9/30/2009

ஒரு கல்லுல ரெண்டு மாங்கா!

கோயில்ல சாமி கும்பிட்ட மாதரயும் ஆச்சு!
கும்பிடவந்த பட்சியப் பார்த்த மாதரயும் ஆச்சு!!

மாட்டுக்குப் புல் புடுங்கினா மாதரயும் ஆச்சு!
காடுகரை சுத்தமான மாதரயும் ஆச்சு!!

ஆடு மேய்க்கப் போன மாதரயும் ஆச்சு!
அண்ணனுக்குப் பொண் பார்த்த மாதரயும் ஆச்சு!!

காய்தக் கூடை போட்ட மாதரயும் ஆச்சு!
பழசு பரட்ட ஒழிஞ்ச மாதரயும் ஆச்சு!!

இட்லி உப்புமாக் கிண்டுன மாதரயும் ஆச்சு!
மிச்சம் மீதி கழிஞ்ச மாதரயும் ஆச்சு!!

வட்டிக்கு மொதல் குடுத்த மாதரயும் ஆச்சு!
நொம்பலத்துக்கு ஒதவுனா மாதரயும் ஆச்சு!!

தவுட்டுக் காசு வெளையாடுனா மாதரயும் ஆச்சு!
பிஞ்சு வெரலுகளை தடவுனா மாதரயும் ஆச்சு!!

குமுதம்கல்கண்டு படிச்ச மாதரயும் ஆச்சு!
படிக்க வந்த அம்மணிய மடிச்ச மாதரயும் ஆச்சு!!

தோப்புக் காவலுக்கு காவலும் ஆச்சு!
தோதான கூடலுக்குக் கூடலும் ஆச்சுது!!

இடுகையில பிழை திருத்தினா மாதரயும் ஆச்சு!
படிச்சுட்டு மறுமொழி போடுறான் இவன்னும் ஆச்சு!!

எழில் தமிழ்ச்சங்கக் கூட்டத்துக்கு போனதாவும் ஆச்சு!

நாலுநாளைக்கு சோத்துப் பொட்டலம் கட்டுனதாவும் ஆச்சு!

ஒன்னுல ரெண்டு விழுத்தின,
பழமைபேசி
.

19 comments:

Anonymous said...

//இட்லி உப்புமாக் கிண்டுன மாதரயும் ஆச்சு!
மிச்சம் மீதி கழிஞ்ச மாதரயும் ஆச்சு!!//

இட்லிதான் உங்க வீட்ல எல்லாருக்கும் பிடிச்ச ஐட்டமோ

ஆரூரன் விசுவநாதன் said...

அடடா.....ஒரு கல்லுக்கு இத்தன மாங்காயா.....அருமை.


//குமுதம்கல்கண்டு படிச்ச மாதரயும் ஆச்சு!
படிக்க வந்த பாப்பாவை மடிச்ச மாதரயும் ஆச்சு!!//

எங்கயோ இடிக்குதே....?

Mahesh said...

/தவுட்டுக் காசு வெளையாடுனா மாதரயும் ஆச்சு!
பிஞ்சு வெரலுகளை தடவுனா மாதரயும் ஆச்சு!!

குமுதம்கல்கண்டு படிச்ச மாதரயும் ஆச்சு!
படிக்க வந்த அம்மணிய மடிச்ச மாதரயும் ஆச்சு!!

தோப்புக் காவலுக்கு காவலும் ஆச்சு!
தோதான கூடலுக்குக் கூடலும் ஆச்சுது!!
//

எழுதுனதுக்கு எழுதுன மாதரயும் ஆச்சு !!
பழசை அசைபோட்டு மனசைத் தேத்திக்கிட்ட மாதரயும் ஆச்சு !!

கில்லாடிண்ணே நீங்க :)

அப்பாவி முரு said...

அண்ணி ஊருக்கு போனதுல இருந்தே இவரு சரியில்லைங்கோவ்வ்வ்வ்வ்வ்

vasu balaji said...

வந்து ஊறுகா போடுவாங்க. பத்திரமா எடுத்து வைங்க மாங்காவ. ஆரூரனுக்கு துணை சேர்ந்துடுச்சிடோய்.

ஈரோடு கதிர் said...

//குமுதம்கல்கண்டு படிச்ச மாதரயும் ஆச்சு!
படிக்க வந்த அம்மணிய மடிச்ச மாதரயும் ஆச்சு!!//

மாப்பு...

இது நல்லால்ல‌

அப்புறம் போஸ்டர் அடிச்சு கோயமுத்தூர் ஜில்லா புல்லா ஒட்டனுமாட்ருக்கு

ஆனாலும் எல்லா மாங்காவும் சுவையோ சுவை

சந்தனமுல்லை said...

அவ்வ்வ்வ்வ்!! :-)

இராகவன் நைஜிரியா said...

இஃகி... இஃகி...

பின்னி பெடல் எடுக்கிறீங்க

Unknown said...

அப்புறம்
ஊறுகாய் போட்ட மாதிரியும் இருக்கும்
உம்மை துவைச்ச மாதிரியும் இருக்கும்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//குமுதம்கல்கண்டு படிச்ச மாதரயும் ஆச்சு!
படிக்க வந்த அம்மணிய மடிச்ச மாதரயும் ஆச்சு!!//
அடேங்கப்பா!!!

க.பாலாசி said...

//தோப்புக் காவலுக்கு காவலும் ஆச்சு!
தோதான கூடலுக்குக் கூடலும் ஆச்சுது!! //

இதெல்லாம் வேற நடக்குதா....ம்ம்ம்...இருக்கட்டும்....

படிச்சிட்டு ஓட்டு போட்ட மாதரயும் ஆச்சு!
பின்னூட்டம் போட்ட மாதரயும் ஆச்சு!!

பழமைபேசி said...

@@சின்ன அம்மிணி
ஆமாங்கோ.... அதை ஏன் கேக்குறீங்க? ஆனா ஊனா இட்லிதான்!

@@ஆரூரன் விசுவநாதன்

நன்றிங்கோ!

@@Mahesh
//கில்லாடிண்ணே நீங்க :)//

இஃகிஃகி, இதெல்லாம் பொதுவுல சொல்லலாமா?! நன்றிங்ணே!

@@அப்பாவி முரு
ஓ நமக்கு ஆப்பு உள்ளாரவேவா? அவ்வ்வ்வ்......

@@வானம்பாடிகள்
அண்ணே.... பயமுறுத்துறீங்களே?

@@கதிர் - ஈரோடு
//இது நல்லால்ல‌//

ஏனுங் மாப்பு, ஏன்? அம்மணி கூடப் பொறந்தவங்க எல்லாம் ஏன் வில்லனாவே அலையுறீங்க??

@@சந்தனமுல்லை

இஃகிஃகி, இதெல்லாம் சகசமுங் வாழ்க்கையில! தப்பா எடுத்துகாதீங் என்ன??


@@இராகவன் நைஜிரியா

வணக்கம்! நன்றிங்க ஐயா!

@@Siva

ஆகா, நம்மைத் துவைக்குறதுலயே குறியா இருப்பாங்க போல்ருக்கே? :-0)

@@ஸ்ரீ

ஆமாங்கப்பா!

@@ க.பாலாஜி

நன்றிங்க நண்பா!

ராஜ நடராஜன் said...

எல்லாம் புரியுது.மாதரயும் அர்த்தம் சொல்லிப்புட்டிங்ன்னா இன்னொரு முறை எழுத்துக் கூட்டிப் படிச்சுப்புடுவேன்.

Unknown said...

//.. நொம்பலத்துக்கு ..//

இதென்னன்னு கொஞ்சம் வெளக்கமா சொன்னீங்கன்னா ஆகும்..

அப்புறம் அப்படியே நாளுக்கு ரண்டு பழுதில்லைனா என்னானும் சொல்லிப்போடுங்க..

பழமைபேசி said...

// ராஜ நடராஜன் said...
எல்லாம் புரியுது.மாதரயும் அர்த்தம் சொல்லிப்புட்டிங்ன்னா இன்னொரு முறை எழுத்துக் கூட்டிப் படிச்சுப்புடுவேன்.
//

அண்ணே, நெசமாலுமே நீங் நம்பூர்தானா?

மாதிரி --> மாதர

//பட்டிக்காட்டான்.. said...
//.. நொம்பலத்துக்கு ..//

இதென்னன்னு கொஞ்சம் வெளக்கமா சொன்னீங்கன்னா ஆகும்..

அப்புறம் அப்படியே நாளுக்கு ரண்டு பழுதில்லைனா என்னானும் சொல்லிப்போடுங்க..
//

அகோ, அது அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லைனு சொல்றது!

நொம்பலம் - துன்பம், அன்பே சிவம் பாட்டெல்லாம் கேட்டது இல்லீங்களாக்கூ?

அது சரி(18185106603874041862) said...

நல்லாருக்கு.

பழமைபேசி said...

@@அது சரி

நன்றிங்க அண்ணாச்சி!

கண்ணகி said...

.தம்பி, தங்கள் தமிழ்ப்புலமையைக் கண்டு மெச்சினோம். அவன், இவன், உவன் அருமை. ஒரு கல்லில் இரண்டு மாங்காய். அதைவிட அருமை. நீரே முக்கண் முதல்வனும் ஆகுக

நசரேயன் said...

நீங்க மரத்தையே சாய்த்து வீடுவீங்க