10/25/2008

மஞ்சலவுக்க தாரேன்!

மஞ்சலவுக்க தாரேன்
மாருக்கேத்த சேலதாரேன்
கொஞ்ச லவுக்கதாரேன் - இப்ப‌
மச்சான்னு கூப்புடுடி!

அமராவதி ஆத்தங் கரையோரம்
அரும்பரும்பா வெத்திலையாம்
போட்டாச் செவக்குதில்லே
பூமயிலே ஒம்மயக்கம்
உழுத புழுதிக்குள்ள‌
உப்புக் கொண்டு போறபுள்ள‌
உப்புவெலை சொன்னியின்னா
கொப்புப் பண்ணி போட்டுருவேன்
ஏருக்கு முன்னால‌
எருப்பொருக்கி போற குட்டி
மாருக்கு முன்னால ரெண்டு
மயிலிருந்து கூவுதடி!

மஞ்சலவுக்க தாரேன்
மாருக்கேத்த சேலதாரேன்
கொஞ்ச லவுக்கதாரேன் - இப்ப‌
மச்சான்னு கூப்புடுடி!

--------------------------------------------------

தந்தனத்தான் தோப்புல‌,
தயிரு விக்கிற பொம்பளே,
தயிரு போனா மயிரு போச்சு,
கிட்ட வாடி எம்மயிலே!


நான் கோவனத்தோட பொறந்திருந்தா, அவ‌
கொசுவத்தோட பொறந்து இருப்பால்ல?!

11 comments:

குடுகுடுப்பை said...

மச்சினியை மயக்கும் கலை தெரிந்த பழமைபேசி வாழ்க. என் வேற கலர் லவுக்கையெல்லாம் போட மாட்டகளா

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
மச்சினியை மயக்கும் கலை தெரிந்த பழமைபேசி வாழ்க. என் வேற கலர் லவுக்கையெல்லாம் போட மாட்டகளா
//

அண்ணே வாங்க! எல்லா லவுக்கையும் போடுவாக அவிக...

Mahesh said...

மஞ்ச லவுக்க தாரதே கூட்டத்துல எங்க இருந்தாலுங் கண்டுபுடிக்கத்தானே !!!

இதெல்லாம் நீங்க இட்டுக் கட்டறதா இல்ல பொழக்கத்துல இருந்த பாட்டுகளா?

பழமைபேசி said...

//இதெல்லாம் நீங்க இட்டுக் கட்டறதா இல்ல பொழக்கத்துல இருந்த பாட்டுகளா?//

பொழக்கத்துல இருந்த பாட்டுக.... நாம பதியறதுல முக்கால்வாசி கெராமத்துச் சரக்குதேன்.... நேயர் விருப்பமா, மறுபடியும் ஒன்னு சேத்தப் போறேன்....பாருங்க....

நசரேயன் said...

ஐயா நீங்க மஞ்சள் அழகியை மயக்க எழுதின பட்டு மாதிரி இருக்கு

கூடுதுறை said...

என்ன இது ஒரே பாட்டா இருக்கு...

பழமைபேசி said...

// நசரேயன் said...
ஐயா நீங்க மஞ்சள் அழகியை மயக்க எழுதின பட்டு மாதிரி இருக்கு
//

உங்க விருப்பத்தை எதுக்கு மறுக்கணும்?!

ஆத்துப் பக்கம் போவமா, இல்ல வட்டப் பாறையோரம் போவமா?
இல்லப் பலபேரு பாக்க நாம கோயப்பக்கம் போவமா??
அட இன்னாரு பெத்த மவளே, சிரிச்சிப் பேசி, சிணுங்கி
நீயும் இந்தப் பாவி மனசக் கெறங்க வெக்கிறியே?
..................
..................


இப்படிப் பாடினதையும் சொல்லுவோம்ல...நீங்க காத்திருக்கணும்ல??

பழமைபேசி said...

//கூடுதுறை said...
என்ன இது ஒரே பாட்டா இருக்கு...
//

கோழி கூப்பிடப் பாட்டுத்தான் வரும்?!

ராஜ நடராஜன் said...

வணக்கம் பழம:)

நேத்தெல்லாம் ஒரே சாடை பேசுறது, பொரளி பேசுறது, விட்டேத்தியாப் பேசுறது, பொடி வெச்சிப் பேசுறது பத்தியே நினப்பு.

இன்னிக்கு என்ன சொல்றீங்கன்னு ஓடியாந்தா "அமராவதி ஆத்தங் கரையோரம்
அரும்பரும்பா வெத்திலையாம்" சொல்றீங்க.நான் குளிச்ச அமராவதி ஆத்தங்கரையோரம் அரும்பு வெத்திலையப் பாக்கலையே.அதுக்குப் பதிலா கரும்புன்னு சொல்லியிருந்தா சரியாயிருந்திருக்குமோ.அல்லது அங்க அங்க வெத்திலை மாதிரி பரவுகிற இலைகளைத்தான் அப்படி இட்டுக்கட்டிப் பாடியிருப்பாங்களோ?

கிட்டவாடி பொம்பள பாட்டெல்லாம் கேட்டுத் தேஞ்ச பழைய ரெக்காடு எனக்கு:)

பழமைபேசி said...

வாங்க ஐயா, வாங்க!

//
நான் குளிச்ச அமராவதி ஆத்தங்கரையோரம் அரும்பு வெத்திலையப் பாக்கலையே.அதுக்குப் பதிலா கரும்புன்னு சொல்லியிருந்தா சரியாயிருந்திருக்குமோ.
//
நெனப்பெல்லாம் அவ மேல இருக்குறதால, நாக்குச் செவக்குதில்லேன்னு பாடி இருப்பாங்க போல....

//கிட்டவாடி பொம்பள பாட்டெல்லாம் கேட்டுத் தேஞ்ச பழைய ரெக்காடு எனக்கு:)//

இந்தக் காலத்து சின்னராசுக்குமா?

:-o)

நசரேயன் said...

/*
ஆத்துப் பக்கம் போவமா, இல்ல வட்டப் பாறையோரம் போவமா?
இல்லப் பலபேரு பாக்க நாம கோயப்பக்கம் போவமா??
அட இன்னாரு பெத்த மவளே, சிரிச்சிப் பேசி, சிணுங்கி
நீயும் இந்தப் பாவி மனசக் கெறங்க வெக்கிறியே
*/
இது நல்ல இருக்கு, சீக்கிரம் முழுசா வரட்டும் பழமைபேசி