8/05/2009

வலைச்சரத்தில் எழுதியது!

வணக்கங் கண்ணுகளா! நம்ம ஊர்ப் பழமையிகளைச் சித்த பாத்துட்டு, வலையில புதுசா எழுத வந்துருக்குற சனங்களைப் பாக்குலாஞ் செரியா?!

பாரு கண்ணூ, நான் ஒரு நாள் பொழுது விடிஞ்சதும் ஏழு மணி வண்டிக்கு நெகமம் போயி உரக் கடையில உரமும், பருத்திக் காட்டுக்கு சிம்புசு மருந்தும் வாங்குலாமுன்னு போயிட்டு இருந்தன். அப்ப வடக்காலூட்டு பாப்பாத்தி அக்கா, அங்க நின்னுட்டு இருந்த பூவாத்தக்கா கிட்டச் சொல்லுது,

பெத்தவ ஒரு
பாவமுஞ் செய்யுல;
ஆனாலும் பெத்த
புள்ளை இந்த
சின்ன வயசுலயே
செமக்குது புத்தக
பாரம்!

அதைக் கேட்டுட்டே ஊர் வாசலுக்குப் போயிச் சேரவுமு, கல்யாணி வண்டி வரவுமு செரியா இருந்தது. செஞ்சேரி மலையில இருந்தே வண்டி நெறய சனங்க தொங்கிகிட்டுத்தேன் வந்தாங்கலாமா கண்ணூ. நானுஞ் சேரின்ட்டு ஏறி கம்பியப் புடிச்சுட்டு நின்னுட்டேன். பக்கத்துல இருந்த சுண்ணாம்புக் காளவாய் கோயிந்தன் சொன்னான்,

எந்தத் தப்புஞ்
செய்யாம
நிக்கற தண்டனை
இந்த பேருந்துல!


என்றா கோயிந்தா, நெம்பத்தான் சலிச்சுக்குறன்னு அவனை ஒரு கேள்வி கேட்டுப் போட்டு, உள்ள நகுந்து போயி நின்னுட்டேன் நானு. வீதம்பட்டி மாரியாத்தா கோயில்ல வண்டி நிக்கவுமு, சனங்க உள்ள ஏறி வந்தாங்க. உள்ள ஏறி வந்ததுல இருந்த அந்த களையா இருக்குற அம்மணியப் பாத்துக் கோயிந்தன் சொன்னான், காஞ்ச கருவாட்டுக்கு ருசின்னா, கறுத்த கட்டைக்கு அழகு கழுத்துமணி! இதைக் கேட்ட அந்த அம்மணி சொல்லுச்சு, கழுத்துல இருக்குற மணி என்னவோ கறுப்புத்தான்! ஆனாக் கால்ல இருக்குறது வாகான பழைய செருப்பு!!

அதுக்கு மேலயும் கோயிந்தன் பேசுவான்னு நீங்க நினைக்குறீங்க?! இழுத்துச் சாத்திட்டு வந்தவன், சின்ன நெகமத்துலயே மொதல் ஆளா இறங்கி கண்ணு மூடி முழிக்கிறதுக்குள்ள மாயமாப் போயிட்டான்!


"அழுதிட்டு இருந்தாலும் உழுதிட்டு இரு!"

அடச்சீ... சும்மா இரு; மாத்திச் சொல்லாத! அதை இப்படிச் சொல்லோணும், "அழுதிட்டு இருந்தாலும் எழுதிட்டு இரு!
"

11 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

மணியண்ணே அழகாப் பழமபேசறீங்க

நம்ம அம்மணி செருப்பக் காட்டுனது கலக்கல்.. :)

நம்மூரு ஆடிக்காத்து வாங்குன மாதிரி இருக்கு :))

மதிபாலா said...

அன்பு நண்பருக்கு ஒரு விருது....!

http://www.mathibala.com/2009/08/200.html

மதிபாலா said...

அன்பு நண்பருக்கு ஒரு விருது....!

http://www.mathibala.com/2009/08/200.html

ஆரூரன் விசுவநாதன் said...

கொங்கு மண் வாசனையுடன் கூடிய எழுத்துக்கள் மிக அறிதாகவே வாசிப்பிற்கு கிடைக்கின்றன. நாகரீகம் என்ற பெயராலோ, வேறு ஏதோ காரணத்தாலோ, சிறு நகரங்களில் பல மாற்றங்களை காண முடிகிறது. ஸ்லாங் மாறாமல் பேசினாலும், பல பழமையான வார்த்தைகளை நம்மில் பலரும் இப்போழுது பயன்படுத்துவதில்ல. வாழ்த்துக்கள் மணி. தொடருங்கள்....

Karthikeyan G said...

Superuu!!

Joe said...

இந்த கருத்த கட்டைக மேல எல்லாப் பயலுவலுக்கும் ஒரு கண்ணு இருக்கத் தான் செய்யும் போல? ;-)

ஈரோடு கதிர் said...

மாப்பு...
கொஞ்சம் உள்குத்து இருந்தாலும் நீங்க சொல்ல வர கருத்த நச்..னு நளினமா சொல்லிடறீங்க

அது சரி(18185106603874041862) said...

//
அழுதிட்டு இருந்தாலும் எழுதிட்டு இரு
//

அதெல்லாம் நல்லா எழுதறவங்களுக்கு....எனக்கெல்லாம், நான் எழுதுறதை படிச்சிட்டு பல பேரு அழுதிட்டு இருக்காய்ங்களாம் :0))

பழமைபேசி said...

@@ச.செந்தில்வேலன்
@@மதிபாலா
@@ஆரூரன் விசுவநாதன்
@@Karthikeyan G
@@Joe
@@கதிர் - ஈரோடு
@@ Viji

நன்றிங்க அனைவருக்கும்!

//அது சரி said...
//
அழுதிட்டு இருந்தாலும் எழுதிட்டு இரு
//

அதெல்லாம் நல்லா எழுதறவங்களுக்கு....எனக்கெல்லாம், நான் எழுதுறதை படிச்சிட்டு பல பேரு அழுதிட்டு இருக்காய்ங்களாம் :0))
//

பின்னூட்டத் திலகம்ன்னா, அது நீங்கதான் அண்ணாச்சி!

சிநேகிதன் அக்பர் said...

அண்ணா உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் அன்புடன் பெற்றுக்கொள்ளவும்.
http://sinekithan.blogspot.com/2009/08/blog-post_05.html

Unknown said...

//.. அழுதிட்டு இருந்தாலும் உழுதிட்டு இரு!..//

எங்க போய் உழுறது..??
அழுத கண்ணீருல வேணும்னா உழுலாமுங்க..!!