6/21/2013

நீ வருவாயென!!

நீ வருவாயென!!

படுத்து உறங்கினால்
வந்து கலைக்கிறாய் நீ!
எழுந்து என்ன செய்வது?
நீயின்றி எதுவுமின்றி
அழுகை பீரிடுகிறது
எல்லாமும் வெறுமை!
என்னதான் செய்வது?
இதோ போகிறேன்
படுத்து உறங்க!!

அழகாய் அவள்!!

அழகாக இருக்கிறீர்கள்
சொன்னதும் சொன்னாள்
எனக்காக நேரம் ஒதுக்கி
இன்சொல் கூறியமைக்கு
உங்களுக்குப் பாராட்டுகள்!
என் சொற்களின் எச்சமாய்
அற்றை நாளின்
அவளது
வானூர்திப் பணி யாவும்
சிறந்தே இருந்திருந்திருக்கும்!!

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

// இதோ போகிறேன்
படுத்து உறங்க...//

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...