6/09/2013

ஊர் வலசை

வேண்டிய போதெல்லாம்
ஒரு பார்வையாளனாக
உள்நுழைந்து
இன்புற்று
மனமார்ந்து
திரும்புகிற
எங்கள் வீட்டுக்
குழந்தைகள் உலகத்தில்
யாருமே இல்லை!
அவர்கள்
வேற்றுலகிற்கு
உலாப் போயிருக்கிறார்களாம்;
சொல்லியழுகிறது
தொடப்படாமல் 
மூலையில் கிடக்கும்
கரடி பொம்மைகளுள் ஒன்று!!

No comments: