6/23/2013

விழுந்து சிதறிய வினா?!அந்த கண்டத்திலிருந்து
இந்த கண்டத்திற்குள் வந்து
விழுந்து சிதறியது
வினாவொன்று!
அப்பா!
கண்ணாடிப் பெட்டிக்குள்ள
இருக்குற அந்த அக்காவுக்கு
ஏம்ப்பா மொட்டை போட்டுட்டாங்க??

தேடலின் பரிணாமம்

கடுகு தேடும் போது
சீரகம் கிடைத்தது!
சீரகம் தேடும் போது
கடுகு கிடைத்தது!
ஆதலின்
தண்ணீர் தேடப் போகிறேன்
எண்ணெய் வேண்டுமென்பதால்!!


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

வருங்காலத்தில் எல்லாமே தேடத்தான் வேண்டும்...