9/05/2008

கனவில் கவி காளமேகம் - 5

வணக்கம்! வழக்கம் போல கவி காளமேகம் இன்னைக்கும் வந்து நலம் விசாரிச்சுட்டு, அவரோட வேலையக் காமிக்க ஆரம்பிச்சாரு. நாம,

"அப்பிச்சி! சித்த இருங்க. நீங்க வேறெதுவும் இன்னைக்கு கேக்கவும் வேணாம், சொல்லவும் வேணாம்!". அவுரு,

"என்னடா பேராண்டி, என்ன ஆச்சு? உனக்கேதும் பிரச்சினையா?"

"அட, அதெல்லாம் ஒண்ணும் இல்ல அப்பிச்சி. அன்னைக்கு நீங்க சொன்னதுல பாதி மறந்து போச்சு. அதச் சொல்லுங்க மறுக்கா இன்னொரு தடவை."

"அட, அதுக்கேன் இப்ப அலுத்துக்கற, சொல்லுறேன் கேட்டுக்க"

இப்ப அவரு சொல்லி, நாம போன பதிவுல பதியாம விட்ட ஓரெழுத்து சொல்லுகளை கீழ குடுத்து இருக்கறன் பாருங்............

நா, நீ, நே, நை, நோ

நா: நாக்கு, தீயின் சுவாலை
நீ: நீ
நை: வருந்து, இகழ்ச்சி
நோ: நோவு, துன்பம், வலி

கா, கூ, கை, கோ

கா :சோலை, காப்பாற்று, பாதுகாப்பு, சரஸ்வதி, தோட்டம்
கூ: பூமி, ஏவல், கூழ், கூவு
கை: உறுப்பு, ஒப்பனை, செயல், துதிக்கை, படை, கைப்பொருள், கைமரம்
கோ: வேந்தன், தலைவன், இறைவன், அரசன்

வா, வீ, வை, வெ

வா: வருகை
வீ: மலர், பூ, மகரந்தம், அழிவு, சாவு
வை: வைக்கவும், வைக்கோல், கூர்மை, வையம்
வெ: வவ்வுதல்

சா, சீ, சே, சோ

சா: சாதல், சோர்தல், பேய், மரணம்
சீ: வெறுப்புச் சொல் (அ) சீத்தல், சீழ், சளி, இலக்குமி, அடக்கம், நித்திரை
சே: சிவப்பு, எருது, அழிஞ்சல் மரம்
சோ: மதில், அரண்

யா

யா: ஒருவகை மரம், யாவை, அசைச் சொல்

நொ

நொ: வருந்து, நோய், மென்மை, துன்பம், நொய்வு

து

து: உண், விகுதி, நடத்தல், உணவு, வகுத்தல்



(......கனவுல இன்னும் வருவார்......)

3 comments:

Mahesh said...

அதானெ பாத்தேன்...என்னடா தமிழ்ல ஒரெழுத்து வார்த்தை இவ்வளவுதானான்னு? நானும் கொஞ்சம் எடுத்து வெச்சேன்...அதுக்குள்ள நீங்களே இன்னும் பலது சேத்து போட்டுட்டீங்க... திருவிளையாடல் தருமி மாதிரி சொன்னா "நீர் நீர்தான்... நான் நாந்தான்..." :)

பழமைபேசி said...

//
Mahesh said...
அதானெ பாத்தேன்...என்னடா தமிழ்ல ஒரெழுத்து வார்த்தை இவ்வளவுதானான்னு? நானும் கொஞ்சம் எடுத்து வெச்சேன்...அதுக்குள்ள நீங்களே இன்னும் பலது சேத்து போட்டுட்டீங்க... திருவிளையாடல் தருமி மாதிரி சொன்னா "நீர் நீர்தான்... நான் நாந்தான்..." :)

//
"ஆனா பாருங்க, எனக்கு பாதியிலயே கனவு கலைஞ்சு போச்சு. எனக்கு ஞாபகம் இருக்குறத கீழ குடுத்து இருக்குறேன். மிச்சத்தை அவரு அடுத்த தடவை வரும் போது கேட்டு சொல்லுறேன்"ன்னு சொல்லியிருந்தோமே..... நான் ஒரு ஏவலாள்... அப்பிச்சி சொல்லுறாரு....நாம எழுதுறோம்.
:-)

பழமைபேசி said...

மகேசு, கவி காளமேகம் சொன்னதுல நான் ஏதாவது விட்டு இருந்தாலும் இருப்பேன். அப்படி ஏதாவது இருந்தா சொல்லுங்க..... நன்றி!