10/06/2008

கோவை அய்யாமுத்து - 2

வழக்கமாக தமிழுக்கே உரிய சாபக்கேடாக அய்யாமுத்து பற்றிய குறிப்புக்களும் நூல்களும் தமிழில் அதிகம் வரவில்லை. அவர் வாழும் காலத்திலும் மறைந்த பின்னரும் நன்றி மிகுந்த தமிழர்களாலும் அவர் சார்ந்திருந்த காங்கிரஸ் இயக்கத்தினராலும் வெகுவாகப் புறக்கணிக்கப்பட்டார். அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் மட்டுமே தனியொருவராக அய்யாமுத்து அவர்களின் நினைவினைப் போற்றி வருகிறார், அவருடைய நிறுவனத்தின் ஆதரவில் வெளிவரும் ஓம்சக்தி இதழ் பலமுறை அய்யாமுத்துவைப் பற்றிய நினைவுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. பொள்ளாச்சியில் அருட்செல்வர் கட்டியுள்ள திருமண மண்டபத்தில் அய்யாமுத்து மற்றும் அவருடைய துணைவியார் கோவிந்தம்மாள் ஆகியோரின் உருவப்படங்கள் அவர்கள் உயிருடன் இருந்த போதே திறந்து வைக்கப்பட்டன.

இதைத் தவிர அந்த மாபெரும் மனிதர் மற்றும் அவருடைய ஒப்பற்ற துணைவியார் பற்றிய நினைவுகள் தமிழர்களின் நினைவுத் தடத்திலிருந்து முற்றாக அழிந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மேலதிக விபரங்களுடன் கூடிய, கீழ்க் கண்ட பதிவினை நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டுகிறேன்.

காந்திய நெறியில் ஒரு தடம் - கோவை அய்யாமுத்து


ஒழச்சித் திங்குறது ஒரு கோடி! ஏச்சித் திங்குறது ஏழு கோடி!!

6 comments:

குடுகுடுப்பை said...

நீங்க யாரை சொல்றீங்கன்னு எனக்கு சத்தியமா தெரியலங்க

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
நீங்க யாரை சொல்றீங்கன்னு எனக்கு சத்தியமா தெரியலங்க
//

வாங்க அண்ணே!

அதான் நம்ம ஆதங்கமுங்க.... அப்ப நீங்க, தொடுப்பை சொடுக்கி முழு விபரமும் படிச்சு தெரிஞ்சுக்குங்க......

தெரிஞ்சு என்னத்துக்கு ஆவுது?
ச்சும்மா, இப்படியும் இருந்தாங்கன்னு ஒரு தகவல் தான்.....

Mahesh said...

கெட்டது தானா வந்து சேரும்..... நல்லது தேடித்தான் கண்டுக்கணும்-கிறது எவ்வளவு சத்தியமான வார்த்தை.

பழமைபேசி said...

//Mahesh said...
கெட்டது தானா வந்து சேரும்..... நல்லது தேடித்தான் கண்டுக்கணும்-கிறது எவ்வளவு சத்தியமான வார்த்தை.
//

சரியாச் சொன்னீங்க.....

K.R.அதியமான் said...

vwery many thanks for this post and the link.

Anonymous said...

இதை மிஸ் பண்ணியிருக்கேன். சுட்டி கொடுத்ததுக்கு நன்றி