6/08/2013

தற்கொலை

தற்கொலை

என் பெயர் சின்னத்தம்பி!
பேனாவுக்கு மை போட
கடைக்குப் போயிருந்த வேளை
வேலுமணி அக்கா
கசக்கப்பட்டுக் கொண்டிருந்தாள்!
போடா! இங்க்கும் இல்லை
ஒன்னுமில்லை, போ!!

அடித்த காற்று
மின்சாரத்தைக் களவாடிவிட
ஒளியூட்டும் மெழுகுதிரி
வாங்கப் போயிருந்த வேளை
பெண்டாட்டியானவள்
மயிர் இழுபட்டு
அறை வாங்கிக் கொண்டிருந்தாள்!!
என்னடா வேணும் உனக்கு?
இருட்டுக்குப் பொறந்தவனே
இந்தா போ!!

அம்மாவுக்குத் தலைவலி
அனாசினோ சாரிடோனோ
வாங்கப் போயிருந்த வேளை!
கடன் வாங்கத் தெரியுதல்ல?
வாடி பேசாம உள்ள!
வராதவளைப் பிடித்திழுக்க
சடாரெனத் தற்கொலை
செய்து கொண்டேன்!
கல்லை எடுத்தேன்;
மண்டையை உடைத்தேன்;
வீதியில் இறங்கினேன்!!
இப்போது என் பெயர்
கட்டக்காட்டு சின்னராசு!!



மனம்

நன்றோ தீதோ
உவப்போ கசப்போ
இனிமையோ தனிமையோ
தன்னுதலோடு
உறுவது கொண்டாள
கேட்கும் பொழுதெலாம்
வேண்டியது கொடுத்து
விரிந்தே கிடக்கிறது
கட்டற்ற எல்லையிலா
மாயவான் மனவெளி!!


2 comments:

கவியாழி said...

வேதனை.வேதனை

திண்டுக்கல் தனபாலன் said...

மனவெளி கட்டக்காட்டு சின்னராசுக்கு இல்லாமல் போயிற்று...