6/17/2013

கொள்ளைச்சினம்!!

உப்புசம்

அப்பா
அமெரிக்காமாரி
மேகங்கெல்லாம்
ஒடஞ்சி
நொறுங்குறதே இல்ல
இந்தியாவுல!
எப்பப் பாத்தாலும்
உப்புசம்!!


கொள்ளைச்சினம்!!
ஸ்டீவ் ஜாப்ஸ்,
கொள்ளைச்சினம் உம்மீது!
காலார நடைபழகும் குளத்தை
எப்போது படம் பிடித்தாலும்
கால், அரைவாசியெனத்தான்
பார்வைக்குக் கிடைக்கிறது!
ஏனய்யா ஒற்றைக்கண்ணோடு
ஐபோனை அனுப்பி வைத்தீர்?
சரி போனது போகட்டும்!!
ஐயா, பொறுப்புமிகு டிம் குக்
நீராவது இனி அனுப்பும்!
இரு கண்களையும்
வடிவாய் வைத்து!!