10/08/2008

சரி செய்யுற கிராமியப் பாட்டு!

ஈசல் இறகுபோல இருபுறமும் கண்டாங்கி,
கல்லில் அடியாம கசக்கி நல்லா தந்திருவேன்!

கல்லில் அடியாம கசக்கி நல்லா தந்தியானா,
தாயாரு அறியாமலே தனியாக நான் வருவேன்!


தாயாரு அறியாமலே தனியாக வந்தியானா,
தட்டான் அறியாமலே தாலி பண்ணி நாந்தாறேன்!

தட்டான் அறியாமலே தாலி பண்ணித் தந்தியானா,
ஊராரு அறியாமலே நாலு சொகம் நாந்தாறேன்!

ஊராரு அறியாமலே நாலு சொகம் தந்தியானா,
அடுத்த ஊடு தெரியாம ராராட்டு நாந்தாறேன்!

அடுத்த ஊடு தெரியாம ராராட்டுத் தந்தியானா,
ஆத்தா அறியாம வாக்கப்பட்டு நான் வாறேன்!


நீ கோவணத்தோட பொறந்திருந்தா,
அவ கொசுவத்தோட பொறந்திருப்பா!

5 comments:

Mahesh said...

ராராட்டுன்னா என்ன?

பழமைபேசி said...

//Mahesh said...
ராராட்டுன்னா என்ன?

//

தாலாட்டு == ஆராட்டு, ரோராட்டு, ஓராட்டு, ராராட்டு,
தொட்டிப் பாட்டு, தூரிப்பாட்டு

குடுகுடுப்பை said...

ஊரார் உறங்கையிலே பாட்டு மாதிரியே இருக்கு.

குடுகுடுப்பை said...

அண்ணனுக்கு இந்த பாட்டை அனுபவிச்ச அனுபவம் உண்டா ?

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
அண்ணனுக்கு இந்த பாட்டை அனுபவிச்ச அனுபவம் உண்டா ?

//அண்ணே வாங்க! இதெல்லாம் இந்த மாதிரி இடத்துல பேச முடியுமா? :-)