8/19/2009

தலைகால்ப் புரியலை!

வணக்கம்! இப்பதான் ஏழாவது இடத்துக்கு வந்திருக்கு. மகிழ்ச்சிதான்! ஆனா, நாங்க ஊர் ஊராப் போயி பொட்டி தட்ட வேண்டியதா இருக்கே? அது மட்டுமா? நுகர்வோர்கிட்ட கேள்வி மேல கேள்வி கேட்டு, வியாபாரத்தைப் பொட்டியில புகுத்துறதுக்குள்ள தாவு தீர்ந்து போகுது!

என்னடா இவன் தலைகால்ப் புரியாதபடிக்கு உளறுறானேன்னுதான நினைக்கிறீங்க? ஆமாங்க, நாம வேலை செய்யுற நிறுவனம் தொழில்நுட்ப ரீதியான வகையில உலக அளவுல ஏழாவது இடமும், பொது அளவுல 19வது இடமுமா வந்திருக்கு. அந்த வளர்ச்சியில நமக்கும் ஒரு சிறு பங்குண்டுன்னு நினைக்கும் போது, சின்ன மகிழ்ச்சிதான்!

ஆமா, அதென்ன தலைகால்ப் புரியாமல்? அது ஒன்னும் இல்லைங்க, அந்த காலத்திலெல்லாம் பாய், படல், கிடுக்கு இப்படியான விரிப்புகள்ல மக்கள் நித்திரை கொள்ளுறது வழக்கம். அப்படி, நித்திரை கொள்ளப் போகும் போது, எல்லாரோட தலை ஒரு பக்கமும் கால் மறுபக்கமுமா இருக்கும். விடிய எழுந்து பார்த்தா, தலை எங்க கால் எங்கன்னு புரியாதபடிக்கு இடம் மாறி அங்க இங்கயின்னு கிடப்பாங்க. அதை உவமைப் படுததிச் சொல்லுறதுல வந்ததுதான் இந்த மரபுச் சொல்.

அமெரிக்க மக்களிடத்துல மனமாற்றம் மெளனமாய் நிகழுறது உள்ளமையே! ஆனா, இந்த அளவுல அது பிரதிபலிக்கும்னு நான் எதிர்பார்க்கலை. காலஅவகாசம் இருந்தா, இந்தச் சுட்டியையும் ஒரு தடவை பார்த்திடுங்க!

BBC செய்தி நிறுவனத்துல, தொழில்நுட்ப நிபுணருக்கு பதிலா, தவறுதலா ஒரு வாகன ஓட்டியோட பேட்டி ஒலிபரப்பானதாக இந்த காணொளி! அந்த வாகன ஓட்டியோட முதல்க் கணமும், அந்த ஆள் சமாளிக்கிற விதமும் அலாதி!

8 comments:

Anonymous said...

//அந்த வாகன ஓட்டியோட முதல்க் கணமும்//

இது ரொம்ப நாள் முன்னாடி தொலைக்காட்சில காட்டினாங்க. நல்ல சிரிப்புதான்.

ஈரோடு கதிர் said...

மாப்பு
இதுக்குதான் டைவருக்கு
நம்மூரு மாதர காக்கி சட்ட, டவுசுரு கோடுக்கோணுங்கறது

vasu balaji said...

/உலக அளவுல ஏழாவது இடமும், பொது அளவுல 19வது இடமுமா வந்திருக்கு. அந்த வளர்ச்சியில நமக்கும் ஒரு சிறு பங்குண்டுன்னு நினைக்கும் போது, சின்ன மகிழ்ச்சிதான்!//

சின்ன‌ ப‌ல்ச‌க்க‌ர‌ம்னாலும் ப‌ங்க‌ளிப்பு ரொம்ப‌ முக்கிய‌மாச்சே. பாராட்டுக்க‌ள்


/விடிய எழுந்து பார்த்தா, தலை எங்க கால் எங்கன்னு புரியாதபடிக்கு இடம் மாறி அங்க இங்கயின்னு கிடப்பாங்க.//

தூங்குறவங்கள எழுப்பறதுன்னா மெதுவா குரல் கொடுத்து, அசையலன்னா மெதுவா கன்னத்தில ரொம்ப மெதுவா தட்டி எழுப்பணுமாம். என்னன்னா மனுசன் தூங்குறப்ப ஆத்மாங்கறது ஒரு இடத்தில நிக்குமாம். மெதுவா நித்திரை கலைய உடம்பு முழுக்க பரவுமாம். தலையில இருந்து கால் வரை. திடுக்குன்னு எழுப்புனா ஒரு ஒழுங்கில்லாம கலைஞ்சு சில நேரம் உசுருக்கே ஆபத்தாயிடுமாம். தலை எது கால் எதுன்னு புரியாம டக்குனு எழுந்து நின்னா ஒரு குழப்பம் வரும்னு நம்ம பாட்டி சொல்லும். நம்ம வீட்ல அடி விழுறதுன்னா வயசு வித்யாசம் பாராம இதுக்குதான் விழும். விஞ்ஞானத்துக்கு ஒவ்வாம இருக்கலாம். ஆனா மருத்துவர் கூட இதத்தான் சொல்லுவாங்க. தடார்னு எழும்பாதீங்கன்னு.

/இந்தச் சுட்டியையும் ஒரு தடவை பார்த்திடுங்க!/

எதுக்கும் வெள்ள‌ச்சாமி ப‌ண்ணாதான் ந‌ம்மாளுங்க‌ ஒத்துப்பாங்க‌. இனிமேலாவ‌து இது மாதிரி சிந்திச்சி ம‌த‌ மாச்ச‌ரிய‌ம் போனா ந‌ல்லாருக்கும்.

எம்.எம்.அப்துல்லா said...

//மாப்பு
இதுக்குதான் டைவருக்கு
நம்மூரு மாதர காக்கி சட்ட, டவுசுரு கோடுக்கோணுங்கறது //

அப்பவும் நம்பாளு போலீசுக்கு பதிலா டைவர்கிட்ட பேட்டி எடுப்பான்

:)

இராகவன் நைஜிரியா said...

தலைக்கால்ப் புரியலை - அருமையான விளக்கம்.

உங்க நிறுவனம் வள்ர்ச்சியைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி. மேன் மேலும் வளர்ந்து, நீங்களும் வளர வாழ்த்துகள்.

குறும்பன் said...

நீங்க தலகால் புரியமா ஆடறது நியாமாதான் இருக்கு. :-))

"களவும் கற்று மற" அப்படின்னு சொல்லாறாங்களே அதோட உண்மையான பொருள் என்ன?

பழமைபேசி said...

@@சின்ன அம்மிணி

நன்றிங்க...

@@கதிர் - ஈரோடு
கீழ புதுகை அண்ணன் என்ன சொல்றார்னு பாருங்க மாப்பு!

@@வானம்பாடிகள்
நல்ல தகவலுங்க பாலாண்ணே!

@@எம்.எம்.அப்துல்லா
அண்ணே, நல்லா இருக்கீங்களா? வணக்கம்!

@@இராகவன் நைஜிரியா
நன்றிங்க ஐயா!

@@குறும்பன்
ஏற்கனவே இட்டாச்சுங்களே!

அரசூரான் said...

உலகலவில் ஏழு, பொது அளவில் பத்தொன்பது, தலமையிடங்கள் இருபத்தியைந்து...வெள்ளிவிழா எண்ணிக்கை.

வைரவிழவை எட்ட வாழ்த்துக்கள்.