும் அவசியமானது. நவீனத்தின் விளைவுகள் என்ன என்று ஆய்ந்து, அதனைச் சரி செய்தல். உதாரணம்: நாம் சிறுவர்களாக இருந்த பொழுது பள்ளம் படுகைகளில் ஓடித் திரிந்தோம். இப்போது, காணொளியில் அதே மாதிரியான மாதிரிகளில் ஓடித் திரியும் படியான விளையாட்டுக்கள்(video games) நிறைய. அது நல்லதா? சிறுவர்கள் மணிக் கணக்கில் முடங்கலாமா?? இதுதான் பின் நவீனத்துவம் எழுப்புகிற கேள்விகள். அதற்கான விடை உங்களிடத்தில்!

ராஜ நடராஜன் said...

பழம நல்லாத்தேன் பேசுறீங்க.பதிவுக்கு இணைப்புக் கொடுத்தமைக்கு நன்றி.இனி பின்னூட்டங்களையும் ஒரு பார்வை பார்த்து விடுகிறேனே:)

ராஜ நடராஜன் said...

அது சரி.பழம பேச ஒரு கூட்டமே இருக்குறது இப்பத்தான் தெரியுது:)

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
பழம நல்லாத்தேன் பேசுறீங்க.பதிவுக்கு இணைப்புக் கொடுத்தமைக்கு நன்றி.இனி பின்னூட்டங்களையும் ஒரு பார்வை பார்த்து விடுகிறேனே:)
//

எல்லாம் நம்மூர்ப் பழமதான்... நம்ம ஊட்டுப் பக்கம் வந்து போங்க...