8/30/2009

காணாமற் போனோர் தினம்!

ஆகசுடு 30 அன்று காணாமற் போனோர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காணாமல் போனோர் என்பது இன்று உலகளாவிய ரீதியில் ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மனிதாபிமானம் பற்றி, மனித உரிமைகள் பற்றி எத்தனை அமைப்புகள் செயற்பட்டாலும் கூட இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதுள்ளது.

காணாமற்போனோர் எனுமிடத்து இது ஒரு நாட்டிற்கு மாத்திரம், அல்லது ஒரு கண்டத்திற்கு மாத்திரம் உரித்தான பிரச்சினையாக எடுத்துக்கொள்ள முடியாது. இது உலகளாவியது. அதுவும் நம் தமிழினத்திற்கு நேர்ந்து கொண்டிருக்கிற அவலம் சொல்லி மாளாதது.

உலக அரங்கில் எடுத்துச் சொல்லி, செவிமடுக்கச் செய்ய தமிழனுக்கு இந்தியாவை விட்டால் ஆள் இல்லை. ஆனால், இந்தியாவோ இன்னும் இத்துப் போன தலைவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டும், அயல்நாட்டுக் கொள்கையில் தனக்குத் தானே சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டும் உள்ளது. அதுவும் தாவீது - கோலியாத் கதை போல, சுண்டைக் காய் இலங்கையிடம் மானம் மரியாதையை இழந்து வருகிறது.

எனவே இந்த காணாமற் போனோர் தினத்தில், காணாமல் போய் வரும் இந்தியாவின் மானத்திற்கும் நமது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வோம். இந்த காணாமற் போனோர் தினம் என்பது பற்றிய
மேலதிகத் தகவலுக்கு இந்தச் சுட்டியைச் சொடுக்கவும்.

மேலும் காணாமற்போன கீழ்க்கண்ட பதிவர்களையும் இந்த நாளில் நினைவு கூர்ந்து, அவர்கள் எப்படியாவது பதிவுலகிற்கு மீட்டிட சபதம் ஏற்றிடுவோம்.

வடஅமெரிக்க வலைஞர் தளபதி நசரேயன்
உருப்புடாதது_அணிமா
'பார்வையில்' இராஜ நடராஜன்
வசந்த் கதிரவன்
கபீஷ்
ஆட்காட்டி அண்ணன்
S.R.ராஜசேகரன்
மன்மதக்குஞ்சு
தீரன்
Natty
கூடுதுறை

11 comments:

பழமைபேசி said...

பெருசு அண்ணே, அந்த தொண்டுமுட்டிக்கு அர்த்தம்?

vasu balaji said...

/அதுவும் தாவீது - கோலியாத் கதை போல, சுண்டைக் காய் இலங்கையிடம் மானம் மரியாதையை இழந்து வருகிறது.

எனவே இந்த காணாமற் போனோர் தினத்தில், காணாமல் போய் வரும் இந்தியாவின் மானத்திற்கும் நமது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வோம். /

இருக்கிற கொல வெறில இப்புடின்னு தெரிஞ்சா வருத்தமே இல்லாம நம்மள காணாம அடிச்சிடுவானுங்க பழமை.

/மேலும் காணாமற்போன கீழ்க்கண்ட பதிவர்களையும் இந்த நாளில் நினைவு கூர்ந்து, அவர்கள் எப்படியாவது பதிவுலகிற்கு மீட்டிட சபதம் ஏற்றிடுவோம்.//

இத்தாஞ்செரி.

Mahesh said...

இப்பிடி ஒரு தினம் இருக்கறது புதிய செய்தி... நன்றி....

இராகவன் நைஜிரியா said...

ஆமாங்க அய்யா... நீங்க சொன்ன பதிவர்களில் நண்பர் அணிமா வேலை ரொம்ப அதிகமாகிவிட்டதால், வர இயலவில்லை என்று தெரிவித்தார்.

விரைவில் வந்துவிடுவார் என்று நம்புவோமாக..

இராகவன் நைஜிரியா said...

// Mahesh said...

இப்பிடி ஒரு தினம் இருக்கறது புதிய செய்தி... நன்றி.... //

ஆமாம் எனக்கும் இது புதியச் செய்திதான்..

நன்றி.

Anonymous said...

நாங்கூட நெனச்சேன். தளபதிய ஆளக்காணோமேன்னு. இந்தியாக்கு வந்துடாரா?

பெருசு said...

//பெருசு அண்ணே, அந்த தொண்டுமுட்டிக்கு அர்த்தம்?//

நானு உங்களைய கேட்டா,நீங்க என்னியக் கேக்குறீங்க.

பழமைபேசி said...

//பெருசு said...
//பெருசு அண்ணே, அந்த தொண்டுமுட்டிக்கு அர்த்தம்?//

நானு உங்களைய கேட்டா,நீங்க என்னியக் கேக்குறீங்க.
//

தொண்டு என்றால் முறையற்ற உறவு கொள்பவர் என்பது பொருள்.

மேலும் சினையான கால்நடைகளை துன்புறுத்தாமல் இருக்கும் பொருட்டு, ஆண் கால்நடைகளுக்கு காலில் இடும் ஒரு வகையான முட்டியே தொண்டு முட்டி!! இஃகிஃகி!!!

பழமைபேசி said...

@@வானம்பாடிகள்

ஆமாங்க பாலாண்ணே!

//Mahesh said...
இப்பிடி ஒரு தினம் இருக்கறது புதிய செய்தி... நன்றி....
//

இஃகி, எதோ நம்மால ஆனது....

//இராகவன் நைஜிரியா said...
ஆமாங்க அய்யா... நீங்க சொன்ன பதிவர்களில் நண்பர் அணிமா வேலை ரொம்ப அதிகமாகிவிட்டதால், வர இயலவில்லை என்று தெரிவித்தார்.

விரைவில் வந்துவிடுவார் என்று நம்புவோமாக..
//

கண்டுபுடிச்சிக் கொண்டாந்து நிறுத்துங்க ஐயா!!

//சின்ன அம்மிணி said...
நாங்கூட நெனச்சேன். தளபதிய ஆளக்காணோமேன்னு. இந்தியாக்கு வந்துடாரா?
//

இங்கதாங்க, நியூயார்க் ரயிலடிப் பாலத்துக்கடியில பட்சி பார்த்துட்டு இருக்குறதா காத்து வாக்குல ஒரு சேதி!

ஈரோடு கதிர் said...

தங்கமணிகள கண்ணாலம் பண்ணி காணாம போன ரங்கமணிகளையும் சேர்த்துக்குங்க மாப்ள

ஆ.ஞானசேகரன் said...

///சுண்டைக் காய் இலங்கையிடம் மானம் மரியாதையை இழந்து வருகிறது.///
உண்மையை பட்டுன்னு சொல்லிபுட்டீங்க நண்பா