10/26/2008

பாவி மனசக் கெறங்க வெக்கிறியே?!

இந்தப் பாட்டு, ஒரு வாசகர் விருப்பப் பாட்டுங்க. நம்ம வட அமெரிக்க வலைஞர் தளபதி நசரேயன் அவிங்களோட விருப்பப் பாடல்.

பாவி மனசக் கெறங்க வெக்கிறியே?!

ஆத்துப் பக்கம் போவமா,
அந்த வட்டப் பாறையோரம் போவமா?
இல்ல, பலபேருபாக்க
நாம கோயப்பக்கம் போவமா??
அட இன்னாரு பெத்த மவளே,
சிரிச்சிப் பேசி, சிணுங்கி நீயும்
இந்தப் பாவி மனசக் கெறங்க வெக்கிறியே?!

கருத்தபுள்ள முழிசுருட்டி
குளத்துக்குள்ள ஆள்பகட்டி
கொழந்தப்பய நான் வருவேன்
கொண்டணைக்க வேணுமடி
சடசடன்னு மழைபொழிய‌
சத்தத்தோட இடி இடிக்க‌
கொங்காடிபோட்டு நான்வ‌ருவேன்
கொண‌ம‌யிலே நீயிருக்க‌வேணும்!

ஆத்துப் பக்கம் போவமா,
அந்த வட்டப் பாறையோரம் போவமா?
இல்ல, பலபேருபாக்க
நாம கோயப்பக்கம் போவமா??
அட இன்னாரு பெத்த மவளே,
சிரிச்சிப் பேசி, சிணுங்கி நீயும்
இந்தப் பாவி மனசக் கெறங்க வெக்கிறியே?!

வ‌ட்ட‌ப்பொட்டு வெக்காத‌டி
குறுகுறுன்னு பாக்காத‌டி
காயில‌யும் ந‌ல்ல‌காயாம்
காட்ட‌மான‌ முருங்க‌க் காயாம்
அந்த‌ முருங்க‌க்காயத் தின்னுப்பிட்டு
ம‌ன‌சுலென்னை வெச்சுகிட்டு
த‌ங்க‌ம‌யிலே நீயிருக்க‌வேணும்!

ஆத்துப் பக்கம் போவமா,
அந்த வட்டப் பாறையோரம் போவமா?
இல்ல, பலபேருபாக்க
நாம கோயப்பக்கம் போவமா??
அட இன்னாரு பெத்த மவளே,
சிரிச்சிப் பேசி, சிணுங்கி நீயும்
இந்தப் பாவி மனசக் கெறங்க வெக்கிறியே?!

குறுங்கட்டலு, வெறுங்கட்டலாவே இருக்க முடியுமா?

அந்த ஓட்டு மக்களே?

12 comments:

Mahesh said...

ம்ம்...நடக்கட்டும்... நடக்கட்டும்... நேயர் விருப்பமா? இந்தாங்கப்பா.. பழமைபேசி FM launch பண்ணியாச்சுடோய்.... :)))) கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க...

ராஜ நடராஜன் said...

//குறுங்கட்டலு, வெறுங்கட்டலாவே இருக்க முடியுமா?//

பழம புதுசாயிருக்கே.வெளக்கஞ் சொல்லுங்க.

பழமைபேசி said...

//Mahesh said...
ம்ம்...நடக்கட்டும்... நடக்கட்டும்... நேயர் விருப்பமா? இந்தாங்கப்பா.. பழமைபேசி FM launch பண்ணியாச்சுடோய்.... :)))) கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க...
//

ஆகா!

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
//குறுங்கட்டலு, வெறுங்கட்டலாவே இருக்க முடியுமா?//

பழம புதுசாயிருக்கே.வெளக்கஞ் சொல்லுங்க.
//

ஒத்தையாளுன்னா திண்ணையில படுப்போம்.... இல்லாட்டி, ஊட்டுக்குள்ள இருக்குற குறுங்கட்டல்லதான் படுக்கனும்...

அய்ய திண்ணையில.... நல்லாவா இருக்கும்? நீங்களே சித்த ரோசனை பண்ணிப்பாருங்க! என்னங்க நீங்க??

பழமைபேசி said...

:-o)

உருப்புடாதது_அணிமா said...

நாங்க திரும்பி வந்துடோம்ல இனி பட்டைய கிளப்பிடுவோம்ல//..

தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

மீண்டும் பிறகு வருகிறேன் ..

( இப்போதைக்கு அப்பீட்ட்டு அப்பாலிக்க ரிப்பீட்டு)

நசரேயன் said...

பாட்டு மனசை கிறங்க வைக்குதுங்க.

வலைஞர் தளபதி நசரேயன் வாழ்க

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
நாங்க திரும்பி வந்துடோம்ல இனி பட்டைய கிளப்பிடுவோம்ல//..
//
வாங்க இராசா, வாங்க‌!!!

பழமைபேசி said...

//
நசரேயன் said...
பாட்டு மனசை கிறங்க வைக்குதுங்க.

வலைஞர் தளபதி நசரேயன் வாழ்க
//

வலைஞர் தளபதி நசரேயன் வாழ்க!

கூடுதுறை said...

தங்களூக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

குடுகுடுப்பை said...

பழம பேசி ரொம்ப வெவர மிட்டாய் சாப்பிட்டவரு போல இருக்கு

sivam said...

அருமையான எழுத்து. மேலும் இன்தமிழில் பகிர்ந்து கொள்ள 'இன் தமிழுக்கு' In-Tamil.com வாருங்கள். இன் தமிழ் மூலம் உங்கள் இணைய தள வாசகர்களை பெருக்குங்கள்.