9/12/2009

நீ உன்னுள் போட்டியிடு!

அண்மித்து இருப்பவனோடும்
முகம் தெரிந்தவனோடும்
உன் ஊரில் உள்ளாரோடும்
ஈடாட்டம் ஆடுவாயானால்
நீ தோற்றுப் போவாய்! ஆம்,
இவர்களையும் விட
வலியவன் ஒருவன்
எங்கோ ஒரு மூலையில்
இருப்பானாய் இருக்கும்;
அவனையும் வெல்ல
நீ உன்னுள் போட்டியிடு!
நீ உன்னுள் போட்டியிடு!!


தட்டிப் பறித்து
அணாப்புச் செய்து
இணாப்புத் தைத்து
கெத்துதல் தெளித்ததினால்
உயரக் கொடி பிடித்து
உனையும்விட உயர்ந்தவன்
ஆனான் நானே எனும் எக்காளமா?
வரலாறு ஏசும்; ஆம்
உனை வரலாறு ஏசும்;
சமகால எழுத்தாளர்களில்
சமகாலப் பதிவர்களில்
ஒரு சிலரை
அதே சமகால வாசகர்கள்
ஏசுவதற்கும் மேலாய்!


உயரக் கொடி பிடித்து
உனையும்விட உயர்ந்தவன்
ஆனான் நானே எனும் இறுமாப்பா?
உனை வரலாறு ஏசும்;
சமகால எழுத்தாளர்களில்
சமகாலப் பதிவர்களில்
ஒரு சிலரை
அதே சமகால வாசகர்கள்
ஏசுவதற்கும் மேலாய்!!

வலியவன் ஒருவன்
எங்கோ ஒரு மூலையில்
இருப்பானாய் இருக்கும்;
அவனையும் வெல்ல
நீ உன்னுள் போட்டியிடு!
நீ உன்னுள் போட்டியிடு!!

Do not accept anything but the best. Compete with yourself, not others, to achieve. The person you are tomorrow should definitely be better than what you are today. Use every opportunity that comes your way - M.S. Swaminathan.

21 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//நீ உன்னுள் போட்டியிடு!
நீ உன்னுள் போட்டியிடு!!//

சரிதான்

எனக்கு நானே போட்டியாளன்

பழமைபேசி said...

@@பிரியமுடன்...வசந்த்

நன்றிங்க பிரியரே!

அன்புடன் அருணா said...

நல்ல கருத்து!

சுந்தரா said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு. ஆனா, எனக்குத்தான் ஒன்றிரண்டு வார்த்தைகள் புரியல :(

//அணாப்பு,இணாப்பு,கெத்துதல்//- உங்க வட்டார வழக்குச் சொற்களாயிருக்கும்னு நினைக்கிறேன்

பழமைபேசி said...

//அன்புடன் அருணா said...
நல்ல கருத்து!
//

நன்றிங்க!

//சுந்தரா said...
கவிதை ரொம்ப நல்லா இருக்கு. //

நன்றிங்க!

//அணாப்பு,இணாப்பு,கெத்துதல்//-


அணாப்பு -- முறைதவறுதல்
இணாப்பு -- தவறான முறை
கெத்து - தந்திரம்


//உங்க வட்டார வழக்குச் சொற்களாயிருக்கும்னு நினைக்கிறேன்
//

தூய தமிழ்ச்சொற்கள்தானுங்க!

சுந்தரா said...

விளக்கத்துக்கு நன்றிங்க.

vasu balaji said...

நல்ல கிரியா ஊக்கி. நன்றி பழமை

Mahesh said...

தலைப்பும் நேர்மறையாவே இருந்திருக்கலாமே !!

இராகவன் நைஜிரியா said...

//நீ உன்னுள் போட்டியிடு!
நீ உன்னுள் போட்டியிடு!!//

புரிந்து கொண்டேன்.

Mahesh said...

இதுல ஏதோ உள்குத்து இருக்கு போல... எனக்குத்தான் புரியல...

அது சரி(18185106603874041862) said...

//
வரலாறு ஏசும்; ஆம்
உனை வரலாறு ஏசும்;
சமகால எழுத்தாளர்களில்
சமகாலப் பதிவர்களில்
ஒரு சிலரை
அதே சமகால வாசகர்கள்
ஏசுவதற்கும் மேலாய்!

//

அப்ப அவங்க வரலாற்றுல வந்துருவாங்கன்னு சொல்றீங்க :)))))

பழமைபேசி said...

//வானம்பாடிகள் said...
நல்ல கிரியா ஊக்கி. நன்றி பழமை
//

நன்றிங்க பாலாண்ணே!

//சுந்தரா said...
விளக்கத்துக்கு நன்றிங்க.
//

நினைவூட்டியமைக்கு நாந்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்!

//Mahesh said...
தலைப்பும் நேர்மறையாவே இருந்திருக்கலாமே !!
//

மாத்தியாச்சுங்க அண்ணே, நல்ல கருத்து!

@@இராகவன் நைஜிரியா

புரிதலுக்கு நன்றிங்க ஐயா!

//Mahesh said...
இதுல ஏதோ உள்குத்து இருக்கு போல... எனக்குத்தான் புரியல...
//
அவ்வ்வ்.....

@@அது சரி

அருமை அண்ணாச்சி வாங்க, அஃகஃகா.... வரலாறுன்னா, இட்லரும் இருப்பாரு, முசோலினியும் இருப்பாரு, அன்னை தெரசாவும் இருப்பாங்க... நாலுங் கலந்ததுதான வரலாறு?!

ஈரோடு கதிர் said...

மாப்பு

நேத்து தலைமைப்பண்பு

இன்னிக்கு சுய உந்துதல்

கலக்கல்ங்க மாப்பு

பழமைபேசி said...

//கதிர் - ஈரோடு said...
மாப்பு

நேத்து தலைமைப்பண்பு

இன்னிக்கு சுய உந்துதல்

கலக்கல்ங்க மாப்பு
//

எல்லாம் ஈரோட்டுத் தாக்கந்தானுங் மாப்பு!!

ஆரூரன் விசுவநாதன் said...

மீண்டும் மீண்டும் படிக்கிறேன்....புதிதுபுதிதாய் ஏதேதோ தோன்றுகிறது......

மீண்டும் படித்துவிட்டு......

இன்று போய் நாளை வாரேன்

அன்புடன்
ஆரூரன்

நசரேயன் said...

கேட்டுகிறேன், நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்

பழமைபேசி said...

//ஆரூரன் விசுவநாதன் said...
மீண்டும் மீண்டும் படிக்கிறேன்....புதிதுபுதிதாய் ஏதேதோ தோன்றுகிறது......//

அப்படீங்களா, அப்ப மீண்டும் மீண்டும் படிங்க... நன்றிங்க....

//நசரேயன் said...
கேட்டுகிறேன், நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்

September 13, 2009 2:45 PM//

ஏ அப்பா, தளபதியோட பின்னூட்டம் விழுந்து எவ்ளோ நாளாச்சி? வருக, நல்வரவு ஆகுக!

தங்கராசு நாகேந்திரன் said...

எப்படி இப்படி?

சுந்தர் said...

நானும் கவிதை மாதிரி எழுத ஆரம்பித்து இருக்கிறேன். படித்து உங்கள் கருத்தை சொன்னால் மகிழ்வேன் .

க.பாலாசி said...

//வலியவன் ஒருவன்
எங்கோ ஒரு மூலையில்
இருப்பானாய் இருக்கும்;
அவனையும் வெல்ல
நீ உன்னுள் போட்டியிடு!
நீ உன்னுள் போட்டியிடு!!//

நல்ல உணர்ச்சியூட்டும் கவிதை அன்பரே....

மதுரை சரவணன் said...

கவிதை அருமை. வாழ்த்துக்கள்