10/13/2008

கனவில் கவி காளமேகம் - 6

கனவில் கவி காளமேகம் - 5

நம்ம கனவுல வந்துட்டு இருந்த கவி காளமேகம், ரொம்ப நாளா வரலை பாருங்க. என்ன காரணமா இருக்கும்ன்னு நினைச்சுகிட்டே படுத்தேன். குறிப்பு அறிஞ்சு, நேத்து நம்ம கனவுல வந்தாருங்க. அதுக்கு மேல என்ன சொன்னாருன்னு, மேல படிங்க!

"அப்பிச்சி என்ன நொம்ப நாளாக் காணோம்?"

"அது இல்லடா பேரான்டி, நீ நாட்டு நடப்புன்னு நாலும் எழுத ஆரம்பிச்சுட்டே, அதான் என்னோட தொந்தரவு எதுக்குன்னு வரலை"

"அப்பிடியெல்லாம் ஏன் நினைக்குறீங்க? சரி, சொல்லுங்க!"

"பேரான்டி, இந்த ஆறு அறிவுன்னு சொல்லுறாங்குளே, அது பத்தி விவரமா சொல்லு பாப்போம்!"

"அப்பிச்சி, இந்த வேலை எல்லாம் வேண்டாம், நீங்களே சொல்லிடுங்க!"

"நீதான் ஒரு அரை வேக்காடு ஆச்சே?! சரி, சொல்லுறேன், கேளு! மேலோட்டமா, எல்லாத்தையும் ரெண்டாப் பிரிச்சோம். நிலைத் திணை, இயங்கு திணைன்னு. இதுல நிலைத்திணை வந்து உடல் உணர்ச்சிய மட்டும் வெச்சி, இயங்கு திணை வகையறாக்களை வாழ வைக்கும். மரம், செடி, கொடி, புல், புதர் எல்லாம் இந்த வகை. ஒரே இடத்துல நிலையா இருக்கும். இதுக்கு ஒரு அறிவுதான். மெய்யறிவு!

ஒரு இடத்துல இருந்து, மத்த இடம் போறது எல்லாம் இயங்கு திணை. அதுல‌, நீருயிரி, நிலவூரி, பறவை, விலங்கு, மாந்தர்ன்னு அஞ்சு வகை. அதுகளப் பாப்போம் இப்ப:

நீருயிரி: மெய்யறிவு, வாயறிவு

நிலவூரி: ஊர்ந்து வாழுறது. மெய், வாய், கண்ணறிவு

பறவை: மெய், வாய், மூக்கு, கண்ணறிவு

விலங்கு: மெய், வாய், கண், மூக்கு, செவியறிவு

மாந்தர்: மெய், வாய், கண், மூக்கு, செவின்னு அஞ்சு புற அறிவு. கூடவே ஆறாவதா, அக அறிவான மனத்தால நல்லது கெட்டதுன்னு எண்ணங்களை பகுத்தறியறது!"

"அப்பிச்சி, இதெல்லாம் எனக்கு தெரியும். நீங்க வேற எதனாச்சும் சொல்லிட்டுப் போங்க!"

"இன்னைக்கு இது போதும். அடுத்த தடவை வரும் போது, உலகத்துல இருக்குற எல்லா மொழிகளும் எப்படி, எந்த எந்த ஒலிகள்ல இருந்து வந்ததுன்னு சொல்லுறேன். இப்பத் தூங்கு!"

இன்னைக்கு இதாங்க சொன்னாரு! அடுத்த தடவை என்ன சொல்லப் போறரோ? வந்து, மனுசன் கேள்வி வேற கேப்பாரு. சும்மா, சொல்லிட்டுப் போகலாமில்ல?? எதுக்கும், மறுபடியும் வருவாருன்னு நம்புவோம்.

(......கனவுல இன்னும் வருவார்......)

17 comments:

தங்ஸ் said...

உங்க பதிவுகள் ரொம்ப சுவையா இருக்கு....நானும் கொங்குமண்டலம்தான்..கிணத்துக்கடவு பக்கம்:-)

Mahesh said...

ம்ம்ம்ம்... போன வாரமே கேக்கணும்னு நெனச்சேன்... எங்க காளமேகம் விடுமுறைல போயிட்டாரா இல்ல நீஙதான் தூங்காம வேல பாக்கறிங்களான்னு...

பழமைபேசி said...

//
தங்ஸ் said...
உங்க பதிவுகள் ரொம்ப சுவையா இருக்கு....நானும் கொங்குமண்டலம்தான்..கிணத்துக்கடவு பக்கம்:-)

//
வாங்க தங்க ராசு/வேல்!

நொம்ப சந்தோசம்!!

பழமைபேசி said...

//Mahesh said...
ம்ம்ம்ம்... போன வாரமே கேக்கணும்னு நெனச்சேன்... எங்க காளமேகம் விடுமுறைல போயிட்டாரா இல்ல நீஙதான் தூங்காம வேல பாக்கறிங்களான்னு...
//

வந்துட்டாருங்க மகேசு! வந்துட்டாருங்க!!

குடுகுடுப்பை said...

வாங்கப்பு, கலக்குங்க அப்படியே, ஒரு நாளு வரிக்கவிதை காளமேகம் பாணில உடுங்க, இல்லாட்டி பழமை பேசியும் புளிச்ச கள்ளும் நான் கவுஜ எழுதிருவேன்

பழமைபேசி said...

//
குடுகுடுப்பை said...
வாங்கப்பு, கலக்குங்க அப்படியே, ஒரு நாளு வரிக்கவிதை காளமேகம் பாணில உடுங்க, இல்லாட்டி பழமை பேசியும் புளிச்ச கள்ளும் நான் கவுஜ எழுதிருவேன்
//

அண்ணே, அது கவி காளமேகத்தின் தாக்கம்ங்ற தலைப்புல வரும் அண்ணே!
இடையில கொஞ்சம் வழி மாறிப் போயிடுச்சி. வரும் பாருங்க....

http://urupudaathathu.blogspot.com/ said...

ஆஹா மறுபடியும் வந்துட்டாரா??

http://urupudaathathu.blogspot.com/ said...

அவுர அப்படி நம்ம ஊட்டு பக்கம் வர சொல்லு நைனா

http://urupudaathathu.blogspot.com/ said...

ரொம்ப நாளா ஆளையே ( கவிமேகம் ) காணோம்னு பார்த்தேன் ..
மீண்டும் மீண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள் ..

இனி அடிக்கடி பார்க்கலாம்

http://urupudaathathu.blogspot.com/ said...

நம்ம கனவுல வந்துட்டு இருந்த கவி காளமேகம், ரொம்ப நாளா வரலை பாருங்க.////

உங்க கனவுல வரல அப்படின்னா நாங்க எப்படி பாக்குறது ??

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
ரொம்ப நாளா ஆளையே ( கவிமேகம் ) காணோம்னு பார்த்தேன் ..
மீண்டும் மீண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள் ..

இனி அடிக்கடி பார்க்கலாம்
//

வாங்க அணிமா!!

http://urupudaathathu.blogspot.com/ said...

என்ன காரணமா இருக்கும்ன்னு நினைச்சுகிட்டே படுத்தேன். குறிப்பு அறிஞ்சு, நேத்து நம்ம கனவுல வந்தாருங்க.////

அது தான் கவிமேகம்....
சரி உண்மையிலே சொல்லுங்க.. அப்படி நினைச்சு தான் படுத்தீங்களா??
( கனவுல இந்த பிரிட்னி , மடோன்னா எல்லாம் வர மாட்டங்களா?? அவங்க எல்லாம் கவிஞர்கள் இல்லியா??)

http://urupudaathathu.blogspot.com/ said...

நீ நாட்டு நடப்புன்னு நாலும் எழுத ஆரம்பிச்சுட்டே, அதான் என்னோட தொந்தரவு எதுக்குன்னு வரலை"
////

இருந்தாலும் கவிகாளமேகத்துக்கு ரெம்ப தான் குறும்பு ..
எப்படி வாருராருன்னு பாருங்க ..

http://urupudaathathu.blogspot.com/ said...

மொதலில் தமிழிஷ் இருக்கும் தொடுப்பை அளித்து பதிவு ( submit) செய்யுங்கள் , பிறகு தானே நாங்கள் அதில் வோட்டு போட முடியும்..

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
மொதலில் தமிழிஷ் இருக்கும் தொடுப்பை அளித்து பதிவு ( submit) செய்யுங்கள் , பிறகு தானே நாங்கள் அதில் வோட்டு போட முடியும்..
//

இந்நேரம் நான் உங்க வீட்ல இருந்தேன்....

ராஜ நடராஜன் said...

//அடுத்த தடவை வரும் போது, உலகத்துல இருக்குற எல்லா மொழிகளும் எப்படி, எந்த எந்த ஒலிகள்ல இருந்து வந்ததுன்னு சொல்லுறேன். இப்பத் தூங்கு!"//

கவி மேலே என்ன சொல்றாருன்னு பார்த்துட்டு வாரேன்.அதென்ன அப்புச்சி உங்க கனவுல மட்டும் வர்றாரு.நம்ம கனவுலேயும் வருதுகளே..........

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
//அடுத்த தடவை வரும் போது, உலகத்துல இருக்குற எல்லா மொழிகளும் எப்படி, எந்த எந்த ஒலிகள்ல இருந்து வந்ததுன்னு சொல்லுறேன். இப்பத் தூங்கு!"//

கவி மேலே என்ன சொல்றாருன்னு பார்த்துட்டு வாரேன்.அதென்ன அப்புச்சி உங்க கனவுல மட்டும் வர்றாரு.நம்ம கனவுலேயும் வருதுகளே..........
//

ஆகா, நீங்க கொடுத்து வெச்சவர்.