10/11/2008

தண்ணியடி விரதம்!

அபிமானிகளின் வேண்டுகோளுக்கு இணங்க விரதம் முடிவு பெற்றது! (...ச்சும்மா, நாமளே சொல்லிக்க வேண்டியது தான்.... எத்துனை தலைவர்களை நாங்க பாத்து இருக்கோம்?!)நேற்றைய பதிவினைப் பார்த்தும், அண்ணன் குடுகுடுப்பையார், அண்ணன் மலைக்கோட்டையார் (அணிமா) மற்றும் நண்பர் துக்ளக் மகேசு ஆகியோர் பேசாமல் கொள்ளாமல் சென்றுவிட்டமையால், பழமைபேசி இன்று தண்ணியடி விரதம்! எமது, பதிவும் காலவரையறை இன்றி ஒத்தி வைக்கப்படுகிறது.


பொண்டாட்டிய வித்து,
தண்டட்டிய வாங்குனானாம்!

13 comments:

அது சரி said...

தண்ணியடிக்க இப்பிடி ஒரு காரணம் இருக்கா? அடடா, எனக்கு இம்புட்டு நாளு தெரியாம போச்சே...குடுகுடுப்பையாரின் அநீதியை கண்டித்து நானும் மட்டையாகும் வரை "நீர் ஊற்றும் விரதம்" மேற்கொள்கிறேன். எல்லாம் உங்களுக்கு சப்போர்டா தான்..எனக்கு தண்ணியடிக்கனும்னு ஆசையெல்லாம் கெடையாது பாத்துக்கங்க..

(உங்க கூகிள் படம் நானும் கமென்ட் போடலை. ஏன்னா, என்னால அதை பாக்கவே முடியலை.. ரெண்டு தடவையும் பிரவ்ஸர் க்ராஷ் ஆயிடுத்து..அப்பிடி என்ன படம் போட்டீங்க சாமி?)

பழமைபேசி said...

அது சரி அண்ணே வாங்க! ஆதரவுக்கு நன்றி!!

http://docs.google.com/Presentation?id=dd46xr8f_0cn88qphf

அப்ப இங்க போய் பாருங்க....

குடுகுடுப்பை said...

ஏதோ எங்க புண்ணியத்தில குடியும்,குட்டித்தனமுமா இருந்தா சரி

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
ஏதோ எங்க புண்ணியத்தில குடியும்,குட்டித்தனமுமா இருந்தா சரி

//

இப்பிடியெல்லாம் பேசி, நீங்க பழமைபேசியை கோவப்படுத்தக்கூடாது. அவர் என்ன குடிக்கிறதுக்கா விரதம் இருக்கார்?

இனிமே இப்பிடி ஆனா,அவரு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பார். இல்லிங்கண்ணே?

அப்பிடி உண்ணாவிரதம் இருந்தா, இப்பவே உறுதியா சொல்றேன், நான் வெளியில இருந்து முழு ஆதரவு தர்றேன்!

பழமைபேசி said...

அது சரி அண்ணாச்சி, நீங்க சொல்லுறது நொம்பச் சரி!

அந்த "ட்"ன்னா விசயமா ஒண்ணும் சொல்லைலயே?

உருப்புடாதது_அணிமா said...

ஹையோ அப்ப வந்துட்டேன்.. நேத்து ஒரு சின்ன ப்ராப்ளம் ... பின்னோட்டம் போட முடியல.. அதனால தான்...

உருப்புடாதது_அணிமா said...

நீங்களே இப்படி தண்ணி அடி விரதம் இருக்கும் போது நான் மட்டும் அப்படி இல்லாமல் இருந்தால் அது நம்ப நட்ப்புக்கு செய்யும் துரோகம்.. ஆதாலால் நானும் இன்று (ம்) தண்ணியடி விரதம் இருக்க போகிறேன்..

உருப்புடாதது_அணிமா said...

@#$%^&@*)$_@#($&%$)@#+!+

தண்ணி அடிச்சுட்டு பின்னூட்டம் போட்டா ஏன் இப்படி வருது...

பழமைபேசி said...

//
உருப்புடாதது_அணிமா said...
@#$%^&@*)$_@#($&%$)@#+!+

தண்ணி அடிச்சுட்டு பின்னூட்டம் போட்டா ஏன் இப்படி வருது...
//

நல்லாத்தானே வந்து இருக்கு..... உமக்கு நொம்ப ஏறிடுச்சு போல....

குடுகுடுப்பை said...

நாந்தான் குடிகுடிப்ப பேசரேன் எப்டீஈஇ இருக்கீங்காஆஆஆஆஅ

பழமைபேசி said...

நண்பர்களே,

நீங்கள் எப்படி இப்படி ஒரு பதிவைப் போடலாம் என்று சில அபிமானிகள் கேட்டு இருக்குறீர்கள். தங்கள் அன்புக்கும் அபிமானத்திற்கும் மிகவும் கடமைப்பட்டு இருக்கிறேன். குறிப்பாக, நண்பர் செல்வகுமார்
அவர்கள் இத்தனை சிரத்தையாக எடுத்துக் கொள்ளத் தேவை இல்லை. ஒரு உணர்ச்சிப் பரவசத்தில் விளைந்த ஒன்றே. எனினும் யாம் இதனை மனத்தில் கொள்வோம் வரும் காலங்களில்.

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
நாந்தான் குடிகுடிப்ப பேசரேன் எப்டீஈஇ இருக்கீங்காஆஆஆஆஅ
//

அண்ணா, நான் நல்லா இருக்கேன்.... உங்க நட்புக்கும் அன்புக்கும் மிகவும் கடமைப்பட்டு இருக்கேன். அடுத்த வாரம் வெளியூர், PHL, PA போகணும். அதான், இந்த ஓரிரு நாள்ல கொஞ்சம் அதிகம்.

பழமைபேசி said...

எமக்கு இனி நிதானமும் பொறுப்பும் தேவை! போட்டுட்டாங்க அன்புக் கடிவாளம்!!